>> Saturday, December 21, 2013

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்': ஜனாதிபதி மகிந்த



'வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திலும் ஜனநாயகத்திலும் முக்கிய தருணத்தில் இந்த வரவுசெலவுத் திட்டம் வந்துள்ளது'
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார்.
வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் 60 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
'மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாணசபை ஒன்றை நிறுவி, பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவுசெலவுத் திட்ட விவாதம் நடக்கிறது' என்றார் மகிந்த ராஜபக்ஷ.

தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு

ஆளுங்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன
வடக்கு மாகாணசபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
'நான் தலைவர் ஆர். சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்' என்றார் இலங்கை ஜனாதிபதி.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவந்த இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன.
இடையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துவருகிறது.
ஆனால், அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Thursday, December 19, 2013

Read more...

தேவயானி கைது --- மன்மோஹன் சிங் கண்டனம்


தேவயானி கைதுக்கெதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள்
நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கண்டனம் செய்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்றும் ஏற்புக்கு உரியது இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது நேரடியான பதிலை அளிக்க மறுத்துவிட்டார். அவ்வாறு தேவயாணி நியமிக்கப் பட்டிருந்தால் ஐ.நா.விடம் அங்கீகார பதிவு செய்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அவருக்கு ராஜதந்திர விதிவிலக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.இதனிடையே, தேவயானி கோபர்கடேயை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் தூதரகத்தில் பிரதிநிதியாக நியமித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் எதிரொலி

நாடாளுமன்றத்தில் தேவயானி விவகாரம் எதிரொலி

என்.ரவி பேட்டி


இதனிடையே,தேவயானி கைது விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவையில் இவ்விவகாரத்தால் ஏற்பட்ட கூச்சலால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மாநிலங்களவையில் இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்திய அரசின் குரல் அமெரிக்காவில் ஒலித்திருக்கும் என நம்புவதாக கூறியதோடு, நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்கவில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெயிட்லி பேசுகையில் வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில் இந்தியா மென்மையாக நடந்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.
திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஒரு இந்திய பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுரம் வருத்ததிற்கு உரியது என்றும், வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலத்தை இந்தியா எட்டியுள்ளதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தேவயானி
இந்நிலையில் இந்திய பெண் அதிகாரி தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதாலயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் மத்திய அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறி விட்டதாக தெரிவத்தார்.

புகார் கொடுத்தவரின் கணவர் அமெரிக்கா சென்றார்

இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை செய்ததன் மூலம்,இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கருதுவதாகவும இந்திய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'அமெரிக்கா திட்டமிட்டு செய்திருக்கிறது'

இந்திய ராஜிய அலுவலர்கள் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய,பணியாளர்களை அமர்த்திக்கொள்ள இந்திய அரசு ஒரு தொகையை அவர்களது சம்பளத்திலேயே சேர்த்து தருகிறது என்றும், அதிலிருந்துதான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்.ரவி கூறினார்.
பணிபெண்கள் ஊதியம் உள்நாட்டு சட்டங்கள்பாற்பட்டே அமைந்திருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு தரப்படும் ரொக்க சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு வழங்கப்படும், இலவச வீட்டுவசதி, இலவச உணவு, மின்சாரம், தண்ணீர் செலவு போன்றவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் பொதுவாக சுமுகமாக இருக்கும் இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு தற்காலிக விரிசலை ஏற்படுத்தும் என்றும், ஆனால் போகப்போக இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், இந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயத்தின் வடு அழியாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா இந்த சம்பவத்தில் , புகார் கொடுத்த பெண்ணின் கணவருக்கு விசா வழங்கி, அவர் டிசம்பர் 10ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரே, டிசம்பர் 11ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்கா இதைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது என்றார் ரவி.

Read more...

தேவயானி கைது சர்ச்சை : ஜான் கெர்ரி வருத்தம்

தேவயானி சர்ச்சை
நியுயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட சர்ச்சையில், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனுடன் புதன்கிழமை தொலைபேசியில் பேசிய அவர், இந்த "துரதிருஷ்டவசமான சம்பவம், இந்திய அமெரிக்க உறவுகளைப் பாதிக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

"தேவயானி கண்ணியமாகவே நடத்தப்பட்டார்" --அமெரிக்க அரச வழக்கறிஞர்
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ராஜீய அலுவலர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ராஜிய அலுவலர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் அதே மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படவேண்டும் என்பதே ஜான் கெர்ரியின் எதிர்பார்ப்பு என்று , அமெரிக்க வெளியுறவுச் செயலகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.
தேவயானியைக் கைது செய்ய உத்தரவிட்ட ப்ரீத் பராரா
இதனிடையே, தேவயானி கோபர்கடேயைக் கைது செய்ய உத்தரவிட்ட , அமெரிக்க நீதித்துறை அரச வழக்கறிஞர், ப்ரீத் பராரா விடுத்த ஒரு அறிக்கையில், கைது செய்யப்படும் அமெரிக்கப் பிரஜைகள் நடத்தப்படுவதை விட அதிகமான மரியாதைகள் தேவயானிக்கு தரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
" தேவயானி ஒரு பெண் காவலரால், தனி அறையில் சோதனையிடப்பட்டார், ஆனால் இது எல்லாக் குற்றம் சாட்டப்பவர்களுக்கும் செய்யப்படும் அதே முறைதான் , அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி" என்றார் ப்ரீத் பராரா.
ஒரு இந்தியர் நடத்தப்பட்ட விதம் என்று கூறப்படும் இது குறித்து எழுந்திருக்கும் கோபாவேசம் மற்றொரு இந்தியரும், ( பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்) அவரது கணவரும் நடத்தப்பட்ட விதம்
குறித்து எழவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்றும் ப்ரீத் பராரா குறிப்பிட்டார்.
இதனிடையே, தேவயானிக்கு இருக்கும் ராஜிய பாதுகாப்பை மேலும் அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் பிரதிநிதியாக நியமித்தது.
ஆனால் இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த ஒரு வேண்டுகோளும் இது வரை வரவில்லை என்று அமைச்சகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.

Read more...

rpe;jid rpw;gpfs;
நடத்தும் குறுங்கவிதை போட்டி 
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி 
விசயமங்கலம் குணசீலன் 
விசயமங்கலம் 638056 ஈரோடு மாவட்டம் கடைசி நாள் 30.12.2013
மின் அஞ்சல்

pgunalib@gmail.com 


Read more...

>> Wednesday, December 18, 2013

dd

Read more...

>> Monday, October 7, 2013

vanakkam

Read more...

>> Tuesday, July 23, 2013

படங்களில் பட்டாம்பூச்சிகள் : பிரிட்டனில் ஆய்வு

Read more...

“டெசோ ஆர்பாட்டம் இந்திய அரசின் நிலையை மாற்றும்”

டெசோவின் முந்தைய ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
டெசோவின் முந்தைய ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் நடத்தப்படவிருக்கும் ஆர்பாட்டம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 8-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தலைநகர் புது தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமையகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புது தில்லியில் திமுக நடத்தும் இந்த ஆர்பாட்டம் அரசியல் நோக்கங்களுக்கானதல்ல என்று பிபிசி தமிழோழையிடம் கூறிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் மாற்றத்தை தமது கட்சியால் ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

Read more...

இலங்கையில் முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுமா?

வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி, கடந்த வாரம் தமிழோசையிடம் கூறியிருந்தார்.
ஆதரவாளர்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"வாக்குகள் சிதறும் வாய்ப்பு"



வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது இயலாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கட்சி உறுப்பினர்களுடன் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்
வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கியுள்ளதையும் மறந்துவிட முடியாது எனவும் கூறும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளை சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும் கூறுகிறார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Read more...

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை

ஆண் குழந்தை --- கேட் , வில்லியம் தம்பதியர் ( ஆவணப்படம்)
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.
குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
கேட் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் மருத்துவமனைக்கு வெளியே பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது.

Read more...

>> Monday, July 22, 2013

இந்துத்துவ தலைவர்களின் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு


கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்கள் இருவரின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு அமைத்திருக்கும் இந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவானது கடந்த வெள்ளியன்று (ஜூலை19,2013) இரவு தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஜூலை ஒன்றாம் தேதி வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்திருக்கிறது. இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவானது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையின் மேற்பார்வையில் விசாரணையை நடத்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷின் படுகொலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் மு கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரமேஷின் கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை தமிழக காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம்-நாமக்கல் மண்டல பா.ஜ.க மகளிரணி செயலர் ராஜேஸ்வரி ( வயது 45 ) தீக்குளித்ததாகவும், சிகிச்சை பலனின்று அவர் இறந்துவிட்டதாகவும், பாஜக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்து இயக்கத்தலைவர்கள் தொடர்ந்து குறிவைத்து கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வருவதாக குற்றம் சுமத்தியிருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இதை கண்டிக்கும் நோக்கத்தில் நாளை திங்கட்கிழமை (ஜூலை 22, 2013) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Read more...

"கட்டாய தற்காலிக கிராமப் பணி மருத்துவர்களுக்கு எதிரானது"



இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்று முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கிராமப் புறங்களில் ஒரு வருடத்துக்கு தற்காலிக பணிசெய்வதை கட்டாயமாக்குவது என்கிற ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
தற்காலிகமாக மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் செயல் நீடித்தால், மருத்துவர்களுக்கு நிரந்தர அரசு வேலை என்பது இல்லாமல் போய்விடும் என தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் பயின்றவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்வதை தவிர்க்கிறார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று முன்வைக்கப்படும் வாதத்தை அவர் மறுத்தார்.
மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் முதலில் கிராமப் பகுதிகளிலேயே வேலை வழங்கப்படுகிறது என்றும், நிரந்தர வேலைக்காக கிராமப் புறங்களுக்கு செல்வதை மருத்துவம் பயின்றவர்கள் தவிர்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
நிரந்தர வேலைக்கான வாய்ப்பு வரும்போது மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவதை விரும்பவே செய்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்

தவிர தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவராக ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்போது, தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று டாக்டர் பிரவீன் குற்றம்சாட்டினார்.
தாதிகள் போன்றோர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் பயிற்சி மருத்துவர் செய்ய வேண்டி வருவதால், ஒரு மருத்துவராக தாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது என்று அவர் தெரிவித்தார்.
அளவுக்கதிமான வேலைப்பளுவால், நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சேவையின் தரம் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் பிரவீன் குறிப்பிட்டார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter