>> Thursday, September 30, 2010




பெண் புலிகளுக்கு வேலை வாய்ப்புகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சில நடவடிக்கைகள் இலங்கையில் வடபகுதியில் இடம் பெற்றுள்ளன. புனர்வாழ்வு பெற்றுள்ளவர்ககு இப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்



புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் சுமார் 12 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தம்மிடமுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்து இந்த பெண்களுக்கு விளக்கியுள்ளனர்.

இதேவேளை, அரச அதிகாரிகளும் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தொழிற் சட்டங்கள், நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கவேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்குள்ள இளம் பெண்களுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.


வேலை வாய்ப்புகளை எதிர் நோக்கும் முன்னாள் பெண் போராளிகள்



புனர்வாழ்வுப் பயிற்சி பெறுகின்ற இளம்பெண்கள் அங்கிருந்து விடுதலையாகிச் சென்றதும் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்றாலும் தமது தகுதிக்கேற்ற தொழில்கள் தேவை என்றும், தமது சொந்த மாவட்டங்களிலேயே இந்தத் தொழில் கிடைப்பதையே அதிகம் தாங்கள் விரும்புவதாகவும் தமிழோசை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இவர்கள் முன்னர் இணைந்திருந்த போதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கம் அவர்களுக்குத் தொழிற் பயிற்சி வழங்கி, புனர்வாழ்வளித்திருப்பதனால் அவர்களை தமது நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

Read more...


போட்டிகளில் ஊழல்-நீதிமன்றம் கண்டிப்பு

டெல்லியில் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய உச்சநீதிமன்றம், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இத்திட்டத்துக்குச் செலவிடப்படும் நிலையில், நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

புதுடில்லிப் போட்டிகளில் ஊழல்-உச்சநீதிமன்றம் கண்டனம்



காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா நடக்கும் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் அருகே அமைக்கப்பட்டு வந்த நடை மேம்பாலம் கடந்த வாரம் சரிந்து விழுந்தது பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த நாட்டில் வேலையே செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யப்டுகிறது. புதிய பாலம் கட்டப்பட்டால், அது சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுகிறது. பெருமளவில் ஊழல் நடக்கிறது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் போட்டி முடியும் வரை, அதாவது அக்டோபர் 15-ம் தேதி வரை காமன்வெல்த் என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும். அதன்பிறகு அது தனிப் பயன்பாட்டுக்காக மாறிவிடும் என்று நீதிபதிகள் கேலியாகக் குறிப்பிட்டார்கள்.

டெல்லியில் நாடாளுமன்றச் சாலையில், ஜந்தர் மந்தர் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம் உள்ளது.

அதைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு கட்டடங்களை அனுமதிக்கக் கூடாது என்பது விதிமுறை. அதை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்துவது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடந்தபோது, நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தது.

ஜந்தர் மந்தர் அருகே, 100 மீட்டர் சுற்றளவுக்குள் புதுடெல்லி மாநகராட்சிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், அதுதொடர்பாக விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அது கட்டப்பட்டதாகவும், அதுதொடர்பாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்கள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் மாநகராட்சிக் கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில்தான் நீதிபதிகள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உங்களுக்கு வரலாற்றின் மீதும் சட்டத்தின் மீதும் மரியாதை கிடையாது. நியாயம், நேர்மை இல்லாத அரசாக உள்ளது. பணம் மட்டும்தான் அவர்களுக்கு முக்கியம். ஜந்தர் மந்தரைக் கூட ஹோட்டலாகவோ அல்லது வணிகவளாகமாகவோ ஏன் மாற்றக் கூடாது. அப்போது, இந்தியா ஒளிரும் இல்லையா என்று நீதிபதிகள் காட்டமாகக் கேட்டார்கள்.

Read more...

>> Tuesday, September 28, 2010



தொலை இயக்கி மருத்துவக் கருவிகள்




மருத்துவ ரீதியில் பயன்படுத்தவல்ல தொலை-இயக்கிக் கருவிகளில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த கண்காட்சி ஒன்றில், மருத்துவ உபகரண உற்பத்தித் தொழில்துறையினர் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த வகையான நடமாடும் கருவிகளால் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதாவது நோயாளி மருத்துவரிடம் செல்லும்போதுதான் என்றில்லாமல், அவர் எங்கிருந்தாலும் அவருடய உடல்நிலையை கண்காணிக்க முடியும்.

இந்தக் கருவிகளின் துணை கொண்டு மிகுந்த பலன் தரும் வகையில் நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்க முடியும் என்றும், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறையும் என்றும் ''பாடி கம்ப்யூட்டிங்'' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாடில் கலந்துகொண்டிருந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் செண்டர் ஃபார் பாடி கம்ப்யூட்டிங் என்ற புதிய மையத்தில் இந்த மாநாடு நடந்தது. நோயாளிக்கு வழங்கக்கூடிய பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஏராளமான புதிய கருவிகளில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. கையில் எடுத்துச் செல்லத்தக்க சிறிய சென்சார் கருவிகள், நவீன செல்லிட தொலைபேசிகள், உடலின் உள்ளே பொருத்தக்கூடிய சிறு கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு மருத்துவர் தன்னிடம் வருகின்ற நோயாளியின் உடல்நிலையை நாள் முழுக்க கண்காணிக்கின்ற தொழில்நுட்பத்தைப் பெற முடியும் என்று இந்த மையத்தின் செயல் இயக்குநரான இருதய நல மருத்துவ நிபுணர் டாக்டர் லெஸ்லீ சாக்ஸன் விளக்கினார்.



உடல்நிலையை கண்காணிக்கும் இந்தக் கருவிகள் தற்போது நவீன செல்லிட தொலைபேசிகளிலேயே அமைந்திருப்பதுபோல் வந்துவிட்டன. நோயாளியின் இருதயத் துடிப்பை அளந்து செல்லிட தொலைபேசி வலையமைப்பு மூலம் அந்தத் தகவலை இவை மருத்துவருக்கு அனுப்புகின்றன.

நோயாளி ஒருவர் அல்லது முதியவர் ஒருவரின் வீட்டை கம்பியில்லா தகவல் பரிமாறவல்ல இப்படியான உபகரணங்கள் மூலம் காண்காணிக்கின்ற தொழில்நுட்பமும் இந்த மாநாட்டில் காண்பிக்கப்பட்டது. சென்சார் கருவிகள் விசேட கணினி மென்பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் வீட்டில், ஒரு குளிர்சாதனப் பெட்டியை அவர் திறந்தாலோ அல்லது அவர் வழமையாக உட்காரக்கூடிய நாற்காலியில் அவர் உட்கார்ந்தாலோ, எழுந்தாலோ, படுக்கையில் படுத்தாலோ அது பற்றி தொலைவில் இருந்தபடியே தகவல் அறிய முடியும்.

இருதயத் துடிப்பு போன்ற விஷயங்களை அளக்கவல்ல உடலில் பொருத்தக்கூடிய மலிவு விலையிலான சிறு கருவி ஒன்றை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறதாம். அந்தக் கருவியை உடலில் பச்சை குத்துவதுபோல செய்து பொருத்திக் கொண்டால், அது அந்நபருடைய உடல் நிலை பற்றிய தகவலை இணையத்திலேயேகூட பரிமாறுமாம்.

Read more...


ஆரையம்பதி வீடமைப்புக்கு எதிர்ப்பு


வீடமைக்கும் பணி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்காக ஈரான் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டமொன்றுக்கு அப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான தமிழர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்காக ஈரானின் உதவியுடன் 70 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே தமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் காரணமாக தமிழ் கிராமங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆரையம்பதி பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளரான சோ.மகேந்திரலிங்கம், இந்த வீடமைப்புத் திட்டம் அமைவதாலும் இந்த நிலை தமக்கு ஏற்படும் என்று கூறுகின்றார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக வீடுகள் அமைக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் அவர்களது சொந்தக் காணிகளில் அவை அமைக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் தெரிவித்த அவர், இந்த வீடமைப்புத் திட்டத்துக்காக தமிழர்களின் காணிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார்.

தமிழர்களின் காணிகளில் இந்த வீடுகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொந்தமான மற்றும் பள்ளிவாசலுக்குரிய காணிகளிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகவும் கூறுகின்றார்.

இது தொடர்பாக அந்தப் பிரதேசத்திலுள்ள தமிழர்கள் மத்தியில் நிலவிய சந்தேகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டிய கூட்டமொன்றில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழர்களுக்கும் ஒரு தொகை வீடுகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் "வீடமைப்பு திட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரு சாரார் இதனை நிறுத்தக் கோருவது கவலைக்குரியது. அப்படி நிறுத்தும் பட்சத்தில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன்னமும் இன நல்லுறவு ஏற்படவில்லை என்ற தோற்றம் வெளிப்படும். இதற்கு இடமளிக்காத வகையில் நிர்வாக ரீதியில் தீர்வு காணுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன் "என்றார்.

Read more...




போட்டியை ஆரம்பித்து வைப்பது யார்?


போட்டிகளுக்கான சின்னம்
இந்தியத் தலைநகர் டில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை யார் தொடக்கி வைப்பது என்பது குறித்து இப்போது ஒரு புதிய சர்ச்சை விளையாட்டு வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
இப்போட்டிகளை யார் ஆரம்பித்து வைப்பது என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று இந்திய குடியரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.

ஆனால், இங்கே, லண்டனில் இளவரசர் சார்ள்ஸின் அலுவலகமோ, ''பிரிட்டிஷ் இராணியின் பிரதிநிதி என்ற வகையில் இளவரசரே விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்துவைப்பார்'' என்று கூறுகிறது.


பிரதீபா பாட்டில்
காமன்வெல்த் நாடுகளின் தலைவி என்ற வகையில் வழமையாக இராணியார்தான் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைப்பது வழக்கம். ஆனால், அவர் இந்த வருடம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகவும் வேலைப்பழுவுடன் இருப்பதாக பங்கிங்ஹாம் மாளிகை கூறுகிறது.

டில்லி விளையாட்டு போட்டிகளின் ஏற்பாட்டாளர்களோ இந்திய குடியரசுத் தலைவர்தான் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இராஜதந்திர நெறிமுறைகளின்படி இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்தான் நிகழ்வை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று பெயரை வெளியிடாத ஒரு இந்திய அரசாங்க அதிகாரியை ஆதாரம் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அப்படியான முடிவு எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று இந்திய குடியரசுத் தலைவரின், செயலரான அர்ச்சனா தத்தா திங்களன்று கூறியுள்ளார்.


இராணியாரும், இளவரசர் சார்ள்ஸும்
ஆனால், இளவரசர் சார்ள்சின் அலுவலகமான கிளரன்ஸ் ஹவுஸ், ''இது ஒரு பிரச்சினையே அல்ல, ஆரம்ப வைபவத்தில் இளவசரரும், இந்திய குடியரசுத் தலைவரும் முக்கிய பங்கெடுப்பார்கள்'' என்று கூறியுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்ளுமாறு இளவரசரை, எலிசபெத் இராணியார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு நிகழ்வெல்லாம் எப்படி நடக்கும் என்பதை நாம் முற்றாக நிர்ணயிக்க முடியாவிட்டாலும், விளையாட்டு ஜோதிக்கான இராணியின் செய்தியை இளவரசர் படித்து, இறுதியில், போட்டிகள் ஆரம்பமாவதாக அறிவிப்பார்.

பக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே கடந்த ஒக்டோபரில் ஒரு நிகழ்வில், பிரதீபா பாட்டிலும், இராணியாரும் இணைந்து விளையாட்டு ஜோதியை ஏற்றிவைத்தார்கள்.

காமன்வெல்த் நாடுகளெங்கும் இந்த ஜோதி பயணித்து ஆரம்பவைபவத்துக்காக ஞாயிறன்று டில்லி சென்றடையும்.

Read more...



புலிகள் தடுப்பு: ஐ.சி.ஜே கவலை


விடுதலைப்புலிகள்
ஜெனீவாவிலிருந்து இயங்கும், சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம், ஐ.சி.ஜே, இலங்கையில் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற முறை சர்வதேச சட்டம் மற்றும் தரவுகளை ஒத்திருக்கவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை அரசு கடந்த ஆண்டு போர் முடிவடைந்த காலகட்டத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் இன்னும் சுமார் 8,000 பேர் வரை தடுத்துவைத்திருக்கின்றது.

இந்தத் தடுப்பு முகாம்களை உலகிலேயே பெரிய அளவிலான, நிர்வாகமே செய்யும் தடுப்புக்காவல் என்று வர்ணிக்கும் இந்த அமைப்பு, இந்தth தடுப்புக்காவல் சுதந்திரத்துக்கான உரிமை, நியாமான விசாரணைக்கான மற்றும் நியாயமான சட்டரீதியான வழிமுறையை அவர்களுக்கு வழங்குவது போன்றவைகளையும் மறுக்கிறது என்று கூறியுள்ளது.

''போர் முடிந்த நிலையில், களத்தில் இருக்கும் நிலைமைகள் நாட்டின் இருப்புக்கு ஒரு அச்சுறுத்தலைத் தருவதாக கருதமுடியாது; எனவே இலங்கையில் அவசரநிலையை இன்னும் அமலில் வைத்திருப்பதை சர்வதேச அளவுகோல்களின்படி நியாயப்படுத்த முடியாது'' என்றும் அது குறிப்பிடுகிறது.



தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் போராளிகளும், சரணடைந்தவர்களும், ஒரு சட்டரீதியான கருஞ்சூன்யத்தை எதிர்நோக்குவதாகக் கூறும் இந்த அமைப்பு, இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படவேண்டும் என்று கூறுகிறது.

இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சர்வதேச உதவி தரப்பட்டால், அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச சமூகமும் ஒத்திசைவாகச் செல்லும் ஆபத்தை ஏற்பduத்தும் என்று இந்த அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் இவ்வாறான தடுப்புக்காவல் கைதுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, இந்த சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், நிர்வாகத்தால் தடுத்துவைக்கப்படுவது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் , விசாரணையில்லாத தண்டனை என்றும் வர்ணிக்கிறது.

அவர்கள் செய்ததாகக் கூறப்படும் இந்தக் கிரிமினல் குற்றங்களுக்காக இவ்வாறு மறைமுகமாக விதிக்கபபடும் தடுப்புக்காவல் தண்டனையைத் தவிர, விசாரணைகள் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடங்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டாவது முறையும் மற்றுமொரு தண்டனையும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

பரிந்துரைகள்

இலங்கை அரசு அவசரகால சட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவது, புனர்வாழ்வுக்கான விதிமுறைகளை வகுப்பது, சண்டையில் ஈடுபட்டவர்களை முறையாக குற்றம்சாட்டி வழக்குத் தொடுப்பது அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களை மறு பரிசீலனை செய்து, அதில் சர்வதேச சட்டத்துக்கு ஒவ்வாத பிரிவுகளை சீர்திருத்துவது அல்லது விலக்கிக்கொள்வது ஆகியவைகளைச் செய்யவேண்டும் என்று இந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேலும் சிறார்கள் இந்த தடுப்புக்காவல் முகாம்களில் தடுத்துவைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது.

ஐ.நா மன்றமும், இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளும், இந்த விடயத்தில், சர்வதேச சட்டம் மற்றும் தரவுகளை ஒத்த இலங்கைக்கான சட்ட வடிவமைப்பு ஒன்றை உருவாக்க தொழில் நுட்ப உதவியை வழங்க வேண்டும், ஐ.நா மன்றம் இந்தச் சட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படும் வரை, இந்த முகாம்களுக்குள், இலங்கை அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும், ஆதரிக்கக் கூடாது என்றும் இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

Read more...

>> Friday, September 24, 2010



காமன்வெல்த்: தொடரும் குளறுபடிகள்


விளையாட்டு வீரர்களுக்கான குளியலறை

இந்தியாவில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி துவங்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான குளறுபடிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இறுதி நேர சிக்கல்களுக்குத் தீ்ர்வு காண, பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், 71 நாடுகளில் இருந்து கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், போட்டி ஏற்பாடுகள் தொடர்பில், குறிப்பாக வீரர்கள் தங்கவிருக்கும் குடியிருப்புக்கள் இன்னும் முழுமையாகத் தயாராகாமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது குறித்து காமன்வெல்த் சம்மேளனம் கடும் ஏமாற்றமடைந்துள்ளது.

அந்த குடியிருப்புக்களில் பிபிசி எடுத்த புகைப்படங்களில், குளியலறைகள், கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதைக் காண முடிகிறது. படிக்கட்டுகளில் கூட எச்சில்கள் துப்பப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வீரர்கள் உறங்கும் படுக்கைகளில், நாய்களின் கால் தடங்கள் தெளிவாகப் பதி்ந்துள்ளன.


விளையாட்டு வீரர்களுக்கான படுக்கையில் நாய்களின் கால்தடங்கள்


உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தியுள்ள சம்மேளனத் தலைவர் மைக் ஃபெனல், வியாழக்கிழமை மாலை டெல்லி வந்து சேர்ந்தார். இந்தப் போட்டிகள் இந்தியாவுக்கு அவமானத்தைத் தேடித் தரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில், மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் குடியிருப்பு்க்களைத் தூய்மைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

நியுஸிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்கள் வருகைகளைத் தாமதப்படுத்தியுள்ளன. தூய்மை மற்றும் சுகாதாரம் உறுதிப்படுத்தப்படும் வரை தாங்கள் காத்திரு்கக முடிவு செய்துள்ளதாக அந்த அணிகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, அடுத்த 48 மணி நேரத்தில் எல்லாப் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, வரும் சனிக்கிழமை காலைக்குள் விளையாட்டு அரங்கங்கள், வீரர்களின் குடியிருப்புக்கள் உள்பட அனைத்து இடங்களிலும் பணிகளை முடித்து, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார். அப்போதுதான், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Monday, September 20, 2010


குத்துச்சண்டை வீராங்கனை சாதனை


குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மேரி கோம் (ஆவணம்)
இந்தியாவைச் சேர்ந்த எம்.சி.மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
சனிக்கிழமை பார்படோஸில் நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் இவர் ரோமானியாவைச் சேர்ந்த ஸ்ட்லுட் டுடாவை வெற்றி கொண்டார்.

பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில்
கலந்து கொண்டு அனைத்து 6 போட்டிகளிலும் பதக்கத்தை வென்ற ஒரே வீராங்கனை இவராவார்.

இதற்கு முன்னர் 46 கிலோ பிரிவிலேயே மேரி கோம் அனைத்து பதக்கங்களையும் வென்று இருந்தார். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 48 கிலோ பிரிவிலும் மேரி கோம் பதக்கத்தை வென்றுள்ளார்.

தன்னுடைய வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த மேரி கோம், தனது கணவர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும், 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கத்தை வெல்ல முயற்சிக்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு கொடுக்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுனை இவர் 2009 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...


கவலையளிக்கும் காமன்வெல்த் போட்டிகள்


காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள்
இந்திய தலைநகர் புது தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில், போட்டியின் ஏற்பாடுகள் பற்றிய கவலைகள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன.
அனைத்து விளையாட்டு அரங்கங்களும் முழுமையான தயாராகாத நிலையில் உள்ளதாக விளையாட்டு மற்றும் சமூக துறை ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

போட்டிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போது, திடீரென கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுகளும் ஏற்பாடுகளின் தாமதத்திற்கு காரணம் எனக்கூறப்படுகின்றது.

போட்டிகளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நவீனப்படுத்தல் நடவடிக்கைகளின் தரம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எதிர்பாராத மழை உள்ளிட்ட இயற்கை காரணங்களே போட்டி ஏற்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் போட்டிகள் ஆரம்பிக்கும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு முன்பதாகவே அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துவிடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Read more...

Read more...


கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர்


கிளிநொச்சி மக்கள்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய்,
இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட் கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...


தில்லியில் சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டனர்


ஜமா மஸ்ஜித் பள்ளிவாசல்
இந்தியத் தலைநகர் தில்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்கியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் தாய்வானிலிருந்து வந்திருந்த இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் காயடைந்துள்ளனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தில்லியின் பிரபலப் பள்ளிவாசலான ஜமா மஸ்ஜித்தின் வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் இன்னும் இரண்டே வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது, போட்டிகள் தொடர்பான பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என தில்லியின் முதலமைச்சர் ஷீலா தீட்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

>> Friday, September 17, 2010


மீள்குடியேற்றம்: முன்னேற்றமும், பிரச்சினைகளும்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு கிழக்குப்பகுதியில் நடைபெற்றுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூன், சில விடயங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பல பிரச்சினைகள் இன்னமும் அங்கே தொடர்வதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிந்தியான நீல் பூனேயும், உயர்மட்டக் குழு ஒன்றும், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டு வியாழனன்று மாலை கொழும்பு திரும்பினர்.


ஐநா பிரதிநிதி நீல் பூன்

இந்த விஜயம் குறித்து நீல் பூன் தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில், போருக்கு பின்னரான காலத்தில் கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நிலைமைகள் எப்படியுள்ளன என்பதை பார்ப்பதற்காகவே தாங்கள் கிழக்குமாகாணத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து தற்போது அங்கு திரும்பியுள்ளவர்களின் நிலைமைகளைப் பொறுத்தவரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கிராம மக்களின் நிலமைகள் என்பவை அவர்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இவர்களில் பலர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் அவர்கள் இன்னமும் பல சவால் களை எதிர் கொள்வதாகவும், பல தொலைதூரப் பகுதி கிராமங் களில் இருந்த மக்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட தாகவும் நீல் பூன் தெரிவித்தார்.

விவசாயத்தின் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு உடனடி முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அந்த பகுதி மக்கள் வசிப்பதற்கு தரமான வீடு களை கட்டித்தருவது, அந்த பகுதியின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் நீல் பூன் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Read more...


நியமனத்தை நிராகரித்த ததேகூ

இலங்கையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஆயினும் இந்த நியமனத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று நிராகரித்திருக்கின்றது.
18 ஆவது அரசியலமைப்புச் சட்டமானது, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கின்றது. அத்துடன் தேர்தல் ஆணையாளர், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச் சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொறுப்பாக இருந்து வந்த அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபை என்ற சபையை நியமிப்பதற்கு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் வழி வகுத்திருக்கின்றது.


ததேகூ சுமந்திரன்

இந்தப் பாராளுமன்றச் சபையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். அத்துடன் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் தமக்கு விருப்பமான தமது இனமல்லாத வேறு இனக்குழுமத்தைச் சேர்ந்த இரண்டுபேரை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற இருவர் உட்பட 5 பேர் கொண்டதாக இந்தப் பாராளுமன்றச்சபை இருக்கும். இந்தச் சபையே நீதிச் சேவை, பொதுச்சேவை, காவல்துறை, தேர்தல் ஆணையகம், மனித உரிமைகள் போன்ற துறைகளுக்கான ஆணையாளர்களையும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பெயர்களையும் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

இவ்வாறு சிபாரிசு செய்யப்படுகின்றவர்களை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் 18 ஆவது அரதசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இல்லை

இந்த அடிப்படையிலேயே பாராளுமன்றச் சபை உறுப்பினராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்க்கட்சித் தihலவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனத்தை நிராகரித்துள்ளது தொடர்பாக பிபிசிக்குக் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே இந்த நியமனத்தைத் தானும் தமது கட்சியும் நிராகரித்துள்ளதாகக் கூறினார்.

Read more...


"தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டுவிட்டது"

இலங்கையில் விசாரணை இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டு விட்டதாக இலங்கையின் மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலை கோரும் உறவினர்கள்

இலங்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், பல்லாயிரக் கணக்கான சிறுபான்மைத் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, இலங்கையின் ஓய்வு பெற்ற மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் பலர், பல ஆண்டுகளாக இவ்வாறு அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து ஆராயும், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்தகைய போர் ஒன்று இலங்கையில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் இந்த ஆணைக்குழு ஆராய்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் தமிழ் இளைஞர்களாவது இவ்வாறு பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் முன்னாள் தூதரான நந்தா கொடகே அந்த ஆணைக்குழுவின் முன்பாக கூறினார்.

இவர்களைவிட பல்லாயிரக்கணக்கானவர்கள், கடந்த ஆண்டு போர் முடிந்தது முதல் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீதித்துறை அவர்களை கைவிட்டு விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இவர்களை இந்த மாதிரி தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு அது வழி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம், சுமார் 500 இளைஞர்கள் கொழும்பு வெலிக்கட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தான் மிகுந்த ''ஆத்திரம்'' கொண்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் ஒப்புக்கொள்கிற போதிலும், அந்த இளைஞர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நந்தா கொடகே கூறினார்.

தான் பிரிட்டனில் இருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஒரு தமிழ் பொறியியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருக்கும் பலர் இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து அவர் பல தடவைகள் வலியுறுத்தியும், ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நந்தா கொடகே கூறினார்.

சில உயர் அதிகாரிகள் இந்த கைதிகள் குறித்து அனுதாபத்துடன் இருக்கின்ற போதிலும், சிக்கலான அதிகாரவர்க்கக் கட்டமைப்பு காரணமாக அந்தக் கைதிகள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் அந்த ஓய்வுபெற்ற இராஜதந்திரி கூறினார்.

முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை.

மிகவும் மூத்த உறுப்பினரான கேபி என்று அழைக்கப்படுபவர், பெயரளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்.

மற்றுமொரு மூத்த உறுப்பினரான தயா மாஸ்டர்- தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிலையத்தை நடத்துவதற்கு தான் உதவிக்கொண்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

Read more...

>> Thursday, September 16, 2010



யாழ் கூட்டம்:த.தே.கூ பங்கேற்பு
இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கையின் முக்கிய அமைச்சராகிய பசில் ராஜபக்ச அவர்களது தலைமையில் நடைபெற்ற முக்கிய உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதற் தடவையாக இன்று கலந்து கொண்டார்கள்.
அரச அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்க வேண்டும் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே தாங்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தகைய கூட்டங்களில் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி, இது ஒரு புதிய விடயமல்ல என குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தின் காங்கேசன்துறையின் மேற்குப் பக்கம், கட்டுவன், கீரிமலை, தொண்டமனாறு ஆகிய பகுதிகளில் அடுத்த வாரம் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இன்றைய கூட்டத்தில் தமக்கு உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ்.சரவணபவன், எஸ்.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டார்கள்.

Read more...




காசநோய்க்கு துரித பரிசோதனை
காச நோயின் பாதிப்பு
ஒருவரது உடலில் காசநோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா இருப்பதை ஒரே மணி நேரத்தில் கண்டறியக்கூடிய புதிய விசேட பரிசோதனை ஒன்றை தாம் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காசநோயை உண்டாக்கக்கூடிய அனைத்து வகை பாக்டீரியாவையும் இந்தப் பரிசோதனை கண்டுபிடித்துவிடும் என்று இதனை உருவாக்கியுள்ள ஹெல்த் புரொட்டெக்ஷன் ஏஜென்ஸி என்ற அமைப்பும் அதன் ஆராய்ச்சியாளர்ககளும் தெரிவிக்கின்றனர்.

காசநோயை உண்டாக்ககூடிய பாக்டீரியாவானது மனிதர்களிலே குடிகொண்டிருக்கத்தான் செய்கிறது என்றாலும் இந்த பாக்டீரியாவை உடலில் பெற்றுள்ளவர்களிலே ஐந்து முதல் பத்து சதவீதம் வரையிலானோருக்குத்தான் இது நோயாக உருவெடுக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் உலகில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த நோய் பலிகொண்டு வருகிறது.


இதுகாலம் வரையில் ஒருவர் உடலில் அந்த பாக்டீரியா இருப்பதை கண்டறிய எட்டு வார காலம் வரையில் அவகாசம் தேவைப்பட்டது. அந்த காலப் பகுதியில் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு, ஏன் மற்ற கண்டங்களுக்கேகூட பரவிவிடுகின்ற ஆபத்து உள்ளது. ஆனால் தற்போது பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பரிசோதனையானது பாக்டீரியாவை மிக வேகமாகக் கண்டறிந்துவிடுகின்றது. அனைத்து வகை காசநோய் பாக்டீரியாவுக்கும் பொதுவான ஒரு மரபணு அடையாளத்தை இனம்காணுவதன் மூலம் இந்த பரிசோதனை செயல்படுகிறது.

பரிசோதனைக்கூடத்துக்கு சென்று கொஞ்ச நேரம் காத்திருந்து முடிவை தெரிந்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு இப்பரிசோதனையில் துரிதமாக முடிவு தெரிந்துவிடும் என்று ஹெல்த் புரொட்டெக்ஷன் ஏஜென்ஸியின் டாக்டர் கேத் அர்னால்ட் கூறினார்.


2008ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 13 லட்சம் பேர் காசநோயால் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார கழகம் மதிப்பிட்டுள்ளது.

மேற்குலகத்திலும் காசநோய் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரியும் நிலையில், இந்த புதிய பரிசோதனை முறைகள் வெளிவந்ததுள்ளன.

Read more...




காஷ்மீர் செல்கிறது அனைத்துக் கட்சிக்குழு


காஷ்மீரில் பதற்ற நிலை நீடிக்கிறது
இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்புவதற்கு இந்தியாவின் மத்திய அரசு முடிவேடுத்துள்ளது.
அங்கு தற்போது நிலவும் கள நிலமையை ஆராயும் விதமாகவே அனைத்துக் கட்சிக் குழுவினர் காஷ்மீர் பகுதிக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய உள்துறை அமைச்சகமும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்யும்.

கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதி வருகின்றனர்.


காஷ்மீரில் பதற்ற நிலை தொடருகிறது



இந்த மோதல்கள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் எண்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி, இடது சாரிகள் மற்றும் காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் எதிர்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகள் பங்கு பெற்றன.

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவினர் செல்ல இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டாலும், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவோ அதை தளர்த்துவது தொடர்பாகவோ முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

இந்தியாவின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு உள்ளக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து நிலவியது.

வன்முறை முடிவுக்கு வந்த பிறகே பேச்சுவார்த்தைகள்

இந்தக் கூட்டத்தில் அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் மற்ற தலைவர்களும் வேதனையும் கவலையும் வெளியிட்டனர்.


வன்முறையில் ஈடுபடும் மக்கள்



ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதியை ஏற்படுத்த எந்த தனி நபரிடமோ அல்லது எந்தக் குழுவுடனுமோ தாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த அதே வேளை, அதற்கு முன்னர் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீருக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அங்கு சமூகத்தின் பல மட்டங்களில் உள்ள மக்களையும் சந்தித்து உரையாடி கருத்துக்களை பெறவுள்ளனர்.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியும், எதிர்கட்சியாக இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

பாரதீய ஜனதா கட்சி, ஷிவ் சேனா, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன. அப்படியான ஒரு நடவடிக்கை பாதுகாப்பு படையினரின் மனோ நிலையை பாதித்து ஊக்கமிழக்கச் செய்துவிடும் என இந்தக் கட்சிகள் வாதிட்டன.

இந்தக் கருத்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்தன.

அனைத்துக் கட்சி குழுவினரின் காஷ்மீர் பகுதிக்கான விஜயத்துகான தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை

Read more...

>> Wednesday, September 15, 2010



உலக நாடுகள் எதிர்நோக்கும் ஒய்வூதிய சவால்


தமது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதியினர்
பல நாடுகளில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஓய்வூதியம் தொடர்பான பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகிறது.
அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கைக்கு ஏற்ப எவ்வாறான மாற்றங்களைச் செய்வதென்பது உலக நாடுகள் பல தற்போது எதிர்கொண்டுவரும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஓய்வூதியத்துக்கான முறையான ஏற்பாடுகளை வைத்திருக்கும் பல நாடுகளில் நிதிப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

ஓய்வூதியத்துக்கான ஏற்பாடுகள் அறவே இல்லை அல்லது மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றாலும்கூட, வளருமுக நாடுகளிலும் இது பிரச்சினைக்குரிய ஒரு விவகாரம்தான்.

ஆயுட்காலம் அதிகரிக்கிறது

உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால், 1960ல் பிறந்த ஒருவர், 52 வயது வரை வாழுவார் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை இருந்தது. அதுவே இந்த வருடம் பிறக்கின்ற ஒரு குழந்தை, 69 வயது வரை வாழும் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ முன்னேற்றங்களால் மனிதர்களின் ஆயுட்காலம் கூடிவருவது ஒரு புறம் நடக்கும் நிலையில், மக்கள் பிள்ளை பெற்றுக்கொள்வது குறறைந்து வருகிறது. இரண்டையும் சேர்ந்துப் பார்க்கையில், ஒரு தேசம் முதுமை எய்திவருகிறது என்று சொல்லலாம்.

செல்வந்த நாடுகளில் இந்நிலையால் வரிப்பணம் மூலம் வயோதிகர்களுக்கு வழங்கப்படும் அரசு ஓய்வுவூதியத்தில் பெரும் பிரச்சினை உருவாக்கியுள்ளது.

அண்மைய உலக நிதி நெருக்கடியால் அரசாங்கங்களின் வரி வருமானம் குறைந்துபோனதும் இந்தப் பிரச்சினையை பெரிது படுத்தியுள்ளது.

தனியார் ஓய்வூதியம்

அரசாங்க ஓய்வூதியம் என்றில்லாமல் வேலை பார்த்த காலத்தில் சேமித்த பணத்தைக் கொண்டு வழங்கப்படும் தனியார் ஓய்வூதியங்களிலும் வயோதிகர் எண்ணிக்கை அதிகரிப்பு பாதகங்களை ஏற்படுத்திவருகிறது.

அண்மையில் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பலரைப் பொருத்தவரையில், ஓய்வூதியத்துக்காக அவர்கள் சேமித்த பணத்தைக் கொண்டு செய்திருந்த முதலீடுகள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மதிப்பு குறைந்திருந்தன.

வளருமுக நாடுகள்


வயதான இந்தியர்கள்

இந்தப் பிரச்சினை செல்வந்த நாடுகளுக்குத்தான் என்றில்லை. வளருமுக நாடுகளிலும் ஜனத்தொகையில் வயோதிகர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.

உதாரணத்துக்கு சீனாவை எடுத்துக்கொண்டால், ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்ற அரசு கொள்கை காரணமாக, அங்கே பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

அதேநேரம் அங்கே பொருளாதாரம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், மக்களின் செல்வச் செழிப்பு கூடுகிறது, மக்களின்சராசரி ஆயுட்காலமும் அதிகரித்துவிட்டது.

வளருமுக நாடுகளைப் பொறுத்தவரை, வயோதிகர்களைப் பாதுகாப்பதில் பொதுவாக அவரவர் குடும்பங்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கை குறையக் குறைய பெரியவர்களைப் பாதுகாப்பதில் அவர்களுக்குள்ள சிரமங்கள் அதிகரிக்கின்றன.

தவிர அங்கே வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்காக நகரங்களை நோக்கிச் சென்றுவரும் நிலையில், கிராமங்களில் தங்கிவிட்ட முதியவர்களை அவர்கள் பராமரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்துவருகின்றன.

Read more...


படையினர் சட்டம் குறித்து விரைவில் முடிவு


இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் காஷ்மீரில் அதிக அளவு நடந்து வருகின்றன.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டத்தை மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்வது தொடர்பாக, டெல்லியில் புதன்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. கடந்த வாரம், அரசுக் கட்டடங்கள் தீயிட்டுக்க கொளுத்தப்பட்டன. அதையடுத்து, அங்கு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. திங்கட்கிழமையன்று ஊரடங்கு உத்தரவை மீறி நடந்த வன்முறையில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

அதே நேரத்தில், மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப் படைகளுக்கான சிறப்புச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரி வருகிறார்.

அவரது கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவளிப்பதாகவும், அதே நேரத்தில், பாதுகாப்ப அமைச்சர் அந்தோணி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் அறிய, நாளை புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதே நேரத்தில், அரசு சட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்த முடிவை எடுக்கும்பட்சத்தில், ஆயுதப்படைகளுக்கு சட்டப்பூர்வப் பாதுகாப்பு அவசியம் என்று வலியுறுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி ஏர்சீஃப் மார்ஷல் பி.வி. நாயக்

Read more...


எகானமிஸ்ட் இதழ் மீண்டும் பறிமுதல்


எகானமிஸ்ட் சஞ்சிகை
இலங்கையில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை கொண்ட கட்டுரையை பிரசுரித்திருந்த எகானமிஸ்ட் வார இதழின் பிரதிகளை இலங்கை அதிகாரிகள் விநியோகிக்க முடியாதபடி பறிமுதல் வைத்துள்ளனர்.
எகானமிஸ்ட் இதழின் பிரதிகள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இதழ்கள் தாமதமாகவே விடுவிக்கப்பட்டதன் காரணமாக இதழை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன.

இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை எகானமிஸ்ட் சஞ்சிகையின் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் சமீபத்திய உதாரணம்.

அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்ததன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு முன்பாக தனது குடும்பத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த விழைந்திருக்கிறார் என்று எகானமிஸ்ட் இதழின் தலையங்கம் கூறியுள்ளது.

இது போன்ற விமர்சனங்கள் கராணமாகவே இந்த இதழை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கலாம் என எகானமிஸ்ட் பத்திரிக்கையை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகித்து வரும் முகவரான விஜித யாப்பா பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான எகானமிஸ்ட் இதழில் போரால் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படுதலில் உள்ள பிரச்சனைகள், அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனை பற்றிய கட்டுரை இடம்பெற்றதால் அந்த பிரதிகள் முதலில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் சில தினங்களில் அவை விற்பனைக்காக விடுவிக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து பிரசுகரமாகும் பத்திரிக்கைகள் நாட்டியின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இலங்கையில் உள்ள பல பத்திரிக்கைகள் அரசியல் யாப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது என்பதற்கு இது போன்ற கட்டுரைகளே சாட்சியமாக திகழ்வதாக அரசு கூறுகிறது. ஆனால் பின்விளைவுகளுக்கு அஞ்சி பலர் தாம் சொல்ல வரும் விடயங்களில் சிலவற்றை தாமாகவே தணிக்கை செய்து விடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

Read more...

Read more...

>> Tuesday, September 14, 2010


"சிறார் துஷ்பிரயோகம் உண்மையே"


பெல்ஜியம் பேராயர் ஆந்த்ரே ஜோஸஃப் லியொனார்
பெல்ஜியத்தின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரிமார்கள் சிலரால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டது பரவலாக நடந்துள்ளது என்பதை அத்திருச்சபையின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும் பொலிசாரிடம் தாங்கள் நெருங்கி ஒத்துழைக்க விரும்புவதாக பேராயர் ஆந்த்ரே ஜொஸெஃப் லியொனார்ட் கூறினார்.

துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களுடன் சமரசத்துக்கு வருவதற்கான புதிய மையம் ஒன்றை திருச்சபை அமைக்கப்போகிறது என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரும் அனுபவித்திருந்த துன்பங்களை அவரவர் நிலையில் புரிந்துகொள்வது முக்கியம் என்று அவர் கூறினார். தவறுகளில் இருந்து திருச்சபை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெல்ஜியத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் மற்றும் திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சிறார்களைப் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளதாக பக்கச்சார்பற்ற விசாரணை ஆணையம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெல்ஜியத்தின் அனைத்து மாறைமாவட்டங்களிலுமே தசாப்தங்கள் கணக்கில் இப்படியான துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளன.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்களில் ஒரு சிலர் பச்சிளம் குழந்தைகளாக இருந்தபோதே இந்தக் கொடுமைகள் அவர்களுக்கு ஆரம்பித்திருந்தனவென்று அது கூறியிருந்தது.

தாங்கள் அனுபவித்த துன்பங்களின் விளைவாக இச்சிறார்கள் 13 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது.

Read more...


"அமெரிக்க விமர்சனத்தால் அதிருப்தி"



இலங்கையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 18வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க அரசின் ராஜாங்கத்துறை தெரிவித்திருந்த விமர்சனங்கள் பற்றி இலங்கை அரசு தனது கவலையை வெளியிட்டிருக்கிறது.
இந்த அரசியல் சட்டத் திருத்தம், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் ஏகமனதான முடிவை ஒட்டியும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்பட்டதாக, இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

மேலும், இந்த அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பது, இலங்கையின் முழுமையான உள்நாட்டு விவகாரம் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்க ராஜாங்கத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்டத்திருத்தம், ஜனநாயகத்தை குலைப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதாகவும், இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதை அனுமதிப்பதாகவும் இந்த அரசியல் சாசனத் திருத்தம் அமைந்துள்ளது.

Read more...


நிருபர்களை அனுமதிக்காதது தவறு"


யுத்த படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைய விசாரணை
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் செய்தியாளர்களை களத்துக்குச் செல்வதில் இருந்து பெரும்பாலும் தவிர்த்ததன் மூலம் இலங்கை அரசாங்கமும், இராணுவமும் தவறிழைத்திருக்கின்றன என்று போரின் இறுதி நாட்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக் குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் யார் தவறிழைத்தார்கள் என்பதைக் கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்றும் இந்த ஆணையத்தின் முன்பாக சாட்சியமளித்த மிகவும் மூத்த செய்தி ஆசிரியரான சண்டே ஐலண்ட் செய்திப் பத்திரிகையின் மனிக் டி சில்வா கூறியுள்ளார்.

இந்தப் போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று வெளிநாட்டு மற்றும் உள்ளூர் செய்தியாளர்கள் மீது அவ்வப்போது இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

"சில அரசாங்க ஊடகங்களின் செய்தியாளர்களைத் தவிர, ஏனைய செய்தியாளர்களை அதிகாரிகள் போர்ப் பகுதிக்கு அருகே செல்ல அனுமதிக்காததால், தாம் கேள்விப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டே பல செய்திகள் வந்தன. அதனால்தான் போரில் செய்தி ஊடகங்கள் ஆக்கப்பூர்வ பங்காற்றவில்லை என்று தெரிவிக்கப்படுகிறத்டு" என பத்திரிகையாளர் மனிக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் செய்தியாளர்களின் நிலைமையை விடுதலைப் புலிகளும் கடுமையாக்கியிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப் புலிகள் விரும்புவதுபோல் செய்தியாளர்கள் செய்தி சொல்லத்தவறினால், அவர்கள் இறக்க நேரிடும். இராணுவத்தரப்பிலும் அப்படித்தான் நடந்தது என்று நான் நினைக்கிறேன்.


மனிக் டி சில்வா

போரின் போது யார் என்ன செய்தார்கள் என்பதை வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் எந்தப் பலனும் கிடையாது என்றும் சில்வா கூறினார்.

அதற்குப் பதிலாக அனைவரது மனக்காயங்களும் ஆற்றப்பட வேண்டும் என்பதை நாடு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், இராணுவத்தினதும் வாழ்க்கையை வழமைக்கு திரும்பச் செய்யும் நடவடிக்கைக்கு உதவும் நிதிக்காக இலங்கையர் ஒவ்வொரும் ஒரு வரியைச் செலுத்த வேண்டும் என்றும் ஒரு புதுமையான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிமட்டத்தில் எந்தவிதமான இன முரண்பாடும் கிடையாது என்று தான் அடிப்படையில் நம்புவதாகவும் சண்டே ஐலண்ட் ஆசிரியர் மனிக் டி சில்வா கூறியுள்ளார்.

Read more...


காஷ்மீரில் மீண்டும் வன்முறை


ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பணியில் பொலிசார்
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் இன்று நடந்த வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டும் 100 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
இந்திய ஆட்சியை எதிர்த்தும், முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆனை அமெரிக்காவில் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று ஓர் தொலைக்காட்சியில் தகவல் வெளியானதன் விளைவாகவும் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பட்டம் செய்துள்ளனர்.

பல அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன; ஆத்திரம் கொண்ட மக்கள் ஒபாமாவின் கொடும்பாவியை எரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க இந்திய பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

வடக்கு காஷ்மீரில் புரோடஸ்டண்ட் திருச்சபையால் நடத்தப்படும் ஒரு பள்ளிக்கூடம் அருகே வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டிருந்தது.

Read more...

>> Monday, September 13, 2010


குரானை எரிக்க மாட்டோம்- பாதிரியார்


திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்


அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், இரட்டை கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் ஜீரோ அருகே இஸ்லாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரானை எரிக்கப் போவதாக கூறியிருந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அத்திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் குறிப்பிடப்படும் அந்த இஸ்லாமிய நிலையத்தின் மத போதகரான அப்துல் ராஃப், அமைதி வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை சந்திக்கும் திட்டம் எதுவும் தனக்கு இப்போது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக குரானை எரிக்கப் போவதாக பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியதை தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பாதுகாப்புதுறை செயலர், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ உள்ளிட்டவர்கள் திட்டத்தை கைவிடுமாறு டெர்ரி ஜோன்ஸை கேட்டு கொண்டிருந்தனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Read more...


மிக விலை உயர்ந்த புத்தகம் விற்பனைக்கு


பறவைகள் குறித்த புத்தகம்
உலகத்தின் மிக விலை உயர்ந்த அரிய புத்தகமான ஜான் ஜேம்ஸ் அடுபோன்ஸின் ‘பேர்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’புத்தகம் சோதிபைஸ் ஏலக்கடையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்தின் முழுமையான வடிவங்களில் 119 பிரதிகள் மட்டுமே தற்போது இருப்பதாக அறிய வந்துள்ளது. அவற்றில் 108 புத்தகங்கள் நூலகம் மற்றும் அருங்காட்சியங்களில் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் தனி பிரதி ஒன்று 8.8 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியது.

டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்படும் பிரதி மறைந்த லார்ட் ஹெஸ்கத் அவர்களின் சேகரிப்பில் இருந்து வருகிறது.

இந்த புத்தகத்தில் 500 பறவை இனங்களின் சுமார் 1000 பொருள் உயர ஒவியங்கள் உள்ளன.

இந்த ஒவியங்கள் மற்றும் ஆராய்ச்சியை முடிக்க வன உயிர் ஒவியரான ஜான் ஜேம்ஸ் அடுபோனுக்கு சுமார் 12 ஆண்டுகாலம் பிடித்தது.

அமெரிக்கா முழுவதும் பயணித்து பறவைகளை சுட்டு, பின்னர் அவற்றை கம்பியில் கட்டி தொங்கி விட்டு அவற்றை இவர் வரைந்துள்ளார்.

அதன் பின்னர், பிரிட்டனுக்கு சென்ற அவர், புத்தகங்களை பிரசுரித்து அவற்றை செல்வந்தர்களிடம் விற்பனை செய்தார்.

Read more...


18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா


அமெரிக்க அரசுத்துறை முத்திரை
இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்த, இலங்கை அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டமூலத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் கடந்த வாரத்தில் தனது அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டிய அவசியம் கிடையாது என்று இலங்கை உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த அரசியலமைப்பு திருத்தம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடங்கங்களையும், அது குறித்த நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க துணைச் செயலரின் அறிக்கை, அந்த திருத்தம் ஜனாதிபதியின் ஆட்சிக்காலங்களுக்கான மட்டுப்பாட்டை ஒழிப்பதாகவும், தேர்தல், பொலிஸ், மற்றும் மனித உரிமைகள், நீதித்துறை ஆகியவை உட்பட சுயாதீன நிறுவனங்கள் மீதான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அது விரிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.

இந்த அரசியலமைப்பு திருத்தம், ''முறைமைகள் மீதான பரிசோதனைகள் மற்றும் சமநிலைகள்'' ஆகியவற்றை பலவீனப்படுத்துவதாகவும், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கோட்பாடுகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமெரிக்கா கவலை கொள்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நல்ல ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்கள் ஆகியவற்றை இலங்கை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

சுயாதீன நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த நியமனங்களைச் செய்வதன் மூலமும், வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதன் மூலமும், அதிகாரப் பகிர்வையும் பேச்சுவார்த்தைகளையும் விரிவுபடுத்துவதன் மூலமும், மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் ஜனநாயகத்தை பலப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுள்ளது.

Read more...



துருக்கி அரசியல் சீர்திருத்தம்- வாக்கெடுப்பு


துருக்கி நாடாளுமன்றம்
துருக்கியில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
1982 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு அடுத்த கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கூடிய பெரும்பாலான திருத்தங்கள் உள்ளடங்கலாக 26 புதிய சீர்திருத்தங்கள் துருக்கி மக்களின் அங்கீகாரத்திற்காக தற்போது காத்திருக்கின்றன.

இதற்கிடையில், ஆளுங்கட்சியின் முடிவுகளை தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்திவரும் துருக்கி எதிர்க்கட்சியினர், அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


துருக்கி பிரதமர்
இரண்டு பிரதான நீதித்துறை நிறுவனங்களின் உறுப்புரிமையை விரிவு படுத்தும் இரண்டு அரசியல் திருத்தங்கள், அரசாங்கம் நீதித்துறையில் அளவு கடந்து செல்வாக்கு செலுத்துவதற்கு வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

துருக்கியின் மேனிலை நீதிமன்றங்கள், பிரதமர் எர்துவானின் இஸ்லாமிய அடித்தளம் கொண்ட நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியை கண்காணிக்கும் பொறிமுறையாகவே மதச்சார்பற்ற துருக்கியர்களால் பார்க்கப்படுகின்றன.

ஆனால் நீதிமன்றங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட தீர்ப்புகளை வழங்குவதாக பிரதமர் குற்றஞ்சாட்டிவருகின்றார்.

இவ்வாறான திருத்தங்களின் பின்னர் பிரதமரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது என அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

அரசியலமைப்புத் திருத்தங்களை வலியுறுத்தி வந்த பெரும்பாலான வாக்காளர்கள், இந்த முன்மொழிவுகள் போதுமான பகிரங்க விவாதங்களுக்கு உள்ளாகமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட முயற்சிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

Read more...


த.தே.கூட்டமைப்பு சாட்சியம் அளிக்கும்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக தமிழோசையிடம் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்த் தரப்பின் நியாயங்களை சரித்திர ரீதியாக முன்வைக்க வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகக் கூறினார்.

ஆணைக்குழு மீதுள்ள நம்பகத் தன்மைகளுக்கு அப்பாற்பட்டு, அதன் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான கடப்பாடு தமிழர் தரப்புக்கு இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களின் நிலைப்பாடு பற்றி வெளிப்படுத்துவதற்கு இந்த சாட்சியம் துணை புரியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் சகல நடவடிக்கைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

Read more...

>> Thursday, September 9, 2010


நடுவானில் செயலிழந்த விமானம்


டூபலோவ் ரக பயணிகள் விமானம்
ரஷியாவின் 82 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த ஒரு விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில்,எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியமை ஒரு அதிசயம் என வான் போக்குவரத்து வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்.
மாஸ்கோவுக்கு பறந்து கொண்டிருந்த அந்த டூபலோவ் ரக பயணிகள் விமானம் நடுவானில் பத்தாயிரம் மீட்டர்களுக்கும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது செயலிழந்து போனது.

அந்த விமானத்தின் எரிபொருள் பம்புகள், வானொலி மற்றும் அது சென்றடைய வேண்டிய இடத்துக்கான பாதை மற்றும் பறக்கும் உயரம் போன்ற முக்கிய தகவல்களை காட்டும் நேவிகேஷன் கருவி ஆகியவை நடுவானில் செயலிழந்தன.

நடுவானில் பழுதடைந்த அந்த ஜெட் விமானத்தை, அதன் ஓட்டுநர் தாழ்வான உயரத்துக்கு எடுத்துச் சென்று, அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு இராணுவ விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இவ்வளவு அபாயகரமான நிலையிலும் பாதுகாப்பாகத் தரையிறங்கிய அந்த விமானம், ஓடுபாதையை விட்டு இருநூறு மீட்டர் தூரமே தள்ளிச் சென்று நின்றது.

அந்த விமானத்தில் இருந்த அனைவரும் சிறுகாயம் கூட இல்லாமல் விமானத்திலிருந்து வெளியேறினர்.

Read more...


நடிகர் முரளி காலமானார்


நடிகர் முரளி காலமானார்
பிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, புதனன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
1984-ம் ஆண்டு, பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. புதுவசந்தம், இதயம், பொற்காலம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், தனது கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

அழுத்தமான பாத்திரங்கள் மட்டுமன்றி, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் அவர் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ள முரளி, கடைசியாக, தனது மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். 100 வது படித்தில் நடிக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த முரளி, இன்று அகால மரணமடைந்துவிட்டார்.

அவரது உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more...


தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை


தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதற்காகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

இதன்படி தமிழக அரசின் நேரடிப் பணி நியமனங்களில் 20 சதவீத இடங்கள் தமிழில் படித்தவர்கள் மூலம் நிரப்பப்படும்.

Read more...


18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது


இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டமூலம் புதனன்று நிறைவேற்றப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த வீடியோவைக் காண

சட்டமூலத்துக்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்ததாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக இந்த சட்டமூலத்தை பிரதமர் டி எம் ஜயரட்ண நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இதனை எதிர்த்து வாக்களித்தன.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தன.

இந்த சட்டமூலத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி ஆர்வலர்கள் தலைநகர் கொழும்பில் இன்று பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தினார்கள்.

Read more...

>> Wednesday, September 8, 2010


தமிழக அரசு பொய் சொல்கிறது"


லத்திகா சரண்
தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் கூறியுள்ளார்.
தீயணைப்புத் துறை இயக்குனரான டி.ஜி.பி. ஆர்.நடராஜ் என்பவரும், லத்திகா சரண் தனக்கும் இன்னும் வேறு சிலருக்கும் பணியில் இளையவர், எனவே அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க்க்கூடாது என வாதிட்டு தொடர்ந்த வழக்கினை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தமிழக அரசு தனது பதில் மனுவில், "மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்வு இருக்கவேண்டும் என்பது விதியில்லை" எனக் கூறியிருக்கிறது.

விஜயக்குமார் தனது பதில் மனுவில், மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தாலும், தன்னையும் சட்டம் ஒழுங்குப் பிரிவுத்தலைவர் நியமனத்திற்கு டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வழக்கு தொடர்ந்துள்ள நட்ராஜ்

விஜயகுமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

"அப்பதவி கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிலையில் இருப்பவர்களுக்குரித்தான் பதவியாயிருந்தும் லிஜயகுமார் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் அவருக்குப் பணியாற்ற விருப்பமில்லை என்ற ரீதியில் தமிழக உள்துறை செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தவறானது. அவதூறானது" என விஜயகுமார் மேலும் கூறியிருக்கிறார்.

நடராஜ் சட்டம் ஒழுங்குப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுவதை தான் ஆதரிப்பதாகவும் விஜயகுமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வழக்கில் வாதங்கள் இன்று முடிவடைந்துவிட்ட நிலையில், தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது

Read more...


"குரானை எரித்தால் பின்விளைவுகள் ஏற்படும்"


புனித குரான்
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சிறிய கிறித்தவ திருச்சபைக்குழு ஒன்று தான் ஏற்கனவே அறிவித்தபடி புனித குரானின் பிரதிகளை எரித்தால், அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று, ஆப்கானிஸ்தானில் இருக்கும் சர்வதேசப் படைகளின் தளபதி, ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் நினைவு நாளில் குரானின் பிரதிகளை எரிக்கப் போவதாக அந்த கிற்ஸ்தவ அமைப்பு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இந்த திருச்சபையின் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதற்கு கட்டுப்படுத்த முடியாத முஸ்லிம் பதிலடி அளிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இரான் எச்சரித்துள்ளது.

சுதந்திரம் என்ற பெயரில், வழிபாட்டுக்குரிய பொருட்கள் அவமதிக்கப்படுவதை மேலை நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று இரான் கூறியது.

Read more...


18 ஆவது சட்ட திருத்தத்துக்கு நீதிமன்றம் பச்சைக் கொடி


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே
இலங்கை அரசியலமைப்பில் செய்யப்படவுள்ள திருத்தத்துக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதன் மூலம், அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் வழி செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில்சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ அவர்கள் இதனை அறிவித்தார்.

இலங்கையில் ஒருவர் எத்தனை முறை ஜனாதிபதியாக வரலாம் என்பதற்கு தற்போது இருக்கின்ற கட்டுப்பாட்டை இந்த அரசியலமைப்பு திருத்தம் நீக்குவதுடன், ஜனாதிபதிகான அதிகாரத்தையும் அது பெருமளவு அதிகரிக்க உதவுகிறது.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் கொழும்பில் இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தினாலும், அந்த அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் திடமாக மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது.

அரசியலமைப்பின் 18 வது திருத்தம் என்று கூறப்படுகின்ற இந்த சர்ச்சைக்குரிய திருத்தத்துக்கு எதிராக நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.

இது ஜனநாயகத்துக்கு விழுந்த ஒரு பெரிய அடி என்று அரசை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது வாக்காளர்களுக்கு உள்ள தெரிவுகளை அதிகரிக்கிறது என்று ஜனாதிபதி கூறுகிறார்.

தற்போது இலங்கையில் ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். அந்தக்கட்டுப்பாட்டை இந்த புதிய அரசியலமைப்பு திருத்தம் நீக்குகிறது. இதனால், மூன்றாவது தடவையாகவும், 2016 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். அத்துடன் இது அவரது அதிகாரங்களை அதிகரித்து, நாட்டின் அதியுயர் நீதிபதிகள், தேர்தல், மனித உரிமைகள் மற்றும் ஏனைய விவகாரங்களுக்கான ஆணையாளர்கள் ஆகியோரை எந்தவிதமான சட்ட ரீதியான தடைகளும் இன்றி அவர் நியமிக்கவும் வழி செய்கிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சட்டத்தரணிகளின் குழுவுக்கு தலைமை தாங்கும் கிறிஸ்மல் வர்ணசூரிய,
இந்த விடயம் தொடர்பில் மக்கள் எந்த வகையிலும் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

ஆனால், இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பெருமளவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கவந்திழுத்திருக்கிறது.

அவர்களில் ஒருவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம். இந்த சட்டமூலம் அவசர அவசரமாக கொண்டுவரப்படுவது குறித்து தான் சங்கடமடைவதாக கூறுகின்ற அவர், ஆனால், தனது சமூகத்துக்கு அபிவிருத்தி பலாபலன்கள் கிடைக்கும் என்பதால், தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகக் கூறுகிறார்.

இந்த அரசியலமைப்பு திருத்தச்சட்ட வாக்களிப்பை தாம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக முக்கிய எதிர்க்கட்சி கூறுகிறது. ஆகவே புதனன்று இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் பெறப்போவது உறுதியாகிறது.

Read more...

>> Tuesday, September 7, 2010


ஒட்டக வணிகம்: ஆஸ்திரேலியா ஊக்கம்

ஆஸ்திரேலியாவில் நலிந்து வருகின்ற ஒட்டக வளர்ப்புத் தொழில்துறை சர்வதேச சந்தையில் ஒட்டக இறைச்சிக்கும் ஒட்டகப் பாலுக்கும் உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அத்தொழில்துறைக்கு அந்நாட்டின் அரசாங்கம் மானியம் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குள் ஆரம்பத்தில் வந்து குடியேறியவர்கள் இந்தக் கண்டத்துக்குள் ஒட்டகங்களை அறிமுகப்படுத்தியிருந்தனர். பின்னர் அவை காடுகளில் பெருக ஆரம்பித்ததிலிருந்து அவற்றின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து விட்டுள்ளன.

ஒட்டக எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவின் அதி உட்பகுதிகளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒட்டகங்கள் பல்கிப் பெருகுவதால், அவை ஆஸ்திரேலியாவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதால், அவற்றை ஆயிரக்கணக்கில் கொல்லும் நடவடிக்கையில் குறிபார்த்துச் சுடுபவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வெறுமனே இந்த ஒட்டகங்களைச் சுட்டு அவற்றின் சடலங்களை அழுக விடுவதை விட, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வணிகத்தின் மூலம் அவற்றை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று இறைச்சி வணிகக் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஏற்றுமதி ஊக்க மானியம்

மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியாவின் ஒட்டக வளர்ப்புத் தொழில்துறைக்கு அரசாங்கம் ஒரு சிறிய வளர்ச்சி நிதியுதவியை தருகிறது.

ஒட்டக உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதென்பது ஆஸ்திரேலியாவில் பல லட்சம் டாலர்கள் பெருமதி கொண்ட ஒரு பெரிய தொழில்துறையாக வளரும் என்று இத்தொழில்துறையின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


ஒட்டகத்தின் திமிலில் இருக்கும் கொழுப்பு , ஒட்டகத்தின் சிறுநீர், ஒட்டகத்தின் பற்கள் ஆகியவை ஜப்பானில் நிறையத் தேவைப்படுகிறது.


படி மகூக்

மனிதரைப் பொறுத்தவரை அவர்களது முக்கிய உணவு இறைச்சி. அடுத்து மிகவும் வேகமாக வளர்ந்துவரும் தொழிற்துறை பால் உற்பத்தித்துறையாகும். மிகவும் சுகாதாரமான உணவு என்ற வகையில் பாலுக்கான தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது. ஆகவே இந்தத்துறையில் பெருமளவு ஆய்வு செய்யப்பட வேண்டும் என குயின்ஸ்லாந்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்துபவரான பாடி மக்கூக் கூறுகிறார்.

மாட்டிறைச்சைக்கு மாற்றாக வளங்கப்படக் கூடிய கொழுப்புக் குறைந்த உணவு ஒட்டக இறைச்சி. தலைமுடி மற்றும் தோலின் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்திக்காக ஒட்டகத்தின் சிறுநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter