>> Tuesday, July 6, 2010



காசாவுக்கான நுகர்வுப் பொருள் தடைகள்
காசா மீதான நுகர்வுப் பொருள் தடையில் தளர்வு
காசாவுக்கான தனது தடையை தளர்த்துவது குறித்து இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலத்தீன பிரதேசத்துக்கான நுகர்வுப் பொருட்களின் விநியோகத்தின் மீதான அதன் கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் கைவிட்டுள்ளது.

கட்டிட நிர்மாணத்துக்கான பொருட்களை எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ள இஸ்ரேல், ஐ.நா அல்லது ஏனைய சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழேயே இந்த அனுமதி அமையும் என்றும் கூறியுள்ளது.

எனினும் காசாவிலிருந்து வெளியே பொருட்கள் அனுப்பப்படுவது தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை நிராகரித்துள்ள ஹமாஸ் அமைப்பு, அவை காசா மக்களுக்கு எந்தவிதமான பலனையும் தராது என்று கூறியுள்ளது.

ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு காசா மீதான கட்டுப்பாடுகள் அவசியமானவை என இஸ்ரேல் கருதி வருகின்றது.

இஸ்ரேலிய பிரதமர் பின்யாமின் நெதன்யாஹு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திப்பதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காசாவில் வாழும் 15 லட்சம் மக்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சர்வதேச அழுத்தத்தை இஸ்ரேல் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter