>> Friday, June 4, 2010





இஃபா: முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு



மும்பையை தலைமையகமாகக் கொண்ட இந்திய திரைப்படத்துறை கடந்த பத்து வருடமாக தமது திரைப்பட விழாக்களை உலகெங்கும் உள்ள நகரங்களில் நடத்தி வருகின்றது.
தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்தத் திரைப்பட விருது வழங்கும் வைபவங்களை ஏற்பாடு செய்வது இஃபா என்று அழைக்கப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் அமைப்பாகும்.

இந்த வருடத்துக்கான அந்த அமைப்பின் விழா இலங்கையில் வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. உண்மையில் இந்திய துணைக்கண்டத்தில் இந்த அமைப்பின் விருது வழங்கும் விழா நடத்தப்படுவதும் இதுதான் முதல் தடவையாகும். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்த விழா ஒரு ஊக்கமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், சில முன்னணி இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த விழாவை பகிஸ்கரித்துள்ளமை, அதற்கு ஒரு பெரும் அடியாக பார்க்கப்படுகின்றது.


அமிதாப் பச்சன் வருவது உறுதியில்லை
இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விழாவுக்காக இலங்கையில் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆனால், சென்னையை தளமாக கொண்ட தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் இதனை முற்றாக பகிஸ்கரித்திருக்கிறார்கள்.

இந்த விழா குறித்து மிகச் சில இலங்கையர்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இஃபாவுக்கு பொறுப்பாளரான சப்பாஸ் ஜோசப் அவர்கள் இந்த விழா இலங்கைக்கு ஒரு ஊக்கமாக அமைய வேண்டும் என்றும், இந்தியாவில் இதனை மேலும் பிரபல்யமடையச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார்.

பாலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அபிசேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. ராவண் என்னும் திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியான இவர்களோ அல்லது அந்த திரைப்படத்தின் இந்திய தமிழ் இயக்குனரான மணிரத்னம் அவர்களோ இந்த விழாவுக்கு வரவில்லை.

இலங்கை அரசாங்கம் தனது தமிழ் குடிமக்களை நடத்திய விதத்துடன் முற்றாக முரண்படுகின்ற தென்னிந்திய திரைப்பட சங்கம், அதனால் இஃபாவின் இலங்கை நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுடன் மணிரத்னம் உடன்படுகிறார்.


அபிஷேக் பச்சனும் அவரது மனைவியும் வரவில்லை
சில முன்னணி இந்தித்திரைப்பட நடிகர்களின் வீடுகளுக்கு முன்பாக கடும்போக்கு தமிழ் செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால், அவர்களில் சிலர் இந்த விழாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். சாருக்கான், மற்றும் இஃபாவின் விளம்பர தூதரான அமிதாப் பச்சன் ஆகியோர் இதில் அடங்குகிறாகள்.

ஆனால், இங்கு வந்து இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் விவெக் ஒபராய் போன்ற சிலர், தாம் செய்வது சரி என்றுதான் கூறுகிறார்கள். நடந்தவை மறக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துகின்ற விவெக் ஒபராய், போர் நடந்த பகுதியில், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான ஒரு சமூக மற்றும் கல்வி திட்டத்தை நடத்தும் நோக்கத்தில் இருக்கிறார்.

போருக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரத்தை இந்த இஃபா விருது வழங்கும் நிகழ்வுகள் ஊக்குவிக்கும் என்று அவர் நம்புகிறார்.

நிச்சயமாக கொழும்பில் சினிமா திரயரங்குகளில் வரிசையில் காத்து நிறுகும் ரசிகர்கள் இநந்த பகிஸ்கரிப்பபால் தாம் ஏமாற்றமடைந்துவிட்டதாக கூறினார்கள்.


தமிழ் சினிமாத் துறை முற்றாக பகிஸ்கரிப்பு
இலங்கை சுற்றுலாத்துறைக்கு இஃபா விருது வழங்கு நிகழ்வுகள் ஏற்கனவே மிகப்பெரிய ஊக்கத்தை தந்துள்ளதாக சுற்றுலா விடுதிகள் அமைப்பின் துணைத்தலைவரான அமால் குணதிலக கூறுகிறார்.

இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு பிரபலமான இலங்கையர், இலங்கை கிரிக்கட் அணியின் தலைவரான குமார் சங்ககார. வழமைக்கு மாறான அரசியல் கலந்த உரை ஒன்றை ஆற்றிய அவர், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர்கள் பல தடைகளை தாண்டி வந்திருக்கிறார்கள் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

கிட்டத்தட்ட முழுவதுமே சிங்கள திரைப்படங்களைக் கொண்ட இலங்கையின் திரைப்படத்துறை இலங்கையில் பிரபலமானது. ஆனால், அது மிகவும் சிறியது. இலங்கையில் இருக்கின்ற பலரது விருப்ப சினிமா இந்திப் படங்கள்தான். தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் தென்னிந்திய தமிழ் படங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால், இலங்கையில் ஏனைய அம்சங்களைப் போன்று அரசியல் சர்ச்சை என்பது இங்கு இந்த விடயத்திலும் ஒரு பெரிய பாகமாகவே இருக்கிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter