>> Saturday, January 22, 2011


மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை


வவூனியா முகாமில் இருந்து செல்லும் ஒரு குடும்பம்
இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்து, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை வான் மூலமாக தான் பார்வையிட்டதாகக் கூறிய அவர், அந்தப் பகுதிக்கான தனது விஜயம் அங்கிருக்கின்ற பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அவர் கோரியுள்ளார்.

Read more...


ஊழல் ஒழிப்பு: அமைச்சர்கள் குழு கூட்டம்


இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
ஊழல் ஒழிப்பு தொடர்பான பிரேரணைகளை ஆராய்வதற்கென இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் பிரணாப் முகர்ஜி தலைமையில் தில்லியில் நடக்கிறது.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எதிரான ஊழல் வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிவு வழங்குவது உள்ளிட்ட பிரேரணைகளை இக்குழு ஆராயவுள்ளது.

அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மோசமான முறைகேடுகளிலும், அப்பட்டமான ஊழலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் விஷயங்களை துரிதகதியில் விசாரிப்பதை அனுமதிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 311ஆவது ஷரத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி அமைச்சர்கள் குழு ஆராயும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விருப்ப ஒதுக்கீடு செய்ய அமைச்சர்களுக்குள்ள அதிகாரம், அரசாங்கம் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவது போன்ற ஊழல் தொடர்பான பிற விஷயங்களையும் இந்த அமைச்சர்கள் ஆராய்வார்கள்.

கடைசியாக நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கட்சித் தலைவி சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டத்தின் அங்கமாக இந்த அமைச்சர்கள் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டிருந்தது.

Read more...


காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார்.

படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன.

ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது.

அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், குஜராத் மற்றும் டெல்லியில் ஐ.நா. மன்ற மனித உரிமை அமைப்பின் சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா பத்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தின் முடிவில், வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் செகாக்யா, பாதுகாப்புச் சட்டங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டார்.

குறிப்பாக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம், ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை ஆகியவை மனித உரிமை ஆர்வலர்களின் பணிகளை நேரடியாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள், நக்ஸலைட்டுகள், தீவீரவாதிகள், தேசவிரோத சக்திகள் என்று முத்திரை குத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அரசு மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவராலும் குறிவைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களும்குகூட குறிவைக்கப்படுவதாக மார்கரெட் செகாக்யா கவலை தெரிவித்தார்.

மனித உரிமை மீறல், ஊழல் அதிகாரிகள் உள்பட தவறான நிர்வாகம் ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் போராடும் ஆர்வலர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்களின் பணிகளை மதிக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் துறை மறுசீரமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

அவரது பயணம் தொடர்பான விரிவான அறிக்கை, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Read more...

>> Friday, January 21, 2011


சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம்: சீமான்



வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என்றும், காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,



கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பிரசாரத்தில் ஈடுபடும்.



இலங்கையில் தமிழ் இனம் அழிவுக்கு முக்கியக் காரணமாக செயல்பட்டதுடன் அதே நடவடிக்கைகளில் தொடர்ந்து காங்கிரஸ் ஈடுபடுகிறது. தவிர, இதுவரை 537 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல், கொள்ளைகளே
அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் இல்லை. அது தொடர்பான தொலைநோக்குத் திட்டமும் காங்கிரசிடம் இல்லை. அதனாலேயே நாம் தமிழர் கட்சி இம்முடிவு எடுத்துள்ளது.



காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதால் அதன் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்பதில்லை. இருப்பினும், காங்கிரஸை எதிர்த்து மேற்கொள்ளும் பிரசாரத்தால் மாற்றுக் கட்சிகளுக்கு பலம் ஏற்படுமானால் அது தற்செயலானது என்றார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter