>> Thursday, September 2, 2010


புதிய தலைமை தகவல் ஆணையர்-ஸ்ரீபதி


கே எஸ் ஸ்ரீபதி

தமிழக அரசின் தலைமைச் செயலராக செவ்வாய்கிழமை ஓய்வுபெற்ற கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை மாநில தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றார்.

கடந்த ஏப்ரல் மாதமே ஸ்ரீபதி பதவி ஓய்வுபெற்றார். ஆனால், கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை கவனிப்பதற்காக அவருக்கு 6 மாதங்கள் பதவி நீட்டிப்பை அரசு அளித்திருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை அவருக்கு பதவி ஓய்வு கொடுத்து அரசு உத்தரவிட்டது.

புதிய தலைமைச் செயலாளராக செவ்வாய் மாலை எஸ்.மாலதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராஜ் பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீபதிக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணைமுதல்வர் ஸ்டாலினும் நிதி அமைச்சர் அன்பழகனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராஜ்பவனிலிருந்து ஊடகங்களுக்கு அனுப்ப்ப்பட்ட பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழில் கூட ஸ்ரீபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை, புதிய ஆணையர் பதவியேற்கவிருக்கிறார் என்று மட்டும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த்து என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமை தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது அப்பொறுப்பிலிருப்பவர் 65 வயதை எட்டும்வரை.

ஆனால் தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள், மாதவ், இளங்கோ மற்றும் கோபால்கிருஷ்ணன் ஆகியோர், பதவியேற்பு குறித்து தகவலறிந்து, ஸ்ரீபதியின் தேர்வு வெளிப்படையாகச் செய்யப்படவில்லை என்று கூறி, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் தங்கள் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு சில கோஷங்களைத் தாங்கிய அட்டைகளைத் தாங்கிய வண்ணம் ராஜ்பவனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் அம்மூவரும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாலையில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சில வாரங்களாகவே ஸ்ரீபதிதான் புதிய ஆணையராகவிருக்கிறார் என்று வதந்திகள் உலவின. அந்நிலையில் தகவல் அறியும் சட்ட ஆர்வலர்கள் ஜெயல்லிதாவை சந்தித்து மாநில அரசுக்கு விசுவாசமான அதிகாரியாக பார்க்கப்பட்ட ஸ்ரீபதி அப்பதவிக்கு தகுந்தவரல்ல, மேலும் தேர்வுமுறை வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது குறித்து மாநில முதல்வர் எதிர்கட்சித்தலைவரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்று விதியிருப்பதால், தமிழக அரசு அ இஅதிமுக ஜெயல்லிதாவிற்கு ஆலோசனைக்கூட்ட்த்திற்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் ஜெயலலிதாவோ தான் கோரிய சில தகவல்கள் தரப்படவில்லை எனக்கூறி ஆணையார் தெரிவுக்கூட்ட்த்தினைப் புறக்கணித்தார். அதன்பிறகு யார் புதிய ஆணையர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய தலைமை தகவல் ஆணையராக ஸ்ரீபதி பதவியேற்றுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter