>> Friday, July 2, 2010


கருணாநிதி போர் குற்றவாளி -ஜெயலலிதா


ஜெயலலிதா
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ நாவின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்க மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதை அ இஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரவேற்றிருக்கிறார்.
அக்குழு இலங்கை செல்லும்போது அவர்களை அ இஅதிமுக குழு சந்தித்து, தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு போர் குற்றவாளி என்று அது பிரகடனம் செய்யவேண்டும் என வலியுறுத்தும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 27 அன்று போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதமிருந்த கருணாநிதி, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என இலங்கை வாக்குறுதியளித்திருப்பதாக அறிவித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அவரது பேச்சை நம்பி பதுங்குகுழியிலிருந்து வந்த தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இறையாயினர். எனவே கருணாநிதியும் போர்குற்றவாளி என வாதிடுகிறார் ஜெயலலிதா.

ஐ.நா குழுவிற்கு விசா இல்லை என்று கூறியதற்காக மஹிந்த ராஜ்பக்ஷ
அரசையும் அவர் கண்டித்திருக்கிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter