>> Thursday, July 8, 2010


கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூணின் ஒரு பகுதி

வாகரையில் "அகழ்வாராய்ச்சி"



இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள காயான்கேணி காட்டுப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்குரிய கட்டிட இடிபாடுளும் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
மக்கள் நடமாட்டமற்ற அக்காட்டுப் பகுதியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கிடைத்த தகவல்களின் பேரில் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றிருந்த போதே இக்கட்டிட இடிபாடு எச்சங்களும், தொல் பொருள் ஆய்வுக்குரிய தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதிக்கு தாம் சென்றிருந்த போது சட்ட விரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அல்லது புதையல் தோண்டிய அடையாளங்களையும் காண முடிந்ததாக வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி கூறுகின்றார்.

1856 ம் ஆண்டு பிரித்தானிய ஆய்வாளர் ஒருவரால் எழுதப்பட்ட மட்டக்களப்பு தொடக்கம் சிலாபம் வரையிலான பயணக் கட்டுரையில்; இந்தப் பகுதியில் 'வன்னிச்சியார்'என்ற ராணி ஆண்ட அரண்மனை இருந்ததாக் குறிப்பிட்டிருக்கின்றார்.

என்றாலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆய்வாளர் அறிக்கை கிடைத்த பின்னரே இது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் வாகரைப் பிரதேச செயலாளர் கூறுகின்றார்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter