>> Wednesday, June 9, 2010




ஐனாதிபதியின் வருகையும் -எதிர்ப்பும்




இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாள் அரசு முறைப் பயணமாக செவ்வாய் கிழமை மாலை புது டெல்லி வந்து சேர்ந்தார்.
இந்த விஜயத்தின் போது இந்திய ஐனாதிபதி பிரதீபா பாட்டில், பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இரு தரப்பு உறவுகள் குறித்த பல விடயங்கள் இந்த விஜயத்தின் போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம் இலங்கை அதிபரின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த ஆர்ப்பட்டங்களில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இலங்கை அதிபரின் உருவ பொம்மையும் சில இடங்களில் எரிக்கப்பட்டது

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்த முயன்றபோது வைகோ உள்ளிட்ட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்களையொட்டி சென்னை துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்படிருந்தது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் இலங்கை அதிபரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter