>> Tuesday, August 17, 2010


கனடா: 'அகதிகளிடம்' விசாரணை ஆரம்பம்

கனடாவில் அகதித் தஞ்சம் கோரி கடந்த வெள்ளிகிழமை அங்கு சென்ற 490 தமிழ் அகதிகள், திங்கட்கிழமை முதல் அந்நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள் என கனடாவின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
எம் வி சன் சீ எனும் கப்பல் மூலம் இவர்கள் கனடாவை சென்றடைந்திருந்னர். இந்தப் பயணத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது எனவும், அவர் கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டார் எனவும் கனடாவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பலில் இருந்த 490 பேரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை தமிழர்களை ஏற்றிவந்த கப்பல்

"கப்பலில் இருந்த ஒவ்வொருவரும் குடிவரவு தொடர்பான நீதிபதி முன்னர் நிறுத்தபடுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் அதன் பிறகு அந்த நீதிபதி, அந்த தனி நபர் வெளியில் செல்லும் வகையில் விடுதலை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவை எடுப்பார் என்று" கனடாவின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஸ்டீவன் கீரீன்
பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் இருக்கும் சிறார்கள் எப்படி கையாளப்படுவார்கள் என்கிற கேள்வியும் பல்தரப்பில் எழுந்துள்ளது.

"தஞ்சம் கோரும் நபர்களில் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பிரித்துப் பார்க்கபப்பட மாட்டாது. அவர்களது மனுவை பரிசீலனைக்கு எடுக்கும் நீதிபதி அனைவரையும் ஒரே அளவு கோளில்தான் பார்ப்பார்" என்று அந்த வழக்கறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அப்படி பார்க்கும் போது, ஒவ்வொரு தனி நபரும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்களா என்பதையும், அவர்களின் உடல் நிலையையும் நீதிபதி கவனத்தில் எடுப்பார் என்றும் அதைத்தொடர்ந்து அவர்கள் பின்னாளில் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளுக்கு வர வேண்டுமா என்பது குறித்தும் அந்த குடிவரவு நீதிபதி முடிவெடுப்பார் என்றும் ஸ்டீவன் கிரீன் கூறினார்.

இந்தக் கப்பலில் 70 வயதான இரு முதியவர்கள் இருந்தனர் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter