>> Thursday, July 1, 2010


த தே கூ தலைவர் சம்பந்தர்

த தே கூ அரசியல் கட்சியாகிறது



தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு திடீரெனெ எடுக்கப்பட்டது அல்ல என அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நான்கு கட்சிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.

அண்மையில் இலங்கையில் முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயரிலேயே போட்டியிட்டது.

கடந்த தேர்தலின் போது தாங்கள் பதிவு செய்யாத காரணத்தினால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் நியமிக்கபப்ட்டுள்ளார்.

கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யபப்ட்டாலும், அதில் அங்கம் வகித்திருந்த கட்சிகளை கலைக்க வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் அவர் மேலும் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter