>> Wednesday, August 4, 2010

யானைகள் ஆசிவழங்கத் தடை


தஞ்சை பெரிய கோயிலில் யானையிடம் ஆசி பெரும் பக்தர்
யானைகளிடம் ஆசி வாங்கிக் கொள்வதை தமது வழிபாட்டின் ஒரு பகுதியாகவே பக்தர்கள் சிலர் கருதினாலும், இம்முறையால் யானைகளின் உடல் நலத்துக்கு கேடு வருகிறது என்று தமிழக வனத் துறை கூறுகிறது.
யானைகளின் நலனைக் காப்பதற்காக இப்பழக்கத்தை நிறுத்துமாறு வனத்துறை கோரியுள்ளது.

யானைகள் தமது துதிக்கையை பக்தர்களின் தலை மீது வைத்து ஆசி வழங்குவதால் யானைகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாகவும் - அதனால் இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழகத் தலமை வன உயிர் காப்பாளர் காப்பாளர் ஆர்.சுந்தர்ராஜு, கோயில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலைத் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கோயில்களில் இருந்த நான்கைந்து யானைகள் காச நோய் காரணமாக இறந்து போயுள்ளதாகவும், நோய் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சில கோயில்களில் நாள்தொரும் 500 முதல் 600 பக்தர்களின் தலைகளை தனது துதிக்கையால் தொட்டு யானைகள் ஆசி வழங்குகிறது என்றும் இப்படி செய்யும் போது அவர்களின் தலையில் உள்ள பேன், ஈறு மற்றும் பிற கிருமிகளை யானை தனது மூச்சோடு உள்ளிழுத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் ஆர் சுந்தர்ராஜூ கூறினார்.

இந் நிலையில் தமிழக வன்துறையின் ஆலோசனையை விரைவில் நிறைவேற்ற முயல்வோம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சம்பத் தெரிவித்தார். இந்த முடிவுக்கு பின் உள்ள காரணங்களை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

யானைகள் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன

எதிர்ப்பு

ஆனால் இது போன்ற முடிவுகளை பக்தர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது என்று இந்து முன்னணியின் இராம கோபாலன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழகத்தின் கோயில்களில் தற்போது 56 யானைகள் இருக்கின்றன. கேரளக் கோயில்களில் பல நூற்றாண்டுகளாகவே யானைகள் வளர்க்கப்படுகின்றன. சமீபத்தில் அங்கே கோயில் யானைகள் பக்தர்களை தாக்கி கொன்ற சம்வங்கள் அதிகரித்ததன் காரணமாக கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக ஆசிய யானைகள் குறித்த முன்னணி நிபுணரான இராமன் சுகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனைகளை அம்மாநில அரசு பெற்றது.

கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்ட யானைகளை கோயில்களில் தனித்தனியாக பிரித்து வளர்ப்பது தவறு என பல வன உயிர் ஆர்வலர்களும், நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter