>> Wednesday, July 7, 2010


முத்தையா முரளீதரன்


டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளி ஓய்வு



இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரரான சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் விரைவில் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.


'பிபிசி மினிட்' பண்பலை நிகழ்ச்சிக்கு முரளீதரன் வழங்கிய செவ்வியில் மன நிறைவுடன் தான் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் ஆவார்.

வரும் ஜூலை 18ஆம் தேதி காலி நகரில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தோடு தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுவரை 132 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 792 விக்கெட்களையும், 337 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 515 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter