>> Monday, July 5, 2010



சி.ஆர்.டி.சில்வா

ஆகஸ்டில் விசாரணைகள் ஆரம்பம்


இலங்கையில் போர் நிறுத்தம் மீறப்படும் நிலைக்கு இட்டுச் சென்ற காரணங்கள், நிலைமைகள் குறித்து தமது ஆணைக்குழு விசாரிக்கும் என்று இலங்கை ஜனாதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் தலைவரான சி ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர் நிறுத்தம் மீறப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது குழு அல்லது அமைப்பு எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் தாம் ஆராய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்தும் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களுக்கான நடைமுறைகள் குறித்தும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயவுள்ளது. ஆராய்வோம்.

தமது ஆணைக்குழுவின் பொது விசாரணைகள் இந்த வருட ஆகஸ்டில் ஆரம்பமாகும் என்றும் சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பு ஹோட்டன் பிளேஸில் உள்ள கதிகாமர் நிலையத்தில் பொதுமக்கள் சாட்சியங்கள் பதியப்படும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter