>> Friday, May 31, 2013

ரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள். 

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

""ஏண்டி ருக்குமணி... உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்'' என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது. 

""என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி'' என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு. 

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான். 

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது''

""ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!'' என்றாள் ருக்குமணி.

""அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்''

""அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?''

""நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே... சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க... தெரியாதா உனக்கு?'' என்றாள் சிந்தாமணி.

""எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!'' என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி. 

""பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா! 

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்'' என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

""நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட? 

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.'' என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

""ஏண்டா துரையரசு... நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு... நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க ...பாவம்... அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல'' என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.  

""முருகேசா முருகேசா... ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?''

""மீனாட்சி... என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது... டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு... இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி... எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி... நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு... நான் செத்துப் போயிட்டா... எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க... எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது'' என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

""ஐயோ என் சாமி... இப்படி நாரா கிடக்குதே!'' அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, ""அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா... போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு... நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்...'' என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி 

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், ""பயப்படாதப்பா... உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது...'' என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

""வாடா அப்புக்குட்டி... காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்... அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு...''

""சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க''. 

""என்னடா சொல்றே?''

""பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி'' என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

""அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க... எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்... இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்... மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது. 

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ''

""சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே... எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி...''

""மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்... இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு... கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா... சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல... அந்த ஐநூறோட... என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்... நாளை  மறுநாள் வாடா'' என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. 

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

""இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே... ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?'' சரஸக்காதான் அவனிடம் கேட்டது! ""அதான பாருங்கக்கா'' என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

""உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா... ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

""இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா... தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க... இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்... இவுரு தான அப்புக்குட்டி?'' என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், ""சாமி நான் தானுங்க'' என்று அவர் காலில் விழுந்தான்.

""இதென்ன பழக்கம்?'' மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் "கொல்'லென்று சிரித்தார்கள். ""எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்'' என்றார்கள்.

""எந்திரிப்பா மொதல்ல நீ... இந்தா இந்தப் பணத்தைப் பிடி... எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க... உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க''...

""சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு! 

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி''.

""உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு... நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?'' என்றார் சண்முகம்.

""இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி... சத்தியமா இனி தொடமாட்டனுங்க!'' என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

""உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா... நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?'' என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' 

Read more...

புதன், ஏப்ரல் 24, 2013

டெங்கு

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

குங்குமம் 6-8-2012 ல் வந்த 1பக்க கதை
செல்போனில் தவறான அழைப்பு வழியாக எனக்கொரு காதலி அமைந்தாள் என்று சொன்னால் ,கொடுத்து வைத்த மகராசன், என்று தான் சொல்வீர்கள். தினமும் செல்போனில் சுவேதாவின் குரல் இனிமையாக கேட்கவில்லை எனில் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.
என் இதயம் இந்த ஒரு மாத காலமாகவே “சுவேதா..சுவேதா” என்று தான் துடிக்கிறது.நான் டூவீலர் ஒர்க்‌ஷாப்பில் 4 வருடங்களாக மெக்கானிக்காக இருக்கிறேன். சுவேதாவிடமும் உண்மையை சொன்னேன்.சுவேதாவும் இதே நகரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள்.”நேரில் பார்க்கணும் செல்லம்” என்று பல நாட்கள் கேட்டு இன்று தான் கடை முகவரியைச் சொன்னாள். “இதோ ட்ரெயல் பார்த்து வருகிறேன்” என்று சொல்லி யமாஹாவை கிளப்பி விட்டேன்.
வெறும் கையோடா செல்வது என்று பூ வாங்கினேன். அந்த வீதியில் ஜெராக்ஸ் கடைக்கு எதிர்ப்புறம் இருந்த மளிகைக்கடை முன் யமாஹாவை நிறுத்தி ஸ்டைலாய் சாய்ந்து நின்று சுவேதா செல்லத்தை பார்த்தேன். ஹா.. வானுலக தேவதை.
செல்போனில் அவளைக் கூப்பிட்டேன்..எடுத்தவள், “மணி 3 ஆச்சு, என்ன பண்றீங்க? ஓனர் சாப்பிடப் போனவரு 4 மணிக்குள்ள வந்துடுவாரு..சீக்கிறம் வாங்க எதிர்ல மளிகை கடைக்கிட்ட பைக்ல சாய்ஞ்சுட்டு ஒரு கொரங்கு என்னை வெறிக்கப் பார்த்துட்டே இருக்கு..அது பண்றபந்தா இருக்கே..ஆளும் அவன் மூஞ்சியும்..கையில பூ வேற..எந்த பேக்குக்கு குடுக்க நிற்கிறானோ! வாங்க ரவி..
-------நன்றி குங்குமம்-------
குங்குமம் 6-8-2012 ல் வந்த 1பக்க கதை செல்போன் காதல் 2.

Post Comment

பெண் பார்க்க....

குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :

சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை..காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது.மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது.நகரின் பிரபலமானபியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பள பளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.
நீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள்.உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.
சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களைவரவேற்று சோபவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.
“சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க..பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” ந்ன்றார் மாப்பிள்ளையின் அப்பா.
“பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி.
---------நன்றி ; -குங்குமம்-----------
குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :பெண் பார்க்க....

http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14059 http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14059

நன்றி :

Logo

            ருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள் மருத்துவமனையைவிட்டு கிளம்பிப் போவதும், புதிய காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதுமாக ஒரு பெரிய தொடர்சங்கிலி நிகழ்வு நடந்து கொண்டே யிருந்தது. திலீபன் வைரஸ் காய்ச்சல் என்று ஏழாம் எண் படுக்கையில் விழுந்து இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன. தெளிவாகப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் நேற்றே சற்று தெம்பு வந்திருந்தது. இன்று அவனுள் பிழைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

இந்த அறையின் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்கென்றே இரண்டு செவிலிகள் இருந்தார்கள். இருவரில் ஒரு செவிலி அழகாய் இருந்தபடியால் நேற்று மாலை இவனுக்கான மாத்திரைகளை அவள் தரும் சமயத்தில், ""சிஸ்டர், நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யுறீங்களா? உங்களை நான் காலையில பிடிச்சு லவ் பண்ணுறன்... எனக்கொரு முடிவு சொல்லுங்கோ என்று கேட்டிருந்தான். மாறாப் புன்னகையுடன் செவிலி இவன் வாய்க்குள் இரண்டு மாத்திரைகளை வீசி வாட்டர்கேன் தண்ணீர் நீட்டினாள்.

"எங்கேயும் எப்போதும் சினிமாவில அஞ்சலி கமர்கெட்டை ஆக்காட்டச் சொல்லி லவ்வர் வாயில மாத்திரை வில்லை வீசுறாப்ல வீசுறீங்கோ சிஸ்டர். என்னை உங்களுக்குப் பிடிக்கேல்லையா? நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லயில்ல.. இவன் சொல்லச் சொல்ல மாறாப் புன்னகையுடன் பக்கத்து படுக்கை நோயாளியிடம் அவள் சென்றாள். ""சாகுமட்டும் உங்கட நினைவோடயே வாழுவன். அவளுக்கு கேட்கும்விதமாய் சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

இன்று காலையில் அதே செவிலிதான் இவனுக்கு இன்ஜெக்ஷன் போட கையில் சிரிஞ்சுடன் வந்தவள், ""எப்படி இருக்கிறது திலீபன் உடம்புக்கு? என்று கேட்டாள். ""பதிமூண்டு சைடு ஏக்டர்ஸ் என்ர தலையில ஏறி நிண்டு ஸ்லோ மோசனில் "டான்ஸ் பண்ணுற மாதிரி இருக்கு சிஸ்டர். ஒரு சிகரெட் தாறியோ... என்றான். புன்னகை மாறாமல் இவனுக்கு ஊசி ஏற்றிவிட்டு,""அண்ணே, உங்களுக்குக் கூடிப் போச்சு. எனக் கொரு புரியன் இருக்கிறார். "உன்னில் யாராவது உரசினால் இந்த நகரத்தையே எரித்துப் போடுவன் எண்டுதான் கதைப்பார். அண்ணன் நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதேயும் உமக்கு ஒரு நல்ல குடும்பத்து பொட்டையா பாக்குறேன். நானல்லோ உமக்கு சோக்கான பொம்புளையா செய்து வைக்கிறது என்று திலீபனிடம் செவிலி சொல்லிவிட்டு அகல, இவன் நிஜமாகவே வருத்தப்பட்டான். தமாசுக்கு இலங்கைத் தமிழ் பேசப் போக... பார்த்தால் நிஜமாகவே அந்தப் பெண் இலங்கைதானோ என்று சங்கடப்பட்டான். ஆனால் அவளும் இவனிடம் இவனைப்போலவே நக்கல் பேச்சு பேசினாள் என்று இவனுக்குத் தெரியாது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படி காய்ச்சல் என்றோ தலைவலி என்றோ திலீபன் மருத்துவமனையில் படுத்ததில்லை. இதுதான் முதல்முறை என்பதால், தான் ஒரு நோயாளி என்ற உணர்வு உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. மரணம் தன் கூர் பற்களைக் காட்டிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் சுற்றிக் கொண்டிருப் பதான உணர்வு இவனுக்குள் பயத்தை விதைத் திருந்தது. இவன் அம்மா பத்து மணிக்குத்தான் இவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தாள். மற்ற நோயாளிகள் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டார்கள். இன்றுதான் பசி என்பதையே உணர்ந்திருந்தான். அம்மா இட்லிதான் கொண்டு வந்திருந்தது. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி. அவசரமாய் விழுங்கினதால் விக்கல் எடுத்தது. ""மெதுவா சாப்பிடு என்று சொல்லி அம்மா தண்ணீர் கேனைத் தந்தாள். அம்மாவிற்கு இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் தண்ணீரைக் குடித்தான்.

அம்மாவிடம் திலீபன் ஆறு மாத காலமாகவே சரியாய் பேச்சு வைத்துக் கொள்வது இல்லை. பல நாட்கள் இரவில் காப்பகத்திலேயே தங்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான். இதற்கெல்லாம் காரணம் மளிகைக்கடை ஏகாம்பரம்தான். அவரை நினைத்தால்கூட இவனுக்குள் வன்மம் தலைதூக்கிக் கொள்கிறது. திலீபனின் அப்பா இறந்து ஏழெட்டு வருடங் களாயிற்று. வீட்டில் ஒரே பிள்ளை இவன்தான். பெரிதாய் இவனுக்கு சம்பாதித்து வைத்துவிட்டு ஒன்றும் அவர் போய்ச் சேரவில்லை. இவன் அம்மாவைவிட அவர் குடியைத்தான் அதிகம் நேசித்தார். அதனாலேயே ஐம்பது வயதைத் தொடும் முன்பாகவே போய்ச் சேர்ந்து விட்டார். வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் ஏகாம்பரத்தை, "உன் அப்பா மாதிரி என்றாள் அம்மா. இவனுக்கு அம்மாமீதும் புதிய அப்பாமீதும் கோபம் மிகுந்தது.

ஏகாம்பரம் கருங்கல்பாளையத்தில் இருபது வருடங்களாக மளிகைக்கடை வைத்து சம்பாதித் தவர். தன் இரண்டு பெண்களையும் சேலத்திற்கு கட்டிக்கொடுத்து விட்டார். மனைவியை காச நோயில் பத்து வருடங்களுக்கு முன்பே பறிகொடுத்தவர். கடைசிப் பெண்ணையும் கட்டிக் கொடுத்துவிட்ட பின்பு சாப்பாட்டு பிரச்சினைதான் அவருக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மரகதத்திடம் பேசப் பிடிக்க இருந்து ஒட்டிக்கொண்டார். மரகதம் தினமும் மூன்று வேளை சாப் பாட்டை அடுக்குப்போசியில் எடுத்துக் கொண்டு இரண்டு வீதி தள்ளியிருந்த மளிகைக் கடைக்கு நடந்தாள். திலீபனுக்குள் தீப்பற்றிக் கொண்டது. இந்த நாடகத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போயிற்று.

திலீபன் ஈரோடு திருவள்ளுவர் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தில் நான்கு வருடமாய் பணியில் இருந்தான். காப்பகத்தில் நூறு ஆதரவற்ற மாணவ மாணவிகள் இருந்தார்கள். 1999-ல் சமூக ஆர்வலர்கள் சாதாரணமாக வாடகைக் கட்டடத்தில் இருவரால் துவங்கப்பட்டபோது பத்து மாணவர்களே இருந்தனர். அவர்கள் இன்று கல்லூரி சென்று வருகிறார்கள். மேலும் இரண்டு சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவும் முறையாக இந்த காப்பகம் அறக்கட்டளை சட்டத்திலும், சமூகநலத் துறையிலும் பதிவு பெற்று பத்து வருடங்களுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

காப்பகத்திற்கென்று ஆறு சென்ட் நிலத்தை தொழிலதிபர் ஒருவர் ஈரோடு திண்டல் பகுதியில் வழங்கவும்... நிறுவனர் கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரையும் சந்தித்து நிதி வசூல் செய்து ஐம்பது லட்சம் மதிப்புள்ள கட்டடத்தைக் கட்டி முடித்தார்கள். பொதுப் பணித்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த விழாவும் நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்திருந்தது.

நிறுவனரின் மகன் சக்திவேல் மருத்துவமனையில் இருக்கும் திலீபனை நலம் விசாரித்துவிட்டுப் போகவந்த சமயம், திலீபன் சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவி யிருந்தான். ""எப்படி இருக்கு? என்று கேட்ட சக்திவேலுக்கு இவனைவிட மூன்று வயது அதிகம். ""பரவாயில்லங்க சார்... இன்னைக்கு ஈவினிங் பெரிய டாக்டரை பார்த்துட்டு வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்... ஆபீஸ்ல மாலினி எல்லா வேலையையும் சரியா பார்த்துக்கறாங்களா சார்... நல்ல சூட்டிகை சார் அந்தப் பொண்ணு... சேர்ந்த இந்த ஆறு மாசத்துல என்னோட சிரமங்களைப் பாதியாய் குறைச் சுடுச்சு சார் அந்தப் பொண்ணு. காய்கறி செலவுல இருந்து டியூசன் மாஸ்டர் சம்பளம் வரை துல்லியமா கணக்கு வச்சுக்குதுங்க சார் என்றான் திலீபன். வந்தவன் திலீபனின் எஜமானரோ என்று மரகதம் கைகட்டி கட்டில் ஓரமாய் நின்றிருந்தாள். அப்போது பார்த்துதான் மளிகைக்கடை ஏகாம்பரம் கையில் பழ வகைகள் நிரம்பிய பையுடன் அறைக்குள் நுழைந்தார். மரகதத்திடம் பையை நீட்டிவிட்டு இவனை பாசமாய்ப் பார்த்தார். இவனுக்குள் எங்கிருந்துதான் அப்படி கோபம் வந்ததோ! நிறுவனரின் மகன் நிற்பதைக்கூட மறந்து பழப்பையை அம்மாவிடமிருந்து பிடுங்கி வீசினான். ஆப்பிள், ஆரஞ்சு என்று தரையில் கிரிக்கெட் பந்துகள் உருண்டு ஓடுவது போன்று ஓடின.

தாராபுரத்தில் திலீபன் ஒருவன் மட்டுமே பேருந்திலிருந்து இறங்கியபோது மணி இரவு இரண்டு. அந்த மதுரைப் பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள்கூட செல்லவில்லை. நேர் சாலையிலேயே நிலையத்தின் வாயிலில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டது. பேருந்து நிலையம் இருட்டில் கிடந்தது. சாலையில் மட்டும் சற்று தூர தூரமாய் விளக்கொளிகள் தெரிந்தன.. சைக்கிளில் டீ டிரம்மோடு நடுரோட்டில் ஒருவன் பாட்டுப் பாடியபடி வந்து கொண்டி ருந்தான். திலீபன் அவனை நிப்பாட்டினான்.

""டீ முடிஞ்சு போச்சு சார்... வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்... மதுரை பஸ்சுல வந்து இறங்குனியா சார்... இனி மூணு மணி வரைக்கும் ஒரு பஸ் கிடையாதே... எங்க சார் போகணும்? என்றான் பையன்.

""ஈரோடு போகணும். ஒரு மணி நேரம் பஸ்ஸே கிடையாதா?

""சாமத்துல எவன் சார் ட்ராவல் பண்றான்? நீங்க இறங் கனீங்களே கோவை வண்டி... அதோட டைம் ஒண்ணரை சார்... இன்னிக்கி லேட்... மூணே காலுக்கு பழனி வண்டி ஒண்ணு வரும். அதான் மொதல் வண்டி ஈரோட்டுக்கு. சிகரெட் வேணுமா சார்... இப்படி ரோட்டுல நிற்காதீங்க சார்... அப்படி கடையோரமா தூங்குறாப்டி இருட்டுல உட்கார்ந்துக்கங்க. போலீஸ்காரங்க பைக்குல சுத்திட்டே இருப்பாங்க. திலீபன் அவனிடம் இரண்டு சிகரெட் வாங்கிக் கொண்டான். பையன் பாடியபடி கிளம்பிப் போய்விட்டான்.

புகை ஊதியபடி சாத்தியிருந்த கடை ஓரமாய் திண்டில் சாய்ந்து அமர்ந்தான் திலீபன். இப்படி எங்கு வெளியூர் சென்றும் நடந்ததில்லை. காப்பகத்திற்கான நன்கொடை விஷயமாக பல ஊர்களுக்கும் சென்று வந்திருக்கிறான் திலீபன். இன்றும் ஒரு லட்சத்திற்கான காசோலையைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் காலையிலேயே கிளம்பி னான் மதுரைக்கு. நன்கொடை தரும் பெரும்புள்ளி தஞ்சாவூரில் இருந்து வருவதற்கு தாமதமாகிப் போனதால் இப்படி நடந்துவிட்டது. இரவில் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு விரைவு என்பார்கள். தூக்கம் வேறு சொக்கிக் கொண்டு வரும்போல தெரிந்தது. சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இருட்டு உலகத்தில் நுழைந்து விட்ட மாதிரியும், இவன் மட்டுமே சந்தடியில்லாத அந்த உலகத்தில் தனியாளாய் உயிரோடு இருப்பது மாதிரியும் இருந்தது.

ஒரு பிச்சைக்காரன்கூடவா கண்ணில் தட்டுப்படவில்லை. இவன் தோல் பையில் பிஸ்கட் பாக்கெட்டுகளும் தண்ணீர் கேனும் இருந்தன. யாராவது கடை ஓரமாய் வேட்டியை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தால் எழுப்பி கொஞ்ச நேரம் பொழுதைப் போக்க பேசலாம். இருட்டுக்குள் கிடந்த பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து வெள்ளை நிறத்தில் ஒரு நாய் சாலையில் வாகன பயமின்றி ஓடி வந்தது. இவன் "இஸ்க்கோ, இஸ்க்கோ என்று நாயை அழைத்தான். அது சாலையில் நின்று இவனை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் போக்கில் இவனை சட்டை செய்யாமல் ஓடிப் போயிற்று. கடைசிக்கு அந்த நாய் தன்னிடம் வந்திருந்தால்கூட பிஸ்கெட் கொடுத்து, அதன் தலையைத் தடவிக் கொடுத்து சிறிது நேரத்தைப் போக்கியிருக்கலாமே என்று நினைத்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாய்க் கழித்தான் திலீபன். கண்ணயர்ந்து விட்டால் பேருந்தைத் தவற விட்டுவிடுவோம் என்ற கருக்கடையும் மனதில் இருந்தது. பையன் சொன்னதுபோலவே டூவீலரில் இரண்டு காக்கி உடுப்புக்காரர்கள் மெதுவாய் ஊர்ந்து சென்றார்கள். தனிமை திலீபனை பயமுறுத்தி எதை எதையோ யோசிக்க வைத்தது. ஆபீஸில் இருக்கும் மாலினியின் உடல் அழகைப் பற்றி யோசித்தான். அவளது இடது கால் சற்று ஊனம். விந்தி விந்தித்தான் நடப்பாள். அதற்காக இரவு இரண்டே முக்கால் மணிக்கு வருத்தப்பட்டான் திலீபன்.

பையன் சொன்னதுபோல நேரத்திற்கு பழனி பேருந்து வரவில்லை. கால் மணி நேரம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. இவனோடு இன்னும் இரண்டு பேர் ஏறிக் கொண்டார்கள். பேருந்தினுள் இருபது தலைகள் இருந்தன. பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது காலை ஐந்தரை ஆகியிருந்தது. நிறுவனரின் மகன் சக்திவேலை அலைபேசியில் அழைத்து ஈரோடு வந்து சேர்ந்துவிட்ட விஷயத்தைச் சொன்னான். சக்திவேல் பார்க்கில்தான் ரன்னிங் ப்ராக்டீஸ் செய்து கொண்டிருப்ப தாயும், இங்கே வந்துவிட்டால் இருவரும் சேர்ந்தே டூவீலரில் சென்று விடலாம் என்றும் கூறினான். திலீபன் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வெளிவந்து பார்க் நோக்கி நடந்தான்.

பார்க்கில் அதிகாலையிலேயே பெண்களும் ஆண்களு மாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் டாக்டர் அறிவுரைப் படி எத்தனை வியாதியஸ்தர்களோ என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு டூவீலர் அருகில் வந்தான். வியர்வைப் பூக்களைத் துண்டால் துடைத்துக்கொண்டு டூவீலரைக் கிளப்பவும், திலீபன் பின்னால் அமர்ந்து கொண்டான். கலெக்டர் அலுவலகம் அருகே சந்தில் நுழைந்த சக்திவேல் ஒரு டீக்கடை முன்பாக டூவீலரை நிறுத்தினான். கடையினுள் கணிசமான கூட்டம் இருந்தது. காலை நேரத்திலேயே பெரிய வடைச்சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க ஒருவன் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தான். கடை கல்லாவில் முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். கடையினுள் இருந்த ஸ்பீக்கர்கள் கந்தசஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தன. சக்திவேல் இரண்டு டீ ஆர்டர் சொன் னான் பெண்மணியிடம்! ""வா தம்பி என்று புன்னகையுடன் சக்திவேலிடம் பேசியவள் ""ரெண்டு டீ என்று மாஸ்டரிடம் சத்தமாய் ஒலி எழுப்பினாள். திலீபன் "தினத்தந்தி பேப்பரை மேய்ந்தான். ஈரோடு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை கடத்தல் என்ற செய்தி இருந்தது. தாயார் கண்ணீர் விட்டு அழும் காட்சியை புகைப்படத்தில் பிரசுரித்தி ருந்தார்கள்.

மாஸ்டர் கொண்டு வந்த டீ டம்ளரை பெற்றுக் கொண்டவன் புதிய திரைப்படங்களின் கலர் விளம்பரங் களைப் பார்த்தான். தேவி அபிராமியில் "வழக்கு எண்: 18/9 என்றிருந்தது. நல்ல படம் என்று ஜனங்கள் பேசிக்கொள்வது இவன் காதில் விழுந்திருந்தது. "மாலினியோடுதான் பார்க்க வேண்டும். மாலினி சம்மதம் தெரிவிப்பாளா? இல்லை அவளை வா என்று கூப்பிட தன்னிடம் தைரியம் இருக்கி றதா? தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் இவனிடம் குனிந்து காதில் கிசுகிசுத்தான்.

""அந்த அம்மாளையும், மாஸ்டரையும், பஜ்ஜி போடுறவனையும் நல்லா ஒருமுறை பார்த்துக்கோ என்று சொல்லவும், இவனும் அவர்களைப் பார்த்துக் கொண்டான். டூவீலரில் செல்லும்போதுதான் சக்திவேல் திலீபனிடம் சொன்னான் விசயத்தை. ""பஜ்ஜி போட்டுட்டு இருந்தான்ல... அவன்தான் அந்தம்மாவோட பையன். அப்பா செத்து ஏழெட்டு வருஷம் ஆயிடிச்சு. டீ மாஸ்டரா இருக்கான்ல... அவன்தான் இப்ப அந்தம்மாவோட புருஷன். இந்தம்மா பையனும் அவனும் வாசவி காலேஜ்ல ஒண்ணா படிச்சவிங்க. ஒரு வருஷமோ என்னமோதான் படிச்சாங்க. அந்தப் பையன் தஞ்சாவூரு. இருவரும் நண்பர்களா பழக வீட்டுக்கு அடிக்கடி வரப் போக இருந்திருக்கான். முன்ன வண்டிக்கடை போட்டிருந்தாங்க ரயில்வே ஸ்டேஷன்கிட்ட.... இட்லி, தோசை வியாபாரம்தான். இந்தப் பையனும் உதவிக்கு கூடமாட நின்னான். அந்தம்மாகூட பழக்கமாயிடுச்சு.

""என்ன சார் சொல்றீங்க? பையன் தன்னோட நண்பனை கொலைதான செஞ்சிருக்கணும் நியாயப்படி பார்த்தா! என்றான் திலீபன்.

""அது உன்னைப்போல முட்டாள்கள் பண்ணுற வேலை என்றான் சக்திவேல்.

""என்ன சார் இப்படி சொல்றீங்க? என்று திலீபன் கேட்டபோது வண்டி திருவள்ளுவர் காப்பகத்தின் காம்பவுண்டினுள் சென்று பெரிய வேப்ப மரத்தின் அடியில் நின்றது.

""நீ மதுரையில் இருந்து கடைசி பஸ் பிடிச்சித்தான் தாராபுரம் வந்து சேரணும்னு திட்டம் போட்டேன் திலீபன். அன்னைக்கு உன்னை மருத்துவமனையில் பார்க்க வந்தப்ப ஒருத்தர் வாங்கி வந்த பழங்களை பிடுங்கி வீசினே ஞாபகம் இருக்கா? உன் அம்மா கிட்ட நான் மறுபடி பேசினேன் திலீபன். ரொம்ப அழுதாங்க. நீ சரியா பேசுறதுகூட இல்லைன்னு சொன்னாங்க! ஒண்ணரை மணி நேரம் தாரா புரத்துல ராத்திரில ஈரோடு பஸ்ஸுக்காக காத்திருந்தியே. 

அப்போ என்ன நினைச்சே?. 

""ஒரு பிச்சைக்காரன் இருந்தால்கூட பேச்சுத் துணைக்கு ஆவானேன்னு நினைச்சேன். சார்... ஒரு நாய் வந்துச்சு சார்... ஆனா என்கிட்ட வரலை! நேரத்தைப் போக வைக்க ரொம்ப சிரமப்பட்டேன் சார் 
என்றான் திலீபன்.

""ஒண்ணரை மணி நேரத்தைப் போக்க முடியாம, துணைக்கு ஆள் இருந்தால் தேவலைன்னு யோசிச்சு தடுமாறி வந்திருக்கியே... உன் அப்பா இறந்து எத்தனை வருஷம் ஆச்சு? நீயும் காப்பகத்துக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. நீ வந்தபிறகு அம்மா தனிமையில எத்தனை நாள் தவிச்சிருப்பாங்க. ஒருநாளாச்சும் நீ சாப்பிட்டயாம்மான்னு உன் அம்மாவைக் கேட்டிருப்பியா? திலீபன் யோசனையில் ஆழ்ந்தான். ஒருநாள்கூட அம்மாவிடம் சாப்பிட்டியா? என்று கேட்கவில்லைதான். என்ன ஒரு மடத்தனம்?

""கேட்டதே இல்லங்க சார். காலையில சாப்பிடுவேன். கிளம்புவேன். நைட்டு போனதும் சாப்பிடுவேன், தூங்கிடுவேன் சார்... தப்பு என்மேலதான் சார். அம்மா பாவம் சார் என்றான் திலீபன்.

""அம்மா பாவம்னு என்கிட்ட சொல்லாதே திலீபன். உன் அம்மாகிட்ட மன்னிப்பு கேளு! அனாதைகளா யாரும் சிரமப்படக் கூடாதுன்னு தான் என் அப்பா பத்து வருஷத் துக்கும் முன்னால காப்பகம் ஆரம்பிச்சாரு. நீ உயிரோட இருந்தும் உன் அம்மா அனாதையா யோசிக்கக்கூட கூடாது இல்லையா! என்று சக்திவேல் சொல்லும்போது திலீபனின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

********************************************************************************

வாமுகோமுவின் மற்றுமொரு சிறுகதை இந்த வார கல்கி யில் வெளிவந்துள்ளது.
அந்த இணைப்புக்கு செல்ல‌

***************************

திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷும்தான். அட, அப்படியானால் அவர்கள் இளம் ஜோடிப் புறாக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நொடியில் யூகித்திருப்பீர்கள். பின்னே இந்தக் காலத்தில் எங்கே அண்ணனும் தங்கையும் இணைந்து வந்து படம் பார்க்கிறார்கள்?

தனுஷை ‘போடா போடா’ என்று வீட்டுக்குத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள் காதலி! ‘ஒரு நிமிஷம்’ என்று தனுஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நின்றான். எங்கே அந்தப் பெண்ணின் அப்பா வீட்டின் மாடி வந்து தனுஷின் கன்னத்தில் நாலு அப்பு அப்பி விடுவாரோ! என்ற பதைபதைப்பில் பார்வையாளர்கள் திரையிலேயே கவனமாய் இருந்தார்கள். இறுதியில் காதலி, தனுஷின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடியதும் பார்வையாளர்கள் நிம்மதியானார்கள்.

தனுஷுக்கு இந்த மாதிரி கேரக்டர் பண்றது அல்வா சாப்பிடற மாதிரி. நீங்க ஒரு வாட்டி என் கையைப் பிடிச்சுட்டுப் போகவே மாட்டேன்னு நின்னுட்டு இருந்தீங்க ரமேஷ்... ஞாபகம் இருக்கா?" என்றாள் செல்வி. ரமேஷோ வேறு சிந்தனையில் இருந்தான். அவன் படத்தில் கவனமே செலுத்தாமல் வெறுமனே திரையை வெறித்துக் கொண்டிருந்தான்.

ரமேஷின் சிந்தனை முழுதும் மாலையில் நான்கு மணியைப் போல ஊத்துக்குளி ஆர்.எஸ்.போகவேண்டுமே! அம்மா அப்பாவின் கட்டளை ஆயிற்றே! என்றே யோசித்தபடி இருந்தான். அம்மா, அப்பா பேச்சை ஒரு நாள் கூட மீறியவன் இல்லை ரமேஷ். டிகிரி படிக்கையில் அரியர்ஸ் வைப்பதைப் பார்த்தவர், போதும்டா படிப்பு உனக்கு. என்னோட கடைக்கு வா! என்றதும் ‘சரிப்பா’ என்று சொல்லி விட்டான்.

 ரமேஷின் அப்பா ஜீவாபாய் ஸ்கூல் அருகே நோட்புக், ஜெராக்ஸ் என்று கூடிய கடை வைத்திருந்தார் பத்து வருடங்களாக! ஒரு வருடம் அந்தக் கடையில் பொறுப்பாய் அமர்ந்திருந்தவனுக்கு மண்ணரையில் அதேபோல் கடை ஒன்றைப் போட்டு அமர வைத்து விட்டார். கூடவே பல மாடல்களில் செல்ஃபோன்களை இறக்கி விற்பனைக் கடையாக மாற்றி ஒரு பெண்ணை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அவள் தான் செல்வி!

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்? அது தான் பற்றிவிட்டது என்கிறீர்களா? ஹயர் செகண்டரியோடு செல்வி படிப்பை முடித்துக் கொண்டவள்; மண்ணரை தான் சொந்த ஊரும். இவள் வீட்டுக்கும் ரமேஷின் வீட்டுக்கும் இரண்டே இரண்டு திருப்பங்கள் தான். செல்வியை வேலைக்கு வைத்தது இவன் ஏற்பாடல்ல! அப்பாவின் ஏற்பாடுதான். அப்பா என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று முனகுகிறீர்கள்! கடையும் வைத்துக் கொடுத்து, கடையில் ஒரு கண்மணியையும் போட்டு... அடடா! அடேங் கொன்னினானா! இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தவன் ரமேஷுக்கு லேமினேசனே போட்டு பத்திரப்படுத்தி விட்டான்.

சரி, யார் வலையை முதலில் விரித்து வீசியது? யார் போய் விழுந்து சிக்கியது என்கிறீர்களா? இருவருமே வலையைக் கையில் எடுத்து வீசிக் கொள்ளவேயில்லை! வாடிக்கையாளர்களின் முகம் கோணாமல் நடந்து கொள்ள செல்வி ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டாள். ரமேஷின் மிடுக்கான தோரணையும், அளவாய்ப் பேசும் குணத்தையும் கண்ட செல்வி உள்ளுக்குள் அவனை விரும்பத் தொடங்கினாள். ராக்காலக் கனவுகளில் ரமேஷ் கிச்சுக்கிச்சு மூட்டாமல், அடிக்கணக்கில் தள்ளி நின்றே காதலித்தான் கனவிலும் கூட. சே! கருப்பு வெள்ளையில் ஏன் பழைய படம் போல கனவு வருது? என்றே சலிப்படைந்தாள் செல்வி! ரமேஷிடம் இது பற்றிச் சொல்கையில் அவனுக்கும் அப்படித்தானாம். ஆக வலையை இருவருமே வீசி இருவருமே சிக்கிக் கொண்டார்கள்.

காதலனும் காதலியும் தினமும் பத்து மணி நேரம் பூங்கா, தியேட்டர் என்று எப்போதாவது சந்திக்காமல் எப்போதும் அருகில் இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி கொடுத்து வைத்த காதலர்களாக ஒரு வருடத்தை ஓட்டி விட்டார்கள் இருவரும்! ஞாயிறு கடை விடுமுறை என்றாலும் தியேட்டர்கள் தான் திருப்பூரில் வீதிக்கு இரண்டு இருக்கிறதே! இதோ இன்றும் கூட தியேட்டரில் தான் இருக்கிறார்கள்.

ரமேஷ் தன்னுடைய பிரச்னையை, தியேட்டரினுள் சீட் தேடி அமர்ந்ததும் செல்வியிடம் சொல்லிவிட்டான். அவளுக்கு அது பிரச்னையாகவே படவில்லை. நம்பிக்கை நார் அவள் கையில் இருக்க உதிர்ந்த பூக்கள் வரிசையாய் வந்து ஒட்டிக் கொள்ளும் என்ற தைரியத்தில் சினிமாவில் ஆழ்ந்திருந்தாள். உனக்குப் பெண் பார்க்கப் போகிறோம். இன்று நான்கு மணிக்கு. அங்கே இங்கே என்று ஊர் சுற்ற போய் விடாதே!" காலையில் இவன் அப்பா நவீன ரக குண்டை இவனுக்கு எரிந்தார்.
சரிப்பா."

வேறு என்ன பேசப் போகிறான் அப்பாவை எதிர்த்து?

இது ஒரு பிரச்னையா? பெண்ணைப் பார்த்துட்டு பஜ்ஜி, சுவீட் சாப்பிட்டுட்டு காஃபி குடிச்சுட்டு வாங்க... பெண்ணைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாப் போச்சு!"

அது பாவம் செல்வி, பொண்ணா இருந்துட்டு இப்படிச் சொல்றியே! எல்லாம் இந்த அப்பாவால வந்தது! எனக்குக் கல்யாணம் பண்ணிவையுங்கன்னு நான் கேட்டேனா? தக்காளிப் பழமாட்டம் என் கடையில ஒரு பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டவரு யோசிக்க வேண்டாம்... தக்காளியை பையன் கொத்திக்குவான்னு!"

நான் வேணா நேரா உங்க வீடு வந்து உங்க அப்பாகிட்ட ரமேஷ் என்னோடு பாய்னு சொல்லவா?" என்றவளை பொய்யாய்க் கோபித்து, நானே பார்த்துக்கறேன் என்று சொல்லி வந்து விட்டான் ரமேஷ்.

இதோ -
பெண் வீட்டார் குடும்பம் கும்பிடு போட்டபடி வாங்க வாங்க" என்று அவர்கள் வீட்டு வாசலில் நின்று வரவேற்றது இவர்களை! ரமேஷின் மாமாவும், சித்தப்பா, சித்தியும் கூட வந்திருந்தார்கள். சொன்னால் சொன்ன மாதிரி டான்னு நாலு மணிக்கே வந்துட்டீங்க. வாங்க உட்காருங்க" பெரிதாய் மீசை வைத்திருந்தவர் ஹாலில் இருந்த நாற்காலிகளைக் கைகாட்டி இவர்களை அமர வைத்தார்.

பெண்ணுக்கு தாய் மாமாவாம்! மீசை வைத்த பொன்னம்பலம் போல இருந்தார். அவரே சகல விஷயங்களையும் சரளமாய்ப் பேசிக் கொண்டே இருந்தார். பெண்ணின் அப்பா அவர் பேசுவதற்கெல்லாம் பொம்மை போல தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தார்.

புரோக்கரு சொல்லி இருப்பாருங்களே... எங்க பொண்ணு ஊத்துக்குளி ஸ்கூல்ல டென்த் வரைக்கும்தான் படிச்சுதுங்க. அப்புறம் நம்ம மளிகைக்கடையை மூணு வருஷமாய் அதே ஏவாரம் பார்த்துக்குதுங்க! இதுக்கு அக்காவை சேலத்துல கட்டிக் குடுத்து பொண்ணு ஒண்ணு பையன் ஒண்ணுங்க! இன்னிக்குப் பொண்ணு பார்க்க வர்ற தகவலைச் சொன்னதும் நானும் வர்றேன்னு புடியாய் புடிச்சுதுங்க. அவ்ளோ தூரத்துல இருந்து ஏஞ்சாமி இதுக்குன்னு.... எல்லா காரியம் நல்லபடி நடந்தா மண்ணரை ஒரு எட்டு மறுபடி நாம ஒருக்கா சேர்ந்து போயிட்டு வருவோம்னு சொன்னேனுங்க..." என்று பேசியபடி இருந்தார்.

எடுத்துச் சாப்பிடுங்க" என்று சொல்லி பெண்ணின் அம்மா ஸ்வீட், மிக்சர் கொண்டு வந்து வைத்தார். நம்ம ஊரு தானே! கூச்சப்படாம எடுத்துச் சாப்புடுங்க மாப்பிள்ளை" என்று மீசைக்கார மாமா சொன்னதும், இவனும் கூச்சம் துறந்து ஸ்வீட் எடுத்துச் சாப்பிட்டான். காஃபி தம்ளர்களைத் தட்டில் தாங்கிக் கொண்டு பெண் வந்து ஒவ்வொருவர் முன்பாகவும் தட்டை நீட்ட, ஆளுக்கொரு தம்ளரை எடுத்துக் கொண்டார்கள். பொண்ணுப் பிள்ளை முகத்தில் ஏதாவது வெட்கம் தட்டுப்படுகிறதா என்று பார்த்தான். அப்படி இல்லாமல் சாதாரணமாய் இருந்தாள் அவள். அழகிலும் எந்தக் குறையும் இல்லை! இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்பவன் கண்ணைத் தின்று விட்டு வந்தவனாகத்தான் இருப்பான்!

என் பையன் நான் சொல்றதைத்தான் கேட்பானுங்க. காலம் வேற மாறிப்போச்சு. எதுக்கும் தனியா ரெண்டு பேரும் பேசி அவங்க சம்மதத்தைச் சொல்லட்டுமே!" என்றார் இவன் அப்பா! அதற்கு யாரும் மறுப்பே சொல்லாததால் வீட்டு படிக்கட்டுகள் ஏறி மாடிக்கு இருவரும் வந்தார்கள். எண்ணி இரண்டு வார்த்தைகள்தான் அவர்கள் பேசினார்கள்!
என்னைப் பிடிக்கலைன்னு எங்கப்பாகிட்ட சொல்லிடுங்க" என்றான் ரமேஷ்.
ஏன் அப்படிச் சொல்லணும்? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கே!" என்றாள் அவள்.

நான் ஒரு வருஷமாய் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அதுக்குள்ள திடீர்னு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க! பேச முடியலை!"
சரி நடங்க" இருவரும் கீழே வந்து விட்டார்கள்! பெண்ணின் மாமாவுக்கு ஆச்சர்யம்! அதுக்குள்ள போன சுடியில பேசிட்டு வந்துட்டாங்களே!
சொல்லும்மா... என்ன ரெண்டு பேருக்கும் சம்மதம்தானே!" என்றார் மீசைக்கார மாமா!

எனக்கு வேண்டாம் மாமா இவரு.அவருக்கு ஒரு காதலி இருக்காளாம் திருப்பூர்ல. அதை அவரு அப்பா, அம்மா கிட்டகூடச் சொல்றதுக்கு தைரியம் இல்லாதவரைக் கட்டிக்கிட்டு நான் காலம்பூராவும் சிரமப்படணும்..." சொல்லிவிட்டு பொண்ணுப்பிள்ளை வீட்டுக்குள் போய்விட்டது!.

இன்று மண்ணரை பக்கம் யாரேனும் போனால் செல்ஃபோன் மாடல்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டிக் கொண்டும், விளக்கிக் கொண்டும் நிற்கும் ரமேஷை பார்க்கலாம். கூடவே கல்லாவின் முன் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி காதில் வாக்மேன் செருகிப் பாடலை ரசித்தபடி அமர்ந்திருக்கும் செல்வியையும் பார்க்கலாம்!

திங்கள், ஜூலை 09, 2012

புள்ளி பிசகிய கோலம்

நன்றி :இனிய உதயம்...நக்கீரன் குழுமம்..

            முருகம்பாளையத்தில் அருணாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் பாலகிருஷ்ணனுக்கு சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. கிராமத்தில் மொத்தமே முப்பது வீடுகள்போலதான் இருந்தன. ""ராமசாமி கவுண்டர் வீடு எதுங்க?'' என்று மாரியம்மன் கோவில் வாயிலில் நின்றிருந்த பெரியவரிடம் இவன் விசாரிக்கவும், ""இதென்னப்பா இதான்'' என்று அவரே கூட்டி வந்து விட்டார்.

""ராமசாமி, உன்னியப் பாக்குறதுக்கு ஒரு பையன் வந்திருக்குது பாரு'' என்று புங்கைமர நிழலில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த பெரியவரிடம் அவர் சொல்லவும், கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த ராமசாமி கண்திறந்து இவனைப் பார்த்தார்.

""யாருன்னு அடையாளம் தெரியலையே அப்புனு! தொரட்டிக் காடு ராசாத்தி பையனாட்ட சாடை தெரியுதே!'' படுத்திருந்தவர் எழுந்து கட்டிலிலேயே காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார். உருமாலைத் துண்டை அவிழ்த்து விசிறி ஈக்களை விரட்டினார்.

""நீங்க பேசீட்டு இருங்க. ஆடுகள் தெக்கால காட்டுக்குள்ளார போயிடும். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர்றேன்'' என்று பால கிருஷ்ணனைக் கூட்டிவந்த பெரிய வர் கவ்வக் கோலை ஊன்றிக் கொண்டே சென்றார்.

""ஐயா, நானு திருப்பூர்ல பனியன் கம்பெனில கட்டிங் மாஸ்டரா இருக்கணுங்க ஐயா. சொந்த ஊரு தஞ்சாவூரு. திருப்பூருக்கு பொழைக்க வந்து வருஷம் மூனு ஆயிப் போச்சுங்க. ஆண்டிகாட்டுல தானுங்க ஒரு சின்ன ரூம்ல தங்கியிருக்கணுங்க. பக்கத் துலயேதானுங்க என்னோட கம்பெனி'' என்றான் பால கிருஷ் ணன் பெரியவரிடம்.

""அதெல்லாஞ் செரி அப்புனு... மகராசனா பொழை... என்கிட்ட என்ன சோலின்னு வந்திருக்கீன்னு தான் நெகா சிக்க மாட்டிங்குது. காமாலையா உனக்கு... வேர் 

அரைச்சுத் தர்றதுன்னா காத்தால நேரத்துல வெறும் வவுத்துல இருக்கத்தான் மருந்து குடிக் கோணுமப்பா... மத்தியானத்துல வந்திருக்கியே அவ்ளோ தூரத்துல இருந்து! இப்பிடி  எம் பக்கத்துல கட்டல்ல உட்காரு'' என்றவர் அருகில் கட்டிலில் ஓரமாய் பாலகிருஷ்ணன் உட்கார்ந்தான்.

""உனக்கு பச்சத் தண்ணி குடுக்கக் கூட ஊட்டுல ஆள் இல்லியப்பா... என் சம்சாரம் ஆடுகள ஓட்டிட்டு காட்டுக்கு போயிட்டா! மருமவ ஸ்கூல் டீச்சராப் போறா! என்னோட பையன் தவுடு புண்ணாக்கு வாங்கிட்டு வர சென்னிமலை போயிட்டான். காலுக்கு 

அவட்டை போனதுல இருந்து ஊட்டுப் படி கூட ஏற முடியறதில்லைப்பா. வந்த சோலிய நீ சொல்லு.''
""உங்க பொண்ணு அருணா என்கூடத்தான் கம்பெனில வேலை செய்யுதுங்க ஐயா.''

""அருணாவா! ஓஹோ! இப்ப திருப்பூர்லயா இருக்குது? எங்கியோ பாம்பேன்னு அன்னிக்கி ஒருக்கா சொன்ன ஞாவகமப்பா... நல்லா இருக்காப் லையா? என்னைய அப்பன்னு எங்கீம் சொல்லாதே!''

""அருணா சொல்லலீங்க ஐயா. கம்பெனில வேலைக்கி சேரும்போது வீட்டு அட்ரஸ், அப்பா- அம்மா பேரு எல்லாம் எழுதிக்குடுக்கணுங்க  ஐயா. அப்போத்தான் வேலைக்கே சேர்த்திக்குவாங்க. இல்லின்னா கம்பெனில சேர்த்திக்க மாட்டாங்க. ஒரு நாலஞ்சி மாசமா வேலைக்கி வந்துட்டு போயிட்டு இருக்குதுங்க... ரொம்ப அமைதியான பொண்ணு. ஜாஸ்தி யாருகிட்டயும்  பேச்சு வச்சுக்கறதே இல்ல.''

""எங்க தங்கி இருக்குதாம்?''

""பாண்டியன் நகர்ல எம்பட மாதிரியே சின்ன ரூம்லதானுங் கய்யா... கொஞ்சம் தூரம்தான். நடந்து போயிட்டு வந்துட்டு இருக்குதுங்க. ஒரு வாட்டி காய்ச்சல் வந்து என்னோட ரூம்ல கெடையில கெடந்தனுங்க ஐயா... போன மாசம்தானுங்க. அப்போ அருணா வந்துதான் எனக்கு கஞ்சி வெச்சு ஊத்திட்டு போச்சுங்க. வெளியூர்ல இருந்து வந்து தனியா அனாதையா நோவுல கெடக்கானேன்னு, கூட வேலை செஞ்ச பழகினவங்ககூட நெனச்சிப் பார்க்கலை பாருங்க!''

""சரி உடுப்பா... இதைச் சொல்றதுக்கா திருப்பூர்ல இருந்து பஸ் ஏறி இந்த பட்டிக்காட்டுக்கு வந்தே நீ? இந்தக் காலத்து புள்ளைங்களை நெனச்சா எனக்கு ஒரு நிதா இருக்குது!''

""இல்லீங்கய்யா... எப்பிடி உங்க கிட்ட இந்த விஷயத்தை ஆரம்பிக் கிறதுன்னுதான் சின்ன தயக்கம்... நான் கூலிக்காரப்பயல்தானுங்க... உங்களைப்போல காடு கரை இல்லாதவன் நானு...''

""சுத்தி வளைக்காமப் பேசுப்பா... என்ன பிரச்சனை உனக்கு?''

""வந்துங்கய்யா... அருணாவை பொண்ணு கேட்கத்தான் நான் வந்தது'' என்று பாலகிருஷ்ணன் இழுவை போட்டுப் பேசினான்- பெரியவரின் முகம் போகும் போக்கைப் பார்த்தபடி!

""ஏப்பா, உனக்கு பைத்தியமா? பைத்தியக்காரனாட்ட என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கே?''

""இல்லீங்கய்யா... என்னோட அப்பா அம்மாதான் இந்த விஷயத்தை உங்ககிட்ட வந்து பேசி இருக்கணும். நான் தனியா வந்து உங்ககிட்ட பேசுறது தப்புத்தான்.''

""எல்லாமே தப்புதான். இனி பெரியவங்க வேற கூடி உட்கார்ந்து பேசணுங்றியா இந்த விசயத்தை... ஆளும் அவனும்... போப்பா நீ மொதல்ல.''

""இல்லீங்கய்யா...''

""என்ன நொள்ளீங்கய்யா...'' என்றவர் கட்டிலை விட்டிறங்கி தொண்டுப்பட்டி நோக்கிச் செல்லவும் இவ னும் எழுந்தான். பெரியவர் முதுகில் கயிற்றுக் கட்டிலின் கயிற்றுக் கோடுகள் அச்சு மாதிரி பதிந்திருப் பதைப் பார்த்தான். அதே போல் அவர் வாழ்விலும் எதுவோ அருணாமீது அச்சுபோல பதிந்திருக் கிறதோ என்ற நினைப்பில், ""போயிட்டு வர்றேனுங்கய்யா'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பாலகிருஷ்ணனுக்கு உறக்கம் வந்தபாடில்லை. இன்று நேற்றல்ல. என்று அருணா இவன் அறைக்குத் தேடிவந்து இவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அரிசிக் கஞ்சி செய்து கொடுத்துவிட்டுப் போனாளோ அன்றிலிருந்தே அப்படித்தான்.

 கம்பெனியில் அருணாவிற்கு எல்லாரும் பட்டப்பெயர் வைத்தி ருக்கிறார்கள். ஊமைச்சி! ஒரு பெண் எதுவும் பேசாமல் தன் வேலையில் மட்டுமே கவனமாய் இருந்தால் பட்டப்பெயர் சூட்டி விடுவதா? நண்பர்கள் தான் ஊமைச்சி என்று அவளைக் குறிப்பிட்டுப்  பேசுகிறார்கள் என்றால் பெண்களும்கூட அவளை ஊமைச்சி என்றுதான் பேசுகிறார்கள். இதில் பெயர் சூட்டியதே கூலிபாளையத்திலிருந்து வரும் கோகிலா தானாம்.

கட்டிங் மாஸ்டர் சுந்தரம் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவன் இரண்டு தினங்களுக்கும் முன் இவனிடம், "ஊமைச்சி என்னை கன்னத்துல அடிச் சிட்டாள் பாலகிருஷ்ணா. சினிமாவுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். இது ஒரு தப்பா? வரலைன்னா வரலைன்னு சொல்லிட்டுப் போறது! கையை நீட்டுறது என்ன பழக்கம்? ஒரு நாளைக்கு வசமா என்கிட்ட சிக்கீட்டு சீக்கி அடிக்கப் போறா பாரு ஊமைச்சி. அன்னைக்குத் தெரியும் சுந்தரம் யார்னு அவளுக்கு! டெய்லரிங் செக்சன்ல எத்தனை பொண்ணுக இருக்குதுக... சந்தோ ஷமா கலகலப்பா பேசிட்டு சிரிச்சுட்டு... நீயும் பார்க்கிறே தானே! இவ மட்டும் எந்த நேரமும் புருசனை தின்னுட்ட வளாட்டதானே வேலை பார்த்துட்டு இருக்கிறா! சரி, ஒன்னும் மண்ணா கெடந்து வேலை செய்யுறோ மேன்னு எதாச்சும் தமாஸ் பேசினா திருப்பி ஒரு பேச்சு உண்டா? மொறைப்பு வேற ஊமைச்சிக்கி. இப்பத்தான் நேத்திக்கி கல்யாணம் ஆனவளாட்ட குனிஞ்சு தலை நிமிராம ஒரு அன்ன நடை! ஓடி உதைக்கலாம்னுதான் இருக்கு! பத்தினின்னு மனசுல நெனப்பு' என்று பேசியிருந்தான்.

பாலகிருஷ்ணனுக்குத்தான் சங்கடமாக இருந்தது. நேசிக்கும் பெண்ணைப் பற்றி நண்பன் சொன்னால் சங்கடம்தானே! ஆனால் அருணா பாலகிருஷ்ணனிடம் கூட நின்று நாலு வார்த்தை பேசியதில்லையே! ஒருதலை விருப்பம்தானே இவனுடையது! இருந்தும். "சுந்தரம் மோசமான ஆள். அவனை நீ கைநீட்டி அடித்தது தவறு அருணா. எதற்கும் கவனமாய் இரு. அவன் எப்போது என்ன செய்வான் என்று தெரியாது' என்றுதான் சொல்லிவிட வேண்டுமென நினைத் திருந்தான். ஆனால் அதற்குள்தான் இன்று எல்லாமும் நடந்து முடிந்துவிட்டதே!

சுந்தரம் சொன்னதுபோல் செய்துவிட்டான். காலையில் டீ டைமில் அருணாவை சுவரில் சாத்தி அவள் உதட்டை நான்கு பேர் பார்க்க கடித்து விட்டான். 

 அருணாவும் சும்மா இருக்கவில்லை. சுந்தரத்தை கையால் கீழே தள்ளி விட்டு காலால் நான்கு எத்து எத்தி விட்டாள். "கோ' என்று வேறு அழு தாளே! அது என்ன அவள் குரல் முரட்டுக் குரலாய் அப்படி மாறி விட்டது?

""அடப் பன்னாடைகளா! 

எங்க போனால்தான்டா என்னை நிம்மதியா வாழவிடுவீங்க? 

நானொரு பொட்டையின்னு காட்டிக்காம வேலை புடிச்சு ஆறு மாசமா வவுத்துப் பாட்டுக்கு வேலை செஞ்சனே! அதுலயும் மண் அள்ளி போட்டுட்டீங்களேடா! அதுகூட பொறுக்கலையாடா உங்களுக்கு? செத்தாத்தான் உடுவீங்களாடா! எங்க தாண்டா எங்களை நிம்மதியா பொழைக்க உடுவீங்க? பஸ் ஏறினாலும் பாதியில இறங்கிடறோம். ரயில் ஏறினா லும் பாதியில இறங்கிடறோம். நிம்மதியா அக்கடான்னு தங்கி வேலை செஞ்ச என்னை துன்பம் பண்ணி பாதி யில போக வச்சுட்டீங்ளேடா! இனி எத்தனை நாளைக்கு ஊர் ஊரா சுத்துவனோ, எத்தன நாளு கொலப்பட்டினி கெடப்பனோ! எப்ப எனக்கு சாவு வருமோ! ஐயா! எங்க ஊடும் ஒத்துக்கல- எங்க ஊரும் ஒத்துக்கல! அப்பன் ஒத்துக்கல பெத்த ஆயாளும் ஒத்துக்கல!'' என்று பாட்டாய் பாடிக்கொண்டு போய் விட்டது அருணா என்கிற அருணாச்சலம் கம்பெனியை விட்டே!

எங்கு தேடி இந்த நகரில் கண்டுபிடிப்பான் பால கிருஷ்ணன் அந்த திருநங்கையை? கண்டுபிடித்தாலும் இவனால் என்ன செய்துவிட முடியும்? அவன் மனசிலிருந்து அருணா என்கிற திருநங்கை வெளிறே சிலகாலம் ஆகும்தான்

.http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13445

வியாழன், ஜூலை 05, 2012

சுந்தரேசன் C/Oவிஜயா

வாமுகோமுவின் ஒரு அழகிய கதை இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது..படித்து கருத்துகளை நமக்கு அனுப்பவும்...நன்றி...

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

குட்டிப்பிசாசு

Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum  Kidaikatha  Orey Sontham Nalla ‘NANBARGAL’  I am very lucky for  your ‘friendship’ Kutty Pisasu : 13/8/2011/ 10/34 Pm.
 உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே... அச்சம் கலைந்தேன், ஆசையினை நீ அணைத்தாய்! ஆடை கலைந்தேன். வெட்கத்தை நீ அணைத்தாய்! கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்... கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி... உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்.
பழனிச்சாமி மிதமான போதையில் வீட்டில் படுக்கை மீது கிடந்தான். செல்போனிலிருந்து இரு காதுகளுக்கும் ஹெட்போன் ஒயர் சென்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அரவிந்தசாமி கவிதை படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் 'பீப் பீப், பீப் பீப், எஸ்.எம்.எஸ்.' என்று குழந்தையின் குரல் ஒன்று சப்தமாய்  அவன் காதில் கவிதைக்கு இடையே நுழைந்தது. சாமத்துல நிம்மதியா ஒரு பாட்டுக் கேக்க விடறானுகளா இந்த கம்பெனிக்காரனுக.. Only for youம்பானுக! எனக்கு மட்டும்தானாமா! மத்தவிங்களுக்கு கிடையாதாமா! 72 ரூவாய்க்கி ரீ சார்ஜ் போட்டுட்டோம்னா 72 ரூவாய்க்கிம் கத்திக்கலாம். Only for you.  இன்னிக்கு மட்டும்தான் இந்த ஆப்பர்ம்பாங்க! சலிப்பாய் ஆடியோ பிளேயரை விட்டு வெளிவந்து எஸ்.எம்.எஸ்.ஸைத் திறந்து படித்தான் பழனிச்சாமி!
வந்தது பார் கடுப்பு. அடக் கருமம் பிடிச்சவளே! என்னோட நட்பு கிடைச்சது உனக்கு லக்காடி? என்ன நினைப்புல சாமத்துல எனக்கு மெசேஜ் விட்டே! மப்பும் கொறஞ்சு போச்சு! கடையும் சாத்தியிருப்பானுக! புளியமரம் கெழடு தட்டிப் போனாலும் புளிப்பு மட்டும் குறையாதாமாங்கறாப்டி. வயசு 27 ஆயிட்டாலும் உன்னோட லொள்ளுக் குசும்பு மட்டும் போகவே இல்லடி பிசாசு! பாட்டுக் கேட்கிற மூடும் போச்சென செல்போனை அணைத்து டேபிளில் வைத்துவிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து தலையணையைக் கட்டிக் கொண்டான்.
பத்து நாட்களுக்கும் முன்பாக மதிய நேரத்தில், "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். உன்னை விரும்பினேன் உயிரே" என்று இவன் செல்போன் பாடி அழைத்தது. எடுத்தவன் மனுஷ்ய புத்திரன் ஸ்டைலில் "ஹல்லோவ்.. சொல்லுங்க.." என்று இழுத்தாற்போல் கேட்டான். "ஓ! என் நெம்பர் கூடத் தெரியலையா!" என்று கீதாதான் பேசினாள் நீண்ட காலம் கழித்து! "சொல்லுடி" என்றான் இவன். இனி எத்தனை காலம் பேசாமல் இருந்தோம் என்பதை அவளே சொல் வாள் என்று  நினைத்தான். அப் படியேதான் சொன்னாள், இரண்டரை வருடம் என்று!  "இது என்ன புது நெம்பராடி?" என்றதற்கு, "இதுதான் எப்பவும் இருக்கிறது. நிஜம்மா குட்டிப்பிசாசுன்னு என் பேர் வரலை! " என்றாள். "ஆனா நீங்க பேச மாட்டிங்க. கட் பண்ணிடுவீங்கன்னு நினைச்சுட்டேதான் பண்ணினேன்" என்றாள்.
"நான் ஏன்டி கட் பண்ணுறேன். அதும் நீ கூப்பிட்டு! ஆமாம், நமக்குள்ள என்ன சண்டையின்னு இத்தனை நாள் பேசாமல் இருந்தே!"
"என்ன சண்டையின்னே தெரியலை?"
"எனக்குத் தெரியும். .  நான் புத்தகத்துல எழுதிட் டேன்."
"புத்தகத்துல என்னைப் பத்தி  முழுசா எழுதிட்டா  எல்லாம் முடிஞ்சு போயிடும். அதனாலதான் எழுதாம இருக்கேன்னு சொல்லி இருக்கீங்க! எழுதிட்டீங்க!"
"ம். சண்டை என்ன தெரியுமா. . .  நட்பா பழகுறதுன்னா பேசிக்கலாம்னு நீ சொன்னே. கூடப் படுத்துக்கிட்டவளை எப்படி இனி தோழியா பார்த்துப் பழக முடியும். முடியாதுன்னு சொல்லிட்டேன்."
"நான் அப்படி சொன்னனா? ரெண்டு மூணு தடவை உங்க சம்சாரத்தோட நீங்க வண்டியில போறப்ப பார்த்தேன்."
"வயிறு எரிஞ்சுதா!"
"இல்ல. சங்கடமா இருந்துச்சு.  உங்க ரெண்டு  பேரையும் ஜோடியா பார்த்துட்டாவே எனக்கு . . . எப்படி சொல்றதுன்னு தெரியல. சங்கடமா இருக்கும். ஆமா, புது வண்டி வாங்கியிருக்கீங்க. சொல்லவே இல்ல! மொதல்ல என்ன சொன்னீங்க. வண்டி எடுத்தா என்னைத்தான ஃபர்ஸ்ட்டு உட்கார வச்சு ஓட்டு வேன்னு."
"வண்டி எடுத்து ஒன்னரை வருசம் ஆச்சுடி.
 பதினைஞ்சாயிரம் கிலோ மீட்டர் ஓடியாச்சு."
"என்னைக் கூப்பிட்டுப் பேசணும்னு தோணவே இல்லையா?"
"எப்பாச்சிம் நினைச்சுக்குவேன்டி. பேசிடுவனோன்னு தான் உன் நெம்பரை டெலிட் பண்ணிட்டேன். ஆனா நீ நல்ல குண்டாயிட்டேடி. இப்போத்தான் சூப்பரா அழகா இருக்கேடி. அதும் நைட்டில ஓடியாந்து கட்டிக்கலாங்ற மாதிரி."
"இப்ப கொஞ்சம் பரவாயில்ல. இன்னும் குண்டா இருந்தேன் ஆறு மாசம் முன்னாடி."
"அப்போ கடைசியா பேசுறப்ப ஆறு மாசத்துல எதிர்பார்க்கலாம்னு சொன்னே! உன்னைக் கூட்டிட்டு இப்போ சுத்துறானே அந்த சுதாகர். அவனையாச்சும் நீ கட்டியிருக்கலாம்டி!"
"அவனையா! அவன் ஒரு ஆளு!"
"ஏய்! உங்க அம்மா கூட என்.ஜி.ஜி.யோ காலனிக்காரனைத்தான் எம்புள்ள கட்டிக்குவான்னு பேசுச்சாம்ல. சொன்னாங்க!"
"அது லொள்ளு பேசுறவங்களுக்குத் திருப்பி சொல்லியிருக்கும்."
"பின்ன எதுக்குடி அவனோட வண்டில ஏறிட்டுப் போறே! ஊருக்குள்ள பேரைக் கெடுத்துக்கறே?"
"எனக்கு ஒடம்பு சரியில்லைன்னா ஒரு போனைப் போட்டா உடனே வந்துடுவான். கூடவே நிற்பான்."
"அவனையும் என்னைப் பண்ணினாப்ல டார்ச்சர் குடுப்பியே! தாங்குறானா!"
"ம்... என்னடி செல்லம், சாரி செல்லம்னு வழிவான்."
"உனக்கு பொச்சு அட்டாரிக்கு ஏறிக்குமே! முலை புடிக்கிறானா?"
"என்ன கேட்டீங்க?"
"இல்ல, பஸ் ஸ்டாப் திண்டுல உட்கார்ந்திருந்தியாம். சர்ர்னு வந்து வண்டிய நிப்பாட்டினவன் மளார்னு ஸ்டாண்டு போட்டுட்டு வந்து ரெண்டையும் லப்புனு புடிச்சு கசக்கினானாமே. ரோட்ல ஆள் வர்றது கூட தெரியாம என்னடி இது! பார்த்த ஆள் சொல்லுச்சு."
"இப்படி எல்லாம் பேசினா எவளாச்சும் பொண்ணு உங்ககூட பேசுவாளா?"
"நான் அப்படித்தான் பேசுவேன்."
"ஐய்யோ, நீங்க ரொம்ப மாறிட்டீங்ளாட்ட இருக்குதே! முன்னெல்லாம் இப்படிப் பேச மாட்டிங்க!"
"ஆமான்டி மாறிட்டேன். ஒரே மாதிரியா இருக்கணுமா?"
"சரிங்க, நாளைக்கும் கூப்பிடறேன். ஓ.கே.பை!"
"ஏய்! இருடி. இப்ப எதுக்கு பை சொன்னே?"
"எல்லாம் பேசிட்டு யாருக்கும் சொல்லிப் பழக்க மாயிடிச்சு."
பழனிச்சாமி காலையில் எட்டு மணி போல குட்டிப்பிசாசிற்கு ரிங் விட்டு கட் செய்தான். அது இப்படித்தான் இப்படி மாறிப் போயிருந்தது. இதையும் கீதாவே சொன்னாள். 'முன்ன எல்லாம் நான்தான் ரிங் விட்டு மிஸ்டு கால் குடுப்பேன். இப்ப என்னடான்னா நீங்க குடுக்கறிங்க' என்று. அதற்கும் இவன் விளக்கம் சொன்னான். 'செல்லுல, நெட்டுல போய் பையனுக்கு கேம்ஸ் ஏத்தி வச்சேன்டி. காசு போட்டா போதும். தேங்க்ஸ் ஃபார் யூசிங் கேம்ஸுன்னு மெரேஜ் வருது. பார்த்தா பைசாவை ஸ்வாகா பண்ணிடறாங்க. காசே போடறதில்லடி’ என்றான். அப்போது அவள் அழைப்பு வந்தது.
"என்னது, இன்னிக்குக் காத்தாலயே மிஸ்டு கால்!"
"விசயம் இருக்கு கீதாஞ்சலி."
"என்னது, இன்னொருக்கா சொல்லுங்க. யப்பா. இத்தனை வருசத்துல இப்போத்தான் மொதமொதலா என் பேரைச் சொல்றீங்க. எப்பவும் ஏய்யி, டீய்யி, கிறுக்கின்னுதான கூப்பிடுவீங்க! சொல்லுங்க."
"கரெக்ட்டா கேட்டுக்க. ஒரு பொண்ணும் பையனும் ரொம்ப நட்பா இருக்காங்க. கேட்கறியா கீதாஞ்சலி?"
"சொல்லுங்க. கேட்டுட்டுதான் இருக்கேன்."
"நட்போட இருக்காங்ளா. அசந்தர்ப்பவசமா, ஒரு தடவை ரெண்டு பேரும் வாய்ப்பு கெடைச்சதால தப்பு பண்ணிக்கறாங்க. இது வந்து சரியா? தப்பா? அவங்க வந்து ப்ரண்ட்ஸ்."
"தப்பு."
"தெரியுதில்லடி எருமெ. பின்ன என்ன மசுத்துக்குடி எனக்கு சாமத்து மெசேஜ் விட்டே? என்ன, என் நட்பு கிடைக்க இவ கொடுத்து வச்சிருக்கோணுமாமா!"
"நான் எங்கே விட்டேன்."
"எனக்கு வந்தக்காட்டித்தாண்டி காலையில கூப்பிடறேன்."
"ஐய்யோ. சாரி சாரி. மொத்தமா ஐம்பது நெம்பருக்கு அனுப்பினேன். உங்களுக்கும் வந்திடுச்சாட்ட! சரி, உங்க செல்லுல நெட் போட்டிருக்கீங்ளா, எனக்கும் பழக்கி விட்டீங்கன்னா... நானும் போட்டுக்குவேன்ல."
"நீ எதைப் பார்க்குறதுக்கு பழக்கி உடச் சொல்றீன்னு தெரியுது. என் கிட்ட டிவி.டி. தட்டு இருக்கு. அதுலயும் செல்லுல இருக்குறதுகதான் இருக்கு. வயிறு ரொம்ப பார்த்துக்க."
"ஐய்யே. தட்டெல்லாம் வேண்டாம். ரெண்டு பேர் ஊருக்குள்ளார அந்தத் தட்டு வச்சுட்டு என்கிட்ட வந்து சித்த நேரம் போடுன்னாளுக. ஐய்யோ என்னோட ப்ளேயர்ல அதைப் போட மாட்டேனுட்டேன். சரி, ப்ளேயரை குடு. அவங்க வீட்டுல போய் பார்த்துட்டு வந்து தர்றதா கேட்டாளுக. தரமாட்டேனுட்டேன்."
"ஏய் பாவம்டி! இப்படி நீ பாவத்தை தேடிக் காதடி."
"பின்ன என்னோட டி.வி.டி. தான் அந்தப் படம் பார்க்க கிடைச்சுதா!"
"ஏன்டி. ஊர்க்காரிக செல்லுல படம் வச்சிட்டு பார்த்துட்டு கிக்கிக்கீன்னு சிரிச்சுட்டு திரியறாளுகளாமா! பாருக்கா அவனுக்கு எத்தாச்சோடு. . . வேனுக்குள்ளாரையே மாட்டுறான்னெல்லாம் பேசிட்டு இருக்காளுகளாமா! யாரு இவளுகளுக்குப் படம் ஏத்திவிடற புண்ணியவான்?"
"நானும்தான் என்னோட செல்லுல மதனா ட்ரஸ் இல்லாம ஆட்டம் போடறது, ஈங்கூர் பள்ளிக்கூடப் பொண்ணு பையன் கூட இருக்கறது எல்லாம் வச்சிருந்தேன். பார்த்துட்டு டெலிட் பண்ணிடுவேன்."
"ஊர்க்காரிக எல்லாரும் ரொம்ப அட்வான்ஸா போயிட்டீங்கடி."
"நீங்க இன்னும் சுந்தரி கிட்ட போயிட்டிருக்கீங்ளா? கலைஞர் இலவச வீடு கட்டீட்டு இருக்கா. ஹலோ, என்ன பேச்சு நின்னு போச்சு?"
"இல்ல உன் புத்தி இன்னும் அப்படியேதான்டி இருக்குது. அதெ கொரங்குப் புத்தி. மறந்து தொலைச்ச கருமங்களை எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு டென்சன் பண்றேடி. இப்பவும் சொல்றேன். நான் போனது நிஜம்தான். ஆனா அது எப்பவோ. . . இன்னொருக்கா சுந்தரி, வாணின்னு இது மாதிரி பேசுறாப்ல இருந்தா உன்னோட பேசுறது கடைசியா இருக்கும். சரி, பத்து நாளா பேசிட்டு இருக்கியே, என்னைப் பார்க்கணும்னு தோணலை?"
"தோணுது. ஆனா எங்க பார்க்குறது?"
"வழக்கமா சென்னிமலை காட்டுலதான்."
"அங்கெல்லாம் இப்போ போக முடியாது. தெரியாதா உங்களுக்கு? ஊர்க்காரிக ஆடுகளை உள்ளார ஓட்டுறதில்ல, விறகுக்குப் போறதில்ல. நான் ஒருக்கா விறகுக்குப் போய் கார்டு, வாச்சர்கிட்ட மாட்டிட்டேன். ஐநூறு ரூவா மொய் எழுதிட்டாங்க. கரட்டுல எங்க காசு தர்றது?  வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அந்த வாச்சரு ரெண்டு தடவை வந்தான் காசுக்கு. இன்னொருக்கா வந்தீன்னா கையைப் புடிச்சு இழுத் தான்னு சத்தம் போடுவேன்னு கத்தினேன். வர்றதில்ல. கரட்டுல சுத்தீட்டே இருக்காங்க. உங்களோட என்னைப் பார்த்துட்டான்னா! வம்பே வேண்டாம்."
"போடி, இப்படி ஒரு ஊர்ல இருந்துட்டு பார்க்க முடியல்லைன்னுட்டு. ஆனா நீ குண்டா அழகா வேறஆயிட்டியேடி.  முந்தா நேத்து அன்னமார் தியேட்டர்கிட்ட திண்டுல  நான் வர்றப்ப ஒரு பொண்ணு உட்கார்ந்து பேசிட்டு இருந்துச்சு செல்போன்ல."
"ம். சொல்லுங்க."
"எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா! குண்டுப்பொண்ணு. அதும் நைட்டி போட்டுட்டு. . . ஜம்முன்னு."
"இருப்பா இருப்பா!"
"அங்க எங்கடி உட்கார்ந்திருந்தே ஈவ்னிங்ல?"
"பாலுக்குப் போயிருந்தேன். போன் வந்துது, பேசிட்டிருந்தேன்."
"சாந்தாமணி படிச்சுட்டியா?"
"நூறு பக்கம் படிச்சதோட சரி."
"ஜான்ஸி கூட சைக்கிள்ல போறதெல்லாம் படிச்சுட்டியா?"
"அதெல்லாம் முடிஞ்சுது. இப்ப என்ன புத்தகத்துக்கு அவசரமா?"
"இன்னொரு தோழி படிக்க வேணும்னா. என்கிட்ட இருந்ததே அந்த ஒரு பிரதிதான். இருந்த பிரதிகளை வெளியூர்ல இருந்து வந்த பணக்காரப் பிச்சைக்காரங்க குடுன்னு எடுத்துட்டுப் போயிட்டாங்க."
"அது எனக்கே குடுத்துட்டதால்ல நெனச்சுட்டு படிச்சாப் போவுதுன்னு விட்டுட்டேன். டைம் வேணும்ல! சரி, 180 படம் நல்லா இருக்கு. தட்டு தர்றேன்னு சொன்னீங்கள்ல. . ."
"உனக்குத்தான் டைம் இல்லைல்ல! 180 பார்க்க மட்டும் டைம் இருக்காடி?"
"எனக்கு வேண்டாம். இனி நீங்க எந்தப் படமும் தர வேண்டாம். அந்த புக்கு வேணுமா?"

"ஏய். . . நீ பாட்டுக்குப் படிச்சுட்டு வீட்டுல உன் சூட்கேஸ்ல வச்சிருப்பே. உன் அக்கா படிச்சாலும் பிரச்சினை. யார் ஊருக்குள்ளார அந்தப் புத்தகம் படிச்சாலும் துன்பம்டி. வேற புக்கா இருந்தா வச்சுக்கோன்னு சொல்லிடுவேன். சரி விடு, நான் உயிர்மையில இன்னும் அஞ்சு பிரதி கேட்டு வாங்கிக்கறேன். ஆமா, அட்டை போட்டுக் குடுத்தனே. உங்கொம்மா பார்க்கலைல்ல?"
"க்கும். அட்டையைப் பிரிச்சு வீசிட்டு எங்கம்மா என்னன்னு பார்த்துட்டு இது ஏதுடின்னுது. சுகந்தி அக்காட்ட இருந்துச்சு. சீமெண்ணெய் வாங்குறப்ப என்கிட்ட குடுத்துச்சு. . . ரேசன் கடையில, நான் பையில போட்டுட்டு மறந்துட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டேன். உங்க போட்டோ பார்த்துட்டு ஒன்னும் சொல்லலை... படிச்சுட்டே குடு போன்னுடுது."
"ஆனா ரீல் ஓட்டுறதை மட்டும் நீ நிறுத்தவே இல்லடி."
"சரி, ஈவ்னிங் கூப்பிடறேன். ஓ.கே.பை."
"ஏன்டி கிறுக்கி. பை சொல்லாதடின்னு எத்தனை வாட்டி சொல்றது. . ."
"மறந்து மறந்து போயிடுது. அப்படியே பழக்க மாயிடுது."
  
"ஹல்ல்லோவ்வ். சொல்ல்ல்லுங்ங்ங்க!"
"என்னடி நீயும் மனுஷ்ய புத்திரனாட்டவே பேசுறே?"
"அது யாரு? நீங்க பேசிப் பேசி எனக்கும் பழக்கமாயிட்டுது. யார் கூப்பிட்டாலும். ஹல்லோவ்வ்னுதான் ஆரம்பிக்கிறதே! சரி  விடுங்க.. நான் உங்களுக்கு யாரு? வப்பாட்டிதானே!"
"என்னடி ஈவனிங்ல சண்டை போட்டுக்கலாம். ஒரு வருஷம் கழிச்சு பேசிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? ரமணர்தான் கேட்டுட்டே இருந்தாரு. நான் யாரு? யாருன்னு! நான் எப்படி சொல்வேன் அப்படி?"
"சொல்லுங்க, உங்களுக்கு நான் யாரு?"
"நீ எனக்குத் தோழி கிடையாது. தெரிஞ்சவளும் கிடை யாது. நான் ஆசைப்பட்டவ, நான் விரும்பினவ. உன்மேல வச்ச காதல் இன்னும் மனசுக்குள்ள அப்படியேதான் இருக்கு. அது எங்கீம் போகலை. உன்னோட நினைப்பு அழியணும்னா நான் செத்துட்டா அழிஞ்சுடும்."
"அப்புறம் ஏன் கூப்பிடலை! நானா கூப்பிட்டதாலதான பேசுனீங்க."
"இதென்ன வம்புடி? பேசலைன்னா என் காதல் காணாமப் போயிடுமா? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலைடி. அது வந்து உன் கிறுக்குத்தனத்தாலதான். சண்டையப் போட்டுட்டு மூணு மாசம் பத்து நாள், நாலு மாசம் இருபது நாள்னு கணக்கு சொல்றவ நீ!"
"கட்டியிருந்தாலும் நாம பிரிஞ்சிருப்போம்."
"தெரியுதில்ல. எதுக்கு நான் யாருன்னு கேள்வி உனக்கு? சரி, நீ யாருடி எனக்கு?"
"ம். உங்க மொதல் பொண்டாட்டி... போதுமா!"
"அப்படின்னா இன்னைக்கு நைட் உன்னைப் பார்க்கணும்டி. உன் மடியில படுக்கணும்."
"நெனைச்ச உடனே முடியுமா. எங்கம்மா ஊருக்குப் போகட்டும். சொல்றேன்."
"நான் சொல்லட்டா. எனக்கு ராசியே கிடையாது. உனக்கும் கிடையாது. சரி, உன் பர்த்டே சுடிதார் நல்லா இருக்கா?"
"உங்க செலக்சன். நீங்க வாங்கிக் குடுத்தது! நல்லா இருக்கு. சரி இன்னிக்கி சினிமா போலாமா?"
"நான் வரலை."
  
"ஹலோ, எங்கேடி இருக்கே?"
"காங்கயம் ரோட்டுல என் ஆட்டுக்குட்டி தங்கங்களை மேய்ச்சுட்டு இருக்கேன்."
"நான் வரவா?"
"ஒன்னும் வேண்டாம். நம்ம ஊர்க்காரிக மூணு பேர் ஆடு இங்கதான் மேய்க்கறாங்க."
"அவிங்களைக் கொன்னு போடலாம்டி."
"நான் கூப்பிட்டு எப்பவும் நீங்க வரலைன்னு சொன்னதே இல்லை தெரியுமா!"
"அதுக்குத்தான் என்னை வரவேண்டாங்றியா, நான் வராததுக்குக் காரணம் இருக்குடி. அன்னைக்கு சுடிதார்  எடுக்க பெருந்துறை கூட்டிட்டுப் போனேன். ஒரு ரெண்டு மணி நேரம் இருந்திருப்பியா! உடனே கொண்டு வந்து இறக்கி விட்டுட்டேன். போயிட்டே! பின்னால எனக்கு எவ்ளோ சிரமம் தெரியுமா! முன்ன அடிக்கடி போனதால தெரியல. இப்போ சங்கடம்டி. நீ கிட்டயே இருந்துட்டு இருக்கணும்னு தோணுதடி. நீ வான்னு இப்போ கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன். எனக்கு இனி பகல் ஆகாது. சரியா பேசக்கூட முடியாது."
"அப்போ வெளிய என் கூட வரமாட்டிங்க!"
"வருவேன். அன்னைக்கு மாதிரி ஆறு மணிக்கு சென்னிமலையில கொண்டுவந்து இறக்கி விடமாட்டேன். எட்டு மணிக்குத்தான்."
"அப்படின்னா நான் வரலை."
"விட்டுரு!"
"மாறிட்டீங்க!"
"ஆமாம். சரி, நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா?"
"ஐய்யோ. சரீஈஈஈ. காதே போச்சு. நான் வச்சுடறேன்"
  
காங்கயம் சாலையில் மராம்பாளையம் பிரிவு தாண்டி கீதாவைப் பிடித்தான் பழனிச்சாமி. ஆமை ஊர்வதுபோல டி.வி.எஸ்.ஸில் இடதுபுற சாலையில் ஊர்ந்து வந்தவள் இவனைக் கண்டதும் தடுமாறி ப்ரேக் பிடித்து புளியமர நிழலில் நிப்பாட்டிய முறையில் நிஜமாகவே பயமான அந்தப் புதுப்பழக்கம் தெரிந்தது! சிவன் மலையில் மாமா வீட்டில் நின்ற இவள் டி.வி.எஸ்.ஸை எடுத்துக்கொண்டு சென்னிமலை வருவதாகவும், ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்ததால் பயமாக இருப்பதாகவும் கீதா போனில் சொன்னதால் இவனும் வர்ரேன் இருடி என்று வந்துவிட்டான்.
"நான்தான் வந்துடறேன்னு சொன்னேன்ல. எதுக்கு வராட்டி?"
"முதல்ல ஸ்டேண்டு போட்டு நிறுத்துடி. அப்படியே ரெண்டு நாயம் பேசிட்டுப் போலாம்னு வந்தேன். சுடிதார்ல நீ குண்டா தெரியலடி."
"நீங்க என் மெமரி கார்டுல பதிவு பண்ணிக் குடுத்த பாட்டுகள் எல்லாம் சூப்பர். உங்களுக்கும் துளி ரசனை இருக்குது! ஆமா, அந்தப் படம் ஒரு படம் கூட ஏத்துலிய?"
"அடுத்தவங்க செய்யுறதை நாம ஏன் பார்க்கணும்? என்ன அப்படி பாக்குறே?"
"ஆனா முன்ன எல்லாம் இப்படிப் பேசமாட்டிங்க. இரண்டரை வருசத்துல எத்தனை பேரைப் பார்த்தீங்ளோ!"
"ஒரே ஒருத்தி. அவளும் திருப்பூரு. அதும் நான் செய்யலை. அவளே செஞ்சுட்டா! நம்புறியா! ஒரே ஒரு வாட்டிதான். வெட்கமோ என்ன எழவோ. . . பேசுறதில்ல அவ. நானும் துன்பம் பண்றதில்ல."
"நம்புறேன். இருங்க போன் வருது. ஹலோ! டேய் லூசு. நான் எப்போ கூப்பிட்டேன். நீ எப்போ கிளம்புறே? ஒன்னும் வர வேண்டாம் நீ. நான் சென்னிமலைகிட்டே வந்துட்டேன்."
" யாருடி போன்ல?"
" சுதாகர்தான். வண்டி எடுத்துட்டு வரப் போறேன்னு சொன்னேன். அப்போ இதோ வர்றேன்னான். இப்ப வர்றானாமா! "சரி உங்க பர்த்டேக்கு என்ன வேணும்?"
"நீதான் வேணும்! நான் எதுக்கடி ஆசைப்பட்டிருக்கேன். ஒரு கீச்செயின் கேட்டேன். அதை வாங்கிக் குடுக்கவே ஒரு வருசம் பண்ணினே. என்னடி போனை கட் பண்ணிட்டே இருக்கே? பேசு!"
"ஹலோ.. அட லூசு. நான்தான் வந்துட்டேன்னு சொன்னன்ல, சரி நீ போனை வை! நான் கிளம்புறேன்ங்க.. அந்த லூசு வந்துட்டு இருக்குது."
"போயிட்டே இரு!"
"நீங்க?"
"என்னைப் பத்தி என்ன. நீ போடி!" என்றதும் அவள் டி.வி.எஸ்.ஸைக் கிளப்பிக் கொண்டு செல்லவும் இவனுக்கு மண்டை ஏனோ சுழல்வது போலிருந்தது. யார் வந்தாலும்  போனாலும் மயிரு என்று நிற்பவள் செல்வது இவனுக்குப்  புதிதாக இருந்தது! ‘என்ன மசுத்துக்குடா இந்தக் கிறுக்கியப் பார்க்க வண்டி எடுத்துட்டு வந்தே பழனிச்சாமி’ என்று இவனையே கேட்டுக் கொண்டான்.
  
‘‘ஹலோவ்! என்ன பேச்சையே காணம் . . ."
"என்ன பேசுறது? அதான் அவன் வர்றான்னதும் பயந்தடிச்சுட்டு நீ கிளம்பிட்டியே! என்னைப் புதுசா இருக்கீங்கன்னு சொல்லிட்டு நீதான்டி இப்போ மாறிட்டே! கீதான்னா யாருன்னு எனக்குத் தெரியும். நீ கீதா இல்லடி! நீ பயந்தாம்பேடி கீதா."
"என்ன பண்றது என் நிலைமை  அப்படி. உடம்பு சரியில்லைன்னா போன் பண்ணினதும் வர்றான். கூடவே ஹாஸ்பிடல்ல நிற்பான். பணம் கேட்ட உடனே குடுப்பான். உங்களோட பார்த்தான்னா. . ."
"போடி மயிறுன்னுட்டு போயிடுவான். இப்படி எல்லாம் பயந்துட்டு நீ இருக்கிற அளவுக்கு அவன் உன்னை வச்சிருக்கான்ல. சூப்பர்டி. சரியான ஆள்கிட்டதான் இருக்கே! இனிவந்து அவனா? நானாங்ற கேள்வி வருது எனக்கு! நீ கல்யாணம் பண்ணியிருந்தீன்னா எனக்கு நோ ப்ராப்ளம். ஆனா அதையும் நீ செய்யலையே! உன்னோட தோழி தேவிகூட அங்க இங்கேன்னு யார்கூட வேணாலும் சுத்தினாடி. ஆனா கல்யாணம் செஞ்சுட்டு இப்போ அவளுக்குக் கொழந்தை. அதுக்குக் கூட மூணு வருஷமும் ஆச்சு."
"பழையபடியே நீங்க என்கிட்ட பழகணும்."
"எப்படி என்னால பழக முடியும். உன்னை என் வண்டியில உட்கார வச்சு கூட்டிட்டுப் போவேன். அவன் எங்காச்சும் பார்ப்பான். இல்லே யாராச்சும்  அவனுக்குச் சொல்வாங்க! பிரச்சினை உனக்கு வரும். நீ போன்ல என்கிட்ட பேசியே திருப்தின்னு இருப்பே! எனக்கு போன்ல எப்படிப் பேசுறதுன்னே தெரியாது. பேசிட்டே இருந்தீன்னா கிட்டே வச்சுப் பார்க்கணும்னு எனக்கு ஆசை வந்துட்டே இருக்கும். சும்மா இருந்தேன்டி. இரண்டரை வருஷமாச்சு பேசின்னு என்னைக் கூப்பிட்டு பேசி நோக அடிக்கிறியேடி! சரி, எப்போ பார்க்கலாம்?"
"எங்கம்மா எங்காச்சும் போகணும்ல! ஏய்! ஏய்! தள்ளுடி. இந்த ஆட்டுக்குட்டி பாருங்க. முகத்தைக் கடிக்க வருது.. போடி."
"சரியா சொல்லுடி. முகத்தைக் கடிக்க வருதா... பால் குடிக்க வருதா? மங்காத்தா படம் பெருந்துறை தேவிசித்ராவுல ஓடுதாம். வரவா? முன்னாடி டேங்க் கவர்ல ஒரு குட்டியை நான் வச்சுக்கறேன். இன்னும் ஒன்னை நீ மடியில பிடிச்சுக்க. பால்கனி டிக்கெட் நாலு எடுத்துட்டுப் போய் உட்காரவச்சு, சினிமாஸ்கோப்ல ஆட்டுக்குட்டிகளுக்கு அஜித் படம் காமிப்போம்."
"இங்க இதுக தொல்லைன்னா வீட்டுல மீனா தொல்லை. அவ நைட்டு எம்பக்கத்துல படுத்துதான் தூங்குவா. கொர்ர்ர்ர்னு!"
"மீனாவா? அவ எவடி புதுசா?"
"பூனையச் சொன்னேன்."
  
"ஹலோவ்! என்னது நைட் ஒன்பது மணிக்குக் கூப்பிடறீங்க?"
"காலையில இருந்து உன் போனை எதிர்பார்த்தேன்டி!"
"நான் இன்னிக்கு திருப்பூர் போயிருந்தேன்! பிஸி!"
"சாப்டாச்சா?"
"ம், சப்பாத்தி... ம் குருமா! நீங்க என்ன தண்ணியடிச்சுட்ட மாதிரி தெரியுதே!"
"ஏன் வாசம் அடிக்குதா? பரவாயில்லயே செல்போன்ல கூட வாசம் போகுதே. உன்னாலதான்டி சரக்கு குடிச்சேன்."
"நான் என்ன பண்ணேன்? என்னாலயா?"
‘‘நிஜமாவே தெரியலையா! சரி, காலண்டரைப் பாரு!"
"ஹா! தேதி இருபத்திஏழு. சாரி, நெஜமாவே மறந்துட்டேன். என்னோட பர்த்டேக்குப் பின்னாடின்னு நினைச்சுட்டு இருந்தேன். சாரி."
"எப்பவுமே பெர்த்டே நான் வாழ்க்கைல கொண்டாடினதே இல்லடி. நீ எல்லாம் கொண்டாடுடறதைப் பார்த்துத்தான் ஆசைப்பட்டேன். பேரெழில்குமரன்னு கோயமுத்தூர் கொழந்தை பையனுக்கு என் பர்த்டே தெரியும்! அவனும் ஒரு வாழ்த்து சொல்லலை."
"சரி விடுங்க. திங்கள்கிழமை முழுதும் உங்க கூடவே இருக்கேன். கொண்டாடிட்டா போவுது!"
"போடி இவளே! தீபாவளி அன்னைக்குத்தான் பட்டாஸ் வெடிக்கணும். முடிஞ்சதுக்குப் பின்னாடி என்னடி வெடி?"
  
"ஹல்லோவ்! முக்கியமான போன் வருது, கட் பண்ணுன்னு சொன்னீங்க. அந்த முக்கியமானதையே பேச வேண்டிதுதான? எப்டி இருந்துச்சு தெரியுமா? என்னை விட முக்கியமானது எது உங்களுக்கு?"
"இதுக்குப் பதில் சொல்ல முடியாது கீதா. சின்னப்பிள்ளையாட்டவே பேசிட்டு இருக்கே நீ!"
"ஒரு விஷயம் இருக்கு. சொன்னா நீங்க தப்பா எதாச்சும் நினைச்சுக்குவீங்களோன்னும் இருக்கு."
"ஆரம்பிச்சுட்டீல்ல! சொல்லிடு."
"சிவன்மலை சித்தி இருக்கில்ல. அதுமோட பொண்ணு!"
"என்னடி இழுத்து இழுத்துச் சொல்றே?"
"என்னோட தங்கச்சிதான்! வக்கீலுக்குப் படிச்சிட்டு இருக்கிற பையனோட பழக்கமாயிடுச்சு. இங்க கொண்டு வந்து சித்தி உட்டுட்டு நீதான் சாமி இதைச் சரி பண்ணிடணும்னு விட்டுட்டுப் போயிடுச்சு."
"என்னடி சரி பண்ணனும்? தங்கச்சிங்றே! வக்கீலுங்றே!"
"ஆறேழு நாள் தள்ளிப் போயிடுச்சாமா! நான் போய் மெடிக்கல்ல நின்னு எப்படி வாங்குறது?"
"நான் போய் வாங்கித்தரணும்! அடி, இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டு மூணு நாலு வருசம்  ஆயிடுச்சுடி! மெடிக்கல்ல நான் போய் கேட்டா மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்ளா' ன்னு கேட்பாப்லயே!" அதும்மில்லாம இது பாவம்டி! ரப்பர் கீது போட்டுத் தொலைய வேண்டிதுதான. மாத்திரை ரொம்ப கடுசா இருக்கும்டி. ஆமா, அவளுக்கு எத்தனை வயசு?"
"பதினாலு!"
"தாங்குவாளாடி? வேற எதாச்சும் ஆயிடிச்சுன்னா கம்பி எண்ணப் போகோணும்."
"அதெல்லாம் தின்னுட்டு  செனப் பன்னியாட்ட இருக்கா!"
"இந்த மாதிரி ஆயிடிச்சுச்சுன்னு அவளே அவன்கிட்ட பேசவேண்டிதுதான! அவனே வாங்கிக் குடுப் பான்லே!"
"அவன் ஊர்லயே ஆகாவழியாமா! கோயமுத்தூர்ல இப்ப படிச்சுட்டு இருக்கான்."
"இந்தப் பொது சேவையெல்லாம் உனக்கெதுக்குடி?இதெல்லாம் சின்னப் பிரச்சினைன்னு நினைச்சுட்டியா?"
"தங்கச்சியாச்சே! எதாச்சும் பயந்துட்டு
செஞ்சுக்கிட்டாள்னா?"
"ஆமா, உன் புத்தி உன்னை உட்டு எங்க போகும். உன்னையாட்டமேதான் அவளும் இருப்பாள்னு நினைக்கிறியா?"
"இத பாருங்க. கிண்டல் வேண்டாம். எப்படியாச்சும் சாமின்னு சித்தி இங்க கொண்டு வந்து உட்டுட்டு போயிடுது."
"சரி ஐநூறு ரூவா ஆகும்."
"எத்தனை ஆனாலும் பரவாயில்ல!"
"எத்தனை நாள் சொன்னே?"
"ஏழு நாள்."
"கரெக்ட்டா தெரியுமா? சரி, எப்படியும் பதினைஞ்சு நாள் ஆயிருக்கும். ஒண்ணரை மாசம்டி கணக்கு! நாளைக்கு வாங்கிட்டு வந்து தர்றேன். என்கிட்ட காசு இல்ல."
"ம். சரிங்க!"
  

"ஹல்லோவ்! அந்த பாக்கெட்டை ஒடச்சேன். நீங்க சொன்ன மாதிரி தனியா ஒன்னும் நாலு ஜோடியாவும் இருக்கு."
"அது மிசோபிரஸ்டால் மாத்திரைடி. ஒன்னை, நைட் சாப்பிடறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால போட்டுக்கச் சொல்லு! ரெண்டை, நாளைக் காலையில வெறும் வயித்துல போடணும்."
"சின்ன பாக்கெட்ல சக்கரை மாதிரி கவர்ல இருக்குதே. க்ளாஸ்ல துளி போட்டுத் தண்ணி ஊத்தினேன். வெடிக்குது!"
"அது படிகாரக்கல்லுடி. மாத்திரை கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு வச்சிருக்கிறது. அதைக் குடிச்சு வச்சுர வேண்டாம்." 
  

"ஹல்லோவ்! என்னோட பெர்த்டே வாழ்த்து மெசேஜ் வந்துதாடி?"
"ஓ பார்த்துட்டேன். 27 வயசுக் கிழவிக்கு வாழ்த்துன்னு அனுப்பி இருக்கீங்க! லொள்ளு!"
"எதோ ஒன்னு! வந்துச்சா இல்லையா?"
"வந்துச்சு. வந்துச்சு! நீங்க எடுத்துக் குடுத்த ட்ரஸ்தான் போட்டிருக்கேன்."
"எங்கே இருக்கே? கோவில்லயா? இந்த வருடமாச்சிம் கடவுளே... எனக்கொரு புருசனைக் கொடுன்னு வேண்டிக்கடி!"
"எதுக்கு அவன் லைப்பும் நாசமாகறதுக்கா? என்னை யாரு கட்டிக்குவா? என்கிட்ட என்ன இருக்கு? குறைஞ்ச பட்சம் ஆறு எழு பவுன் நகை இல்லாம இந்தக் காலத்துல எவன் கட்டிப்பான்? எல்லாரும் கேட்கறாங்கன்னு நீங்களும் கல்யாணம்னுட்டு! எனக்குக் கல்யாணம் பிடிக்கலே."
"என்னடி ஹாரன் சப்தம் கேட்குது. எவன் உன்னுதை அடிக்கிறான்?"
"லொள்ளு. ஈரோட்டுல இருக்கேன். நான், அம்மா, அக்கா வந்தான் வென்றான் படம் பார்க்க!"
"மறுபடியும் ஹாரன் சப்தம் கேட்குதடி?"
"கேட்கும் கேட்கும்."
"கேக் எல்லாருக்கும் குடுத்தியா? எனக்கு வேற கையில எடுத்து வாயில போட்டு கேக் திங்கத் தெரியாதே!"
"எனக்கும்தான் தெரியாது. ஊட்டி விட்டால்தான். சரி, ஒண்ணு கேட்பேன்..."
"மறுபடியுமா? கேளு கேளு!"
"மாத்திரை வாங்கிக் குடுத்தீங்க. சரி ஆயிடிச்சு. . . எனக்கா இருக்குமோன்னு துளி கூடவா நீங்க சந்தேகப் படலை."
"நீ கேட்டே, நான் வாங்கிக் குடுத்தேன். அதை உன் தங்கச்சிக்குக்  குடுத்தியா? பக்கத்து வீட்டுக்காரிக்குக் குடுத்தியா? அதைப்பத்தி எனக்கென்ன?"
"எப்படி இவ்ளோ தெளிவா பேசுறீங்க! இருக்கீங்க!"
"நான் அப்படித்தான். சரி, எப்போ பார்க்கலாம்?"
"பார்க்கலாம். சான்ஸ் கிடைக்குறப்ப சொல்றேன், சரி, ஈவ்னிங் கூப்பிடறேன்."
"இருடி... ஒரே நிமிசம் அடுத்த வருசம் உன் பிறந்த நாள் வரைக்கும்"
"சொல்லுங்க"
"அஞ்சு படம் பார்க்கலாம், அஞ்சு தடவை நைட் மீட் பண்ணலாம். 1000 கிஸ் பண்ணலாம். இன்னிக்கி ஈவ்னிங் சான்ஸ் கிடைச்சா ஒரு அஞ்சு கிஸ் பண்ணிட்டம்னா மிச்சம் 995 தான் . . . போதுமா? இல்ல ரெண்டாயிரம் பண்ணிடலாமா!"
"அது ஏன் அஞ்சு படம்?"
"அதுக்கும் மேல பார்த்தோம்னா சண்டை போட்டுக்குவோம்."
  

"ஹல்லோவ்! பழனிச்சாமியா?"
"ஆமாம், சொல்லுங்க. பழனிச்சாமிதான்."
"நான் ஈரோடு பிரதீப் பேசுறேன் பழனி. உங்க கதை படிச்சேன். அது உங்களுக்கு வேண்டாம் பழனி. அணில் கடிச்ச பழமா இருந்தா சாப்பிடலாம். இது பன்னி கடிச்ச பழம். கேளுங்க. . . உங்களுக்கு ரொம்ப ஆசையா. . . வீட்டுல மனைவியைக் கூப்பிட்டு பகல்ல கூட ஒன்னு எடுத்துக்கங்க. தயவுசெஞ்சு கேளுங்க. . . நான் உங்க அண்ணன்மாதிரி. வீட்டுல ஒரு கடப்பாறை வச்சிருக்கீங்க. பெரியசாமி வந்து கேட்கறாரு. இந்த மாதிரி பந்தல் போட குழி தோண்ட வேணும்னு. . . குடுக்கறீங்க. அடுத்த நாள் சின்னச்சாமி வந்து கடப்பாறையைக் கேட்கறாரு. இந்த மாதிரி வீட்டுல செப்டிக் டேங்க் அடச்சிக்கிச்சு. குத்தீட்டும் தர்றேன்னு... நீங்க குடுத்துடுவீங்ளா? இரும்பு கடப்பாறையைக் குடுக்கவே யோசிப்பீங்ளா, மாட்டீங்ளா? உங்ககிட்ட இருக்கிறது தோல் கடப்பாறை! உயிருள்ள கடப்பாறை! பத்திரமா வச்சிருக்கணுமா இல்லையா! தப்பா நினைச்சுக்காதீங்க!"

    "இல்லங்க!"
  

"ஹல்லோவ்! என்ன உங்க போனும் பிஸி பிஸின்னே சொல்லுதே!"
"இல்லடி. நண்பர்கிட்ட பேசிட்டு இருந்தேன்."
"எனக்கு ஏனோ என் லைப்பை நெனச்சா ஒரே சங்கடமா இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் தாங்கிக்கறது. எங்கம்மா ரெண்டு நாள் நல்லா இருக்குது. மூணாவது நாள் சண்டை கட்டுது! ஒரே தலைவலி எனக்கு!"
"அதுக்குத்தான் ஈரோட்டுல கண்ணாடி போட்டதா சொன்னியே!"
"என்னேரமுமா போடுவாங்க? வீட்டுல இருக்கப்ப போடுவேன். அது ஃப்ரேமும் சரியில்ல! நாளைக்கு ஈரோடு போலாமா? கூட்டிட்டுப் போறீங்ளா? ரொம்ப வலியா இருக்கு!"
"ஊருக்குள்ள எல்லோரும் கைஆள்  வச்சிருக்காளுகன்னு சொன்னே! உன்னோட கை ஆள் சுதாகர் என்ன ஆனான்?"
"வேலையில இருக்கிறவனை ஏன் தொந்தரவு செய்யாட்டி!"
  
"இப்ப உங்களால வரமுடியுமா? முடியாதா?"
"என்னையும் கை ஆள்னு இன்னொரு இடத்துல நீ சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்!"
"உங்களைச் சொல்வேனா!"
"சரி, நான் என்னவா நினைச்சிட்டு வண்டி எடுத்துட்டு வர்றது? உனக்கு ஃப்ரண்டுன்னா? ஊட்டுக் காரன்னா?"
"நீங்க எப்படியும் வரவேண்டாம். உங்களை நான் எப்பவும் கூப்பிடலை. பின்ன எப்போ பார்த்தாலும் அவனை வச்சுட்டே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்? என்னோட பேசப் பிடிக்கலைன்னா சொல்லுங்க. பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனை வச்சுடுங்க!"
"ஏய்! மராம்பாளையத்துக்குகிட்ட தனியா நின்னேன்டி. அவன் வர்றான், நான் போறேன்னு வண்டிய எடுத்துட்டுப் போயிட்டேடி. அதே நேரத்துல நான் செத்துப் போயிட்டேன்டி."
"இப்ப என்ன உங்களைக் கட்டிக்கோணுங்க றீங்ளா?"
"ஏய் வாடி! இதுக்கெல்லாம் எனக்கென்னடி பயம்! வா, பொட்டி ஒண்ணு தூக்கிட்டு ரெண்டு துணிமணியைப் போட்டுட்டு வாடி. நாம ஓடிப்போலாம்!"
"பின்ன, அவன் மூணாயிரம் அஞ்சாயிரம் கேட்டால் உடனே எப்படியாச்சும் பொறட்டிக் கொண்டு வந்து குடுக்கறான். இப்போ டாக்டர்கிட்ட போறதுக்காக மோதிரத்தையும், கம்மலையும் அடமானம் வச்சிருக்கேன். அதையும்  அவன்தான் இனி வந்து எடுத்துக் குடுப்பான். நீங்க குடுப்பீங்ளா அஞ்சாயிரம்! உங்ககிட்ட இருக்கா?"
"அப்போ காசுதான் மனுசனை நிர்ணயம் பண்ணுது இல்லையாடி. காசு இருந்தாப் போதும் அப்படித்தான! என்னோட வாழ்க்கைல முதல் முதலா இப்போதான்டி... உன் வாயில கேட்ட பின்னாடி தான்டி அதோட அருமை தெரியுது!"
"நான் நீங்களும் சத்தம் போட்டுப் பேசுனீங்களேங்கறதுக்காகச் சொன்னேன்!"
"என்னோட காதுக்குள்ளார ஒரு பொண்ணோட சத்தம் அஞ்சாயிரம், மூணாயிரம் குடுப்பியா, குடுப்பியான்னே கேட்குதுடி. என் அம்மா, என் பொண்டாட்டி காசோட அருமையைப் பத்தி தேங்க்ஸ்டி!  உன்னால நான் காதலைக் கத்துக்கிட்டேன், வெறுப்பைக் கத்துக்கிட்டேன், ஏமாத்துறதை சொன்னப்பகூட எனக்கு மண்டைல ஏறலடி! கத்துக்கிட்டேன், புள்ளைங்களைப் பத்தி கத்துக்கிட்டேன். எல்லாத்தையும் விட இப்போ கத்துக் குடுத்தே பார்! இதுதான்டி பெருசு. ரொம்ப தேங்க்ஸ்டி!"
"எங்கம்மா வருது. நாளைக்கிக் கூப்பிடறேன்."
ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter