>> Saturday, July 31, 2010


கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை


கடல்நீர் குடிநீராக மாறும் ஆலை சென்னையில்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோரும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றக் கூடிய சுந்திகரிப்பு ஆலை சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது.
இந்த ஆலையின் மூலம் ஒரு லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்ற 5 பைசாவுக்கு குறைவாகவே செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் லிட்டர் குடிநீர் 48 ரூபாய் 66 பைசாவுக்கு வாங்கப்படும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனா தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது நாளோன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சென்னை நகரில் பல ஆண்டுகளாக குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீர்த் தேவைகளை சமாளிக்க தெலுங்கு கங்கை திட்டம், வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டன. ஆயினும் இத்திட்டங்களால் தேவையை முற்றாக ஈடு செய்ய முடியவில்லை. எனவே தொழில்நுட்பத்தின் துணை நாடப்பட்டுள்ளது.

இந்த ஆலை 600 கோடி ரூபாய் செலவில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வேறு சில கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் போல நீரை கொதித்து ஆவியாக்கி சுந்தம் செய்வதில்லை என்றும் அதிக அழுத்ததில் 'ஜவ்வு' வழியாக நீரை செலுத்தி சுத்திகரிப்பு செய்வதால் குறைந்த விலையிலேயே நீரைத் தர முடிகிறது என்றும் சென்னை வாட்டர் டிசாலினேஷன் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என் கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதி மானியத்துடன் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை 2012 ஆம் ஆண்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...


இலங்கை இந்திய வீரர்கள்
இந்தியா-இலங்கை சமநிலை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் மட்டை பிடித்த 4 விக்கட்கள் இழப்புககு 642 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளயர்’ செய்திருந்தது.

இந்திய அணி தனது முதல் இனிங்ஸில் 707 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தது.

இலங்கை அணி தனது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கட்கள் இழப்புக்கு 129 ஓடடங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

இலங்கை அணியில் குமார் சங்ககாரவும் இந்திய அணியில் சச்சின் டென்டுல்கரும் இந்த ஆட்டத்தில் இரட்டைச் சதங்களை குவித்திருந்தனர்.

இந்த ஆட்டத்தில் மொத்தத்தில் 1478 ஒட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்றது.

Read more...



ஆரையம்பதி உண்ணாவிரதம்
ஆரையம்பதி உள்ளூராட்சியினர் உண்ணாவிரதம்
மட்டக்களப்பு ஆரையம்பதி உள்ளுராட்சி சபை நிர்வாக எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சுமத்தியும், குறிப்பிட்ட அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரியும் ஆரையம்பதி உள்ளுராட்சி சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் சகிதம் சபை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி நகர சபை நிர்வாகம் எற்கனவே தமது பிரதேச எல்லைக்குள் அத்துமீறி செயல்பட்டு வந்தமை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மூலம் அதனை தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை பலனளிக்கவில்லை என ஆரையம்பதி உள்ளுராட்சி சபையின் உப தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையிலேயே இந்தப் போராட்டம் நடை பெற்றதாக அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினகளுக்கு 10 நாட்களுக்குள் தீர்வைப் பெற்று தருவதாக முதலமைச்சர் தங்களிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி உள்ளுராட்சி சபையினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை காத்தான்குடி நகரசபையின் உப தலைவரான சாகுல் ஹமீட் மொகமது அஸ்வர் நிராகரித்துள்ளார்.

ஆரையம்பதி உள்ளுராட்சி நிர்வாக சபை எல்லைக்குள் தங்களுக்குரிய சொந்த காணிகளில் உள்ளுராட்சி சபையின் உரிய அனுமதி பெற்று முஸ்லிம்கள் குடியேறுவதாக அவர் கூறினார்.

Read more...


தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிலைய அலுவலகம்



தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் ஒன்றை இனந்தெரியாத கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்தி முகமூடி அணிந்திருந்த 12 பேர் நகர மையத்தில் உள்ள சியத அலுவலகத்துக்குள் நுழைந்து பெட்ரொல் குண்டுகளை வீசியதோடு, ஒளிபரப்புக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த பணியாளர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மண்டியிடச் செய்ததாகவும், இரண்டு ஊழியர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 18 மாதங்களுக்கு முன்பு மஹாராஜா தொலைக்காட்சி நிறுவனம் இதே வகையில் தாக்கப்பட்டிருந்தது.

தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ள சியத தொலைக்காட்சியின் உரிமையாளர் முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சியத உரிமையாளர் மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்கினார் என்று செய்திகள் வெளியானதை அடுத்து சில மாதங்கள் முன்பு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சியத ஒளிபரப்பு நிறுவனத்தார் அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிப்பது சிலகாலமாக தடுக்கப்பட்டு வந்தது என்றும், அரசாங்க அறிவிப்புகள் சியத நிறுவனத்தாரின் செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த செய்தித்தாள் அண்மையில் மூடப்பட்டுவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சியத ஒளிபரப்புகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலானவையாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது

Read more...

>> Friday, July 30, 2010


சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐநா

சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலகெங்கும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 15 லட்சம் சிறார்கள் குடிநீர் மற்றும் சுகாதாரமின்மை தொடர்பான நோய்களில் இறக்க நேரிடுகிறது.

ஐ நா வின் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


இந்தியாவில் பரவலான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

குடிநீர் தொடர்பான உரிமைகள் குறித்து ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஜெனீவாவில் செயற்படும் ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில், இந்தத் தீர்மானம் அப்படியான நடவடிக்கையை குறைத்து மதிப்படுவதாக இருக்கின்றது என்றும், அதானலேயே தாம் வாக்கெடுப்பில் பங்கு பெறவில்லை என்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் தெரிவித்துள்ளன.

குடிநீர் அடிப்படை மனித உரிமை என்று பிரகடனப்படுத்தும் ஐ நா வின் இந்தத் தீர்மானத்தில், உலகளவில் 88 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீருக்கு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 260 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான உரிமையை முழுமையாக அனுபவிப்பதற்கு பாதுகாப்பான குடிநீரும், துப்புறவு வசதிகளும் அடிப்படையான தேவைகள் என்றும் ஐ நா வின் பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது.

உலகிலுள்ள அனைவரும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்ள சர்வதேச சமூகம் தனது முன்னெடுப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் முக்கியமானவை.

ஐ நா வின் இந்தத் தீர்மானம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவையும் ஏகமனதாகப் பெறுவதில் தவறிவிட்டது என்று அமெரிக்க பிரதிநிதி ஜான் சமின்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் மனித உரிமைகள் குறித்த புதிய விளக்கத்தையும், கடப்பாடுகளையும் சரியாக தெளிவு படுத்தவில்லை என்று சில நாடுகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் ஐ நா விடயங்கள் குறித்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

Read more...


பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் ரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிக்கைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கில் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Read more...


கோஹினூர் வைரம் பதித்த மணிமகுடம்

கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர முடியுமா என்று கேட்கப்பட்டபோது, அது பிரிட்டனிடமேதான் இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்த வைரம் பற்றிய பதிவுகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகிறன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சிசெய்த மன்னர்களிடம் இந்த வைரம் கை மாறி வந்துள்ளது.




1849ல் பிரிட்டிஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

"1730ஆம் ஆண்டு தொட்டே இந்த வைரம் இந்திய ஆட்சியாளர் ஒருவரின் கைகளில் இருந்திருக்கவில்லை. ஆகவே
இந்த வைரத்தை இந்தியாவுக்குத்தான் திருப்பித்தர வேண்டும் என்பது ஏற்புடைய வாதம் இல்லை என்றே தோன்றுகிறது" என பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான ஆபரணங்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இருப்பவரான சரித்திர ஆசிரியரான கலாநிதி அன்னா கீ கூறுகிறார்.

கோஹினூர் வைரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்ற ஒரே இடமாக அந்தக் காலத்தில் இந்தியா மட்டுமே இருந்ததால், அந்த வைரம் இந்தியாவில் இருந்துதான் தோண்டியெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம்.

இந்த வைரம் மிகவும் அழகியது விலைமதிப்பற்றது என்றாலும், ஆண் ஆட்சியாளர் ஒருவர் இந்த வைரத்தை அணிந்திருந்தால் அவர் அரியணை துறக்க நேரிடும் என்ற ஒரு சாபமும் இந்த வைரத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

பிரிட்டிஷார் இந்த சாபத்தை உண்மையென நம்புகிறார்கள் போலும். பிரிட்டனை ஆண்ட ராணி, ராஜாக்களில் கோஹினூர் வைரத்தை அணிந்தவர் என்றால் என்றால் அது விக்டோரியா ராணியார் மட்டும்தான்.

Read more...


இந்திய பிரட்டன் பிரதமர்கள்

"இந்திய பிரட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்"

பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்து முடிவெடுத்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவின் கேமரனின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கலாச்சார ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான உடன்பாடு கையெழுத்தானது.

அதன்பிறகு, இரு பிரதமர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டபோது, இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படுவது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். கல்வி உள்ளிட்ட மற்ற துறைகளிலும், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பயணம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக டேவிட் கேமரன் தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவ்ரகளும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். பாகிஸ்தான் தொடர்பாக டேவிட் கேமரன் தெரிவித்த கருத்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றி, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளை ஒடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ``பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்று இந்திய எல்லையை ஒட்டியும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். உலக சமுதாயம், இதை ஊக்குவிக்க உதவும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார் மன்மோன் சி்ங்.

இதுபற்றி டேவிட் கேமரன் கூறும்போது, ``பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டும் நாம் பார்க்கவி்ல்லை. அதன் தாக்கத்தை மும்பை தெருக்களில், லண்டன் தெருக்களில் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் வாரந்தோறும் பலர் கொல்லப்படுகிறார்கள். அதை அனுமதிக்க முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதக் குழுக்கள், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானுடன் இணைந்து அதை ஒடுக்க வேண்டும். லஷ்கர் இ தொயிபா, பாகிஸ்தான் தாலிபான், ஆப்கன் தாலிபான் என எதுவாக இருந்தாலும் ஒடுக்க வேண்டும்’’ என்றார் டேவி்ட் கேமரன்.

Read more...

>> Thursday, July 29, 2010



சச்சின் டெண்டூல்கர்
சச்சின் 48 ஆவது சதமடித்தார்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் 48 ஆவது சதத்தை அடித்துள்ளார்.
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதே தனது 48 ஆவது சதத்தை சச்சின் அடித்துள்ளார்.

நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 642 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்திருந்தது.

கொழும்பு போட்டியில் இந்தியாவின் விரேந்திர ஷேவாக் தனது 21 ஆவது சதத்தை அடிக்கும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தில் தவற விட்டார். 99 ஓட்டங்களை எடுத்திருந்த போது சதத்தை அடிக்கும் ஆசையில் சுராஜ் ரண்டிவ் வீசிய பந்தை கிரீஸை விட்டு அடிக்க வெளியே வர முயன்ற போது விக்கெட் கீப்பரால் ஸ்டம்ப் செய்யப்பட்டார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி 1-0 என்கிற கணக்கில் முன்னணியில் உள்ளது.

முதல் போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த முத்தையா முரளிதரன் தனது கடைசிப் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்து 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவார் என்கிற பெருமையை அடைந்தார்.

Read more...


இடம் பெயர்ந்துள்ள மக்கள் சிலர்
முறிகண்டியில் மீள் குடியேற்ற சிக்கல்

இலங்கையின் வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.
நாட்டின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் உள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களே இப்படியான சிக்கலில் மாட்டியுள்ளார்கள்.

அவர்ளை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த முடிவு தமது விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டிருப்பதாக்க அப்பகுதி மக்கள் தமிழோசையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேற்றத்திற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும் தங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பதிலாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் இப்போது அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

முறிகண்டி பிரதேசத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவான நிலப்பகுதி அரசாங்கத்தின் தேவைக்காக எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையடுத்து. இந்தப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வேறிடத்தில் காணிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்குப் பணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்ற போதிலும் அதனால் பயனேதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

Read more...


இந்தியாவில் டேவிட் கேமரன்
இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதமர்


இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்.
பிரிட்டன் சரித்திரத்தில் முதல் முறை என்று வர்ணிக்கப்படும் வகையில், 6 அமைச்சர்கள், அதிகாரிகள், விளையாட்டுத்துறையினர், கல்வியாளர்கள், முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் என மிகப்பெரிய குழுவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார் டேவிட் கேமரன். இதன் மூலம், இந்தியாவை மிக முக்கிய பங்காளியாக பிரிட்டன் கருதுகிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்.

பெங்களூர் நகரில் இன்போஃசிஸ் தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் கேமரன், இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் தனது முக்கிய நோக்கம், செழிப்பான இந்தியப் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புக்களை பிரிட்டனின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.

இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில், பிரிட்டனில், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். அதேபோல், இந்தியாவிலும் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என விரும்புகிறேன் என பிரி்ட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.

போர் விமானங்கள் வாங்க உடன்பாடு



கேமரனின் விஜயத்தின் போது பிரிட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 57 ஹாக் நவீன ரக பயிற்சி ஜெட் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்குப் பயன்படுத்தப்படும் அந்த விமானங்களை, பிரிட்டன் நிறுவன உரிமத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும்.

அந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக முக்கியப் பலன்களை வழங்கும் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.

டேவிட் கேமரன் தனது பயணத்தின்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் தொடர்பான உறவுகளை வலுப்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்களை விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத, பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்புக்களு்ககாக வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, பெருமளவில் இந்தியர்களைத்தான் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, டேவிட் கேமரனிடம் இந்தியா இதுதொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் டேவிட் கேமரன் பேச்சு நடத்தும்போது, இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...


நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள்

பாக் விமான விபத்தில் 152 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர்.
கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் விமானத்தில் 146 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

இஸ்லாமாபாத்துக்கு வடக்கே இருக்கும் ஒரு மலைப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.

ஏர் புளூ எனும் தனியார் நிறுவன விமானமே மரகலா மலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. கராச்சியில் உள்ளூர் நேரப்படி காலை 07.50 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் இஸ்லாமாபாதில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் நொறுங்கி விழுந்துள்ளது.

மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நொறுங்கி விழுந்து எரிந்து போன இந்த ஏ-321 ரக விமானத்திலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயம் அந்த மலைப் பகுதியில் அடர்ந்த மூடுபனிப் படலம் நிலவியுள்ளது.

விமானத்தின் பறக்கும் குறிப்புகள் மற்றும் ஒலி சமிஞ்கைகள் அடங்கிய கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதல் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏதாவது ஆதாரங்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள் அந்த மலைப் பகுதியில் இருக்கும் மரங்களில் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.

Read more...

>> Wednesday, July 28, 2010



போலீசுக்கு எதிராக போராட்டம்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ராகம்வெல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பாரம்பரிய கிராமத்திலிருந்து தாம் விரட்டியடிக்கப்படுவதாகவும் அங்கிருந்து பொலிசார் வெளியேறவேண்டும் எனவும் கூறி பாணம சந்தியில் செவ்வாய்கிழமையன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டயர்களை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராமவாசிகள் பொத்துவில் ஓக்கந்த நெடுஞ்சாலையை சுமார் ஒருமணிநேரம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கிராமவாசிகளுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த பிரதேசத்து பௌத்த மத விகாரையைச் சேர்ந்த பாணம சந்த்ரா ரத்ன தேரர், பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக பின்னர் அறிவித்தார்.

மூன்று தினங்களுக்குள் பொலிசார் தமது கிராமத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையிலேயே போராட்டத்தை இடைநிறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்தனர்

கலகத்தடுப்பு பொலிசாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு இன்று அந்தப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக்க, கிராமவாசிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி அளித்ததை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதியன்று நள்ளிரவு ராகம்வெல கிராமத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த பல வீடுகளையும் சேனைப்பயிர்ச்செய்கைகளையும் தீயிட்டு எரித்துவிட்டு விவசாயிகளையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக கூறும் கிராமவாசிகள், பொலிசார் தமது காணிகளை அபகரிப்பதாக அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவரும் காணிகளிலிருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்படுவது அநீதி என அங்குள்ள விவசாயி ஒருவர் தமிழோசைக்கு கருத்து தெரிவித்தார்

யால பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாணம கரையோரக்கிராமம் சுற்றுலாத்துறைக்கு புகழ் பெற்று விளங்குகிறது.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசாங்கம் கடந்த சிலமாதங்களாக ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...



காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கம்
மணி சங்கர் அய்யர்

"காமன்வெல்த் போட்டிகள் வீண்செலவு"


புதுடெல்லியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவது வெட்டிச் செலவு என்று கூறியுள்ளார் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்.
அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்தால் தான் மிகுந்த ஏமாற்றமடைவேன் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இப்போது பதவி வகித்து வருகிறார் மணிசங்கர் அய்யர்.

இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள மணிசங்கர் அய்யர், தற்போது காமன்வெல்த் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

``காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் மழை குறுக்கிடுவது குறித்து ஒரு வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால், நான் மிகவும் கவலைப்படுவேன். ஏனென்றால், அதன் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என எல்லாவற்றையும் கொண்டுவருவார்கள்’’ என்றார் மணிசங்கர் அய்யர்.

காமன்வெல்த் போட்டிகளுக்காக 35 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மணிசஙகர், சாதாரண நிலையில் உள்ள சிறுவர்கள் விளையாடுவதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கவலை தெரிவித்தார்.



விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக, காமன்வெல்த் நாடுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மணிசங்கர் புகார் கூறினார்.

லஞ்சம்

``காமன்வெல்த் நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்களுக்கு இந்தியா தலா ஒரு லட்சம் டாலர் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு பணம் இல்லாமலா போய்விட்டது? சட்டப்படி இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை இது லஞ்சம் என்றுதான் சொல்வேன். இப்படி, விளையாட்டை நடத்தும் முறை மோசமாக இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு தருவோர் தீய சக்திகளாகத்தான் இருக்க முடியுமே தவிர, கடவுளாக இருக்க முடியாது’’ என்றார் மணிசங்கர் அய்யர்.

அவரது இந்தக் கருத்து, இந்திய ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகத்தை மட்டுமன்றி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடமும் வரவேற்பைப் பெறவில்லை.

காமன்வெல்த் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி்க் காட்டி, இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் உயர்த்துவதுடன், அடுத்தகட்டமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பையும் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மணிசங்கரின் கருத்து அதற்கு எந்த வகையிலும் உதவாது என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாதி, மணிசங்கரின் கருத்து, பொறுப்பற்ற பேச்சு என கடுமையாக விமர்சித்துள்ளார்.

``காமன்வெல்த் போட்டிகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.. மணிசங்கர் அய்யர் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்திருந்தால், ஒரு விளையாட்டரங்கரத்தைக் கூடப் பார்த்திருக்க முடியாது’’ என்றார் சுரேஷ் கல்மாதி.

இந்தியப் பிரஜை ஒருவரால் இத்தகைய கருத்தை வெளியிட முடியாது என்றும், அவரது கருத்து முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more...


ஒலுவில் கடற்கரை

கடற்படை முகாமுக்கு எதிர்ப்பு
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்
ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையொன்றும் நடை பெற்று வந்ததாகக் கூறும் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவரான அபுபக்கர் லெப்பை இஸ்மாயில் கடற் படையினர் தங்கள் பகுதியில் முகாமிட்டிருப்பது பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தடையாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுதந்திரமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலை தென்படுவதாகவும் கூறுகின்றார்

ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடித மூலம் அறிவித்துள்ள போதிலும் எவ்வித சாதகமான பதிலும் இது வரை கிடைக்கவில்லை என்கின்றார்.

கடற்படைத் தளபதி இம்முகாமிற்கு வந்திருந்த போது அவரை சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறும் பள்ளிவாசல் செயலாளரான அப்துல் ரகீம் கடற்படைத் தளபதி தங்கள் கோரிக்கையை நிராகரித்து அளித்த பதில் ஏமாற்றத்தையும் கவலையையும் தந்ததாக குறிப்பிடுகின்றார்.

ஏற்கெனவே கடற்படை முகாம்கள் அமைந்துள்ள கிராமங்களில் அவ்வப்போது மீனவர்களுக்கும், கடற் படையினருக்குமிடையில் எற்படுகின்ற மோதல்களும் முரண்பாடுகளும் இந்த பிரதேசத்திலு்ம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடும் என்ற அச்சம் உள்ளுர் மீனவர்களிடம் பொதுவாக நிலவுகின்றது.

Read more...


கயாவில் பர்மியத் தலைவர்

டில்லியில் பர்மிய சர்வாதிகாரி
பர்மாவின் ராணுவ ஆட்சியின் தலைவர் ஜெனரல் ஷ்வே அவர்களுக்கு செவ்வாயன்று இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஜெனரல் ஷ்வே அவர்கள்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஷ்வே, மிகச்சில வெளிநாடுகளுக்கே சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக இந்தியாவு்க்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே 1600 கிலோ மீட்டர் தொலைவு எல்லை உள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளும் பர்மாவை ஒட்டியே உள்ளன.

பர்மாவை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கு பர்மா அரசாங்கம் இந்தியாவுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறது. அதற்கு ஈடாக, இந்தியாவும் பர்மாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்து வருகிறது.

டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க, இருநாட்டுப் பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு உடனடி முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் இன்னொரு நாட்டுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எந்த வகையிலும் அனுமதிப்பதில்லை என்றும் உறுதியளிக்கப்பட்டது.

பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், பர்மாவில் மேம்பாட்டு உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று இந்திப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரினார் ஜெனரல் ஷ்வே.

இந்தச் சந்திப்பின்போது, குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில், இரு தரப்பும் பரஸ்பரம் உதவும் வகையிலான ஒப்பந்தம், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Read more...

>> Monday, July 26, 2010


அமித் ஷா கைது


அமித் ஷா
இந்தியாவின் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்து பதவியை இராஜினாமா செய்துள்ள அமித் ஷா, கொலை மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய புலனாய்வு விசாரணையாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாட்களாக வெளியிடங்களில் தோன்றாமல் இருந்துவந்த அமித் ஷா, இன்று பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி தான் குற்றமற்றவர் என்று கூறியிருந்தார், அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று சனிக்கிழமை இவர் தனது இராஜினாமா செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோராபுதீன் ஷேக் என்பவரையும் அவரது மனைவியையும் போலி எண்கவுண்டரில் கொல்ல ஷா உத்தரவிட்டிருந்தார் என்பது குற்றச்சாட்டு.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான அமித் ஷா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறார்.

Read more...


கண்ணிவெடி விழிப்புணர்வு

கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்

இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் கூறுகின்றார்கள். கண்ணிவெடி அகற்றும் பணியில் நவீன உபகரணங்கள் ரிமோட் கண்ரோலில் இயக்கத்தக்க இயந்திரங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண்ணிவெடி அகற்றும் பணி வேகப்படுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.

Read more...


போரின் பாதிப்புகள்

வளர்ச்சி பாதையில் கிழக்கு மாகாணம்?



இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.

இக்காலப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் அம்மாகாணத்தில் வெளிப்படையாக தெரிகின்ற போதிலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கின்றன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வதாக கூறும் 'அகெட்' எனப்படும் தன்னார்வ தொண்டர் அமைப்பின் இயக்குநரான அருட்தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன், நகர பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை காணக் கூடியதாக உள்ளது என்கின்றார்.


குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்ந்துள்ளதே தவிர மக்களின் வாழ்க்கை நிலை இன்னமும் வழமை நிலைக்கு திரும்பவில்லை


மனித உரிமைகள் சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்த வரை பல பகுதிகளிலும் மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாக இருந்த பிரதேசங்களைப் பொறுத்த வரை போர் காலத்தில் இடிந்து போன வீடுகளில் அநேகமானவை இன்னமும் அப்படியே இருக்கின்றன.அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் வழமைக்கு திரும்பியதாக இல்லை என கூறப்படுகிறது.

போருக்கு பின் இன ஐக்கியத்திற்கான முயற்சிகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உரசல்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பதாக கூறுகிறார் சமூக ஆய்வாளரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம்.இப்ராகிம்.

கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மேலோட்டமாகப் பாரக்கும் போது ஜனநாயகம் மலர்ந்து, அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட்டுள்ளதாகவே அறிகுறிகள் தென்பட்டாலும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிகக் கூடுதலாகவே உள்ளன.

Read more...


டோனி ஹேவர்ட்


பிரிட்டிஷ் பெட்ரோலியம் தலைவர் பதவி விலகலாம்


பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து அதன் தலைவர் டோனி ஹேவர்ட் விலகுவார் என்று பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

மெக்சிகோ வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் சிந்திய விவகாரத்தில் அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் டோனி ஹேவர்ட்.

தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான விவாதங்களில் அவர் இப்போது ஈடுப்பட்டு வருவதாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், டோனி ஹேவர்ட் அவர்களுக்கு நிர்வாக குழுவின் முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில் எண்ணெய் சிந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு முப்பது பில்லியன் டாலர் வரையில் தேவைப்படலாம் என கணக்கீடப்பட்டுள்ளது.

Read more...

>> Friday, July 23, 2010



கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம்


கொசோவோ சுதந்திர கொண்டாட்டங்கள்
செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

உலகெங்கும் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் இந்த தீர்ப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படு

இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவோவை ஊக்குவிக்கும்.

செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர் 2008 இல் சுதந்திர பிரகடனம் செய்தனர்.

பெரும்பாலான மேற்கத்தைய நாடுகள் கொசோவோவை அங்கீகரித்தன. ஆனால், செர்பியாவும் அதன் கூட்டாளியான ரஷ்யாவும் அதனை நிராகரித்தன.

தீர்ப்பின் தாக்கங்கள் என்ன?

சர்வதேச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பானது, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது.

ஏற்கெனவே நிறுவப்பட்டு நிலைபெற்றிருக்கும் ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தொகுதிமக்கள், மொழியின் அடிப்படையிலோ, தேசியஇன அடையாளத்தின் அடிப்படையிலோ தாங்கள் தனித்துவமானவர்கள் என்று கூறி தாங்கள் வாழ்ந்த ஒரு நாட்டிலிருந்து தாமாகவே பிரிந்து செல்வது சரியா என்பது முதல் கேள்வி.

அது சரியென்றால், தற்போதைய நாடுகள் தங்களின் இறையாண்மையையும், தமது ஆட்புல ஒருமைப்பாட்டையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது.

இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களைத்தான் இன்றைய தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

கொசோவோ பிரிந்தபோது அதை பல நேட்டோ நாடுகள் ஆதரித்திருந்தன. அதன் பிரிவினையானது எதிர்காலத்தில் உலகின் மற்ற பகுதிகளுக்கான முன்னுதாரணமாக ஆகாது என்று அந்த நாடுகள் அப்போது கூறின.




ஆனால் ரஷ்யா இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. 2008 ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் ஜியார்ஜியாவுக்குள் சென்றன. இதன் விளைவாக, தென் ஒசெட்டியா மற்றும் அப்காசியா ஆகிய இரண்டு குட்டி நாடுகள் உருவாக வழிபிறந்தது. ஆனால் இந்த இரு நாடுகளையும் இதுவரை வெகுசில நாடுகள் தான் அங்கீகரித்துள்ளன.

இந்தப்பிரச்சினையானது, எந்த ஒரு நாட்டுக்குமே முடிவெடுப்பதற்கு கடினமான ஒன்று. அதிலும் குறிப்பாக, பிரிவினை இயக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு இது ஒரு கடினமான பிரச்சினை.

அந்த காரணத்தால்தான் ஸ்பெயின் நாடானது, மற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளின் நிலையிலிருந்து விலகி கொசோவோவின் சுதந்திர பிரகடனத்தை ஏற்க முடியாது என்று அறிவித்தது

கள நிலவரத்தில் இன்றைய இந்தத்தீர்ப்பு உடனடியாக பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப்போவதில்லை.

செர்பியாவைப் பொறுத்தவரை கொசோவோ மீதான தனது பாத்தியதையை வலியுறுத்துவதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்பது தான் அதன் முக்கிய கவலையாக இருக்கக்கூடும்.

அதேசமயம், கொசோவோவில் இருக்கும் செர்பியர்கள் அதிகம் வாழும்பகுதிகளை கொசோவோவிலிருந்து பிரித்து செர்பியவுடன் இணைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழக்கூடும்.

அதேசமயம், பரந்துபட்ட அளவில் பால்கன் பகுதியிலும், குறிப்பாக போஸ்னியாவிலும், தற்போதைய எல்லைகள் மற்றும் ஏற்பாடுகளின் எதிர்கால நிலைத்த தன்மை குறித்த கேள்விகளை இந்த தீர்ப்பு எழுப்பக்கூடும். ஆனால் அதைபற்றி விவாதிப்பதற்கு மேற்குலக ராஜாங்க அதிகாரிகள் யாரும் தயாராக இல்லை.

Read more...



சாதனை சாத்தியமானது எப்படி?


விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முரளி வல்லவர்
கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனின் சாதனையின் தனித்தன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து, இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா அவர்களின் கருத்துக்கள்:
“முரளிதரனின் சாதனை மிக அற்புதமானது. இந்தச் சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. இந்தச் சாதனை அவரது மனஉறுதி, குணநலன் மற்றும் திறமையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற விடாமுயற்சியும் அவரது சாதனையில் வெளிப்படுகிறது”.

முரளிதரனின் பந்து வீச்சின் சிறப்புக்கள்

“அவரது பந்து வீச்சு மிகவும் உயர்ந்த தரத்திலானது. அப்படியான தரம் இல்லாமல் அவரால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியாது. ஒரு ஆஃப் ஸ்பின்னருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அனைத்தும் முரளியிடம் இருக்கிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவருக்கே உரிய அந்த தூஸ்ரா வகை பந்து வீச்சு சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையான பந்து வீச்சே அவரது வெற்றியை அதிகரிக்க உதவியது”.

முரளிதரனின் பந்து வீசும் முறை தவறு என்கிற சர்ச்சை சரியா?

“முரளியின் பந்து வீச்சு முறை குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அது சரிதான் என்று கூறியுள்ளது. அது குறித்து எழுந்த சந்தேகத்தை நிபுணர்களை வைத்து அலசி ஆராய்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த முடிவை எடுத்தது. எனவே தூஸ்ரா பந்து வீச்சு குறித்து எழுந்த ஊகங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கு இது தருணம் கிடையாது. தற்போது அவர் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதை வியந்து பாராட்டி அதற்கான முயற்சியை அங்கீகரிக்க வேண்டும்.”
முரளியின் தூஸ்ரா உலக பிரசித்தம்

முரளிதரனின் பந்து வீச்சின் தனித்தன்மை என்ன?

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,நாங்கள் இருவருமே தாக்குதலை நடத்தும் ஒரு பந்து வீச்சாளர்களாவே இருந்துள்ளோம். விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே நாங்கள் இருவரும் பந்து வீசினோம். பந்தின் சுழற்சியிலும், பந்தை காற்றில் பறக்க விடுவதிலும் முரளி பெரிதும் நம்பினார். பந்து வீச்சின் அடிப்படைகளான சரியான அளவில், சரியான தூரத்தில் பந்து வீசுவதில் முரளி திறமையானவராக இருந்தார். அந்த அடிப்படை தகுதிகள் தற்போதைய பல சுழற்பந்து வீச்சாளர்களிடம் இல்லை. தற்போதைய சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல் இருக்கின்றது. இதில் இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் மட்டுமே தனித்து நிற்கிறார். பந்து காற்றில் இருக்கும் போது எதிர்த்து விளையாடுபவர்களை ஏமாற்றுவதில் முரளிதரன் வல்லவராக இருந்தார்.”

Read more...





முரளிதரனின் உலக சாதனை


சாதனை படைத்த மகிழ்ச்சியில் முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் காலியில் நடந்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு அவரை அவரது அணியைச்சேர்ந்த மற்ற ஆட்டக்காரர்கள் தங்களின் தோளில் தூக்கி சுமந்து ஆடுகளத்திலிருந்து அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

இன்று முடிவடைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப்பிறகு, தாம் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று முரளிதரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளிதரனின் இன்றைய சாதனைக்குப்பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்ன் வீழ்த்திய விக்கெட்டுகளை விட, இவர் 92 விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்தியிருக்கிறார்.

சாதனையின் வரலாறு


இளவயது முரளிதரன்

டெஸ்ட் ஆட்டங்களில் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஓய்வு பெறுகின்ற முத்தையா முரளிதரன், தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்தது 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆட்டத்தில். அவர் தனது இறுதி டெஸ்ட் ஆட்டத்தை ஆடியது இலங்கையின் காலி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக.

134 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முரளிதரன் 800 விக்கெட்டுக்கள் என்ற இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்த நிலையில் 145 ஆட்டங்களில் கலந்துகொண்ட ஆஸ்ரேலியாவின் சார்ன் வேர்ன் 708 விக்கெட்டுக்களை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக இந்தியாவின் அனில் கும்ளே மற்றும் ஆஸ்ரேலியாவின் கிலன் மக்ரா ஆகியோர் 619 விக்கெட்டுக்களை எடுத்துள்ளனர்.

அதேவேளை இங்கிலாந்துக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் முரளிதரன் அவர்கள் ஆகக்கூடுதலாக 112 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக 22 ஆட்டங்களில் கலந்துகொண்டு அவர், 105 விக்கெட்டுக்களை பெற்றுள்ளார்.

மூன்றாவதாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 15 ஆட்டங்களில் 104 விக்கெட்டுக்களை முரளிதரன் பெற்றுள்ளார்.


தூஸ்ரா வீசும் முரளிதரன்

இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக கூடிய விக்கெட்டுக்களை முரளிதரன் எடுத்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமல்லாமல் ஒரு நாள் சர்வதேச ஆட்டங்களிலும் முரளிதரனே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

337 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 329 இன்னிங்ஸ்கள் விளையாடியிருக்கும் முரளிதரன், 515 விக்கெட்டுக்களை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

38 வயதான முரளிதரன் பிறந்தது 1972 இல் இலங்கையின் கண்டியில். இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய அவர் கழக மட்டத்தில், தமிழ் யூனியன் கிரிக்கட் அண்ட் அத்லட்டிக் கிளப், சென்னை சூப்பர் கிங்ஸ், ஏசியா 11, கந்துரட்ட, கெண்ட், ஐ சி சி வேர்ல்ட் 11 ஆகிய அணிகளுக்கும் ஆடியுள்ளார்.


முரளிதரனின் சாதனையை முறியடிப்பது கடினம்


டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை 133 ஆட்டங்களில் 164 இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருக்கும் அவர், 1261 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அவர் பெற்ற ஆகக்கூடுதலான ஓட்டங்களின் எண்ணிக்கை 67 ஆகும்.

Read more...

>> Thursday, July 22, 2010


தடுப்பு முகாம்

பாலகுமாரன், யோகி பற்றித் தெரியாது



கடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது.
இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் ட்யூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தெள்ளிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் ட்யூ குணசேகர தமிழோசையிடம் கூறியுள்ளார்.

அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார்.


பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது


அமைச்சர் ட்யூ குண்சேகர

போரின் இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டது. ஆனால் அதில் பாலகுமார் மற்றும் யோகியின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இவர்களும் வேறு சில தலைவர்களும் அரச படையினரிடம் சரணடைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பும் இவர்கள் சரணடைந்ததாக கூறியிருந்தது.

எனினும் பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறும் ட்யூ குணசேகர அது தொடர்பான விவாதத்தில் இறங்கத் தான் தயாராக இல்லை எனவும் கூறுகிறார்.

அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பராமரிப்பது மட்டுமே தமது பொறுப்பு என்றும், அவர்களின் விசாரணை தொடர்பான விடயங்கள் தனது அதிகார வரம்புக்குள் வராது எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கை அரசு சுமார் 8000 போராளிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

Read more...





"ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ்"


ஆஸ்பெஸ்டாஸ் ஆபத்தானது என்று பலர் அறியாதுள்ளனர்
ஆஸ்பெஸ்டாஸை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அடுத்த இருபது ஆண்டுகளில் அதனால் ஏற்படும் இறப்புகள் பெரிய அளவில் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிபிசியும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பும் நடத்திய ஒரு புலனாய்வில் ஆஸ்பெஸ்டாஸின் விற்பனையை வளர்க்கும் நோக்கில் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

தொழில் ரீதியாக உடல் நலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சட்டங்கள் எந்த வளர்ந்து வரும் நாடுகளில் பலவீனமாக இருக்கின்றதோ அந்த நாடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸின் ஏற்றுமதி அதிகமாக உள்ளது எனவும் அந்த புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வெள்ளை ஆஸ்பெஸ்டாஸை, சரியாக கையாண்டால் அது ஆபத்தற்றது என்று தொழிற்துறையினர் கூறுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் ஆஸ்பெஸ்டாஸ் புற்று நோயை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புற்று நோய் அபாயம்


அபாயங்களை அறியாமல் ஆஸ்பெஸ்டாஸை சுமக்கிறார்
உலகின் பல வளர்ந்த நாடுகளில் மலிவான மேற்கூரைகள் அமைக்க வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நீர் விநியோகத்துகாக குழாய்களை அமைக்கவும் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலகிலேயே மிக அதிக அளவில் வெள்ளை ஆஸ்பெஸ்டாஸை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.

உயிராபத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் உலகளவில் 52 நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாறாக வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

ஆஸ்பெஸ்டாஸை உடைத்து கூறைகள் அல்லது குழாய்களை தயாரிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கல்நார் துகள்கல் காற்றில் கலந்து மக்கள் சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்று அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மரணத்தை ஏற்படுத்தக் கூடிய புற்று நோயைக் கூட இந்த கல்நார் துகள்கள் ஏற்படுத்தும்.

இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்துறை 850 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் ஆஸ்பெஸ்டாஸ் துறையில் அதிகப்படியானவர்கள் ஈடுபட்டிருப்பது இந்தியாவில்தான்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியாவில் 35 லட்சம் மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

Read more...


இந்திய முஸ்லிம்

முஸ்லிம்களுக்கு எதிராக வங்கிகளா?



இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதமும், கேரளத்தில் சுமார் 7 சதமும், மேற்கு வங்கத்தில் 17 சதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம்பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.

குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read more...


ரொபேர்ட் பிளேக்

இலங்கையில் ரோபேர்ட் பிளேக்



இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு நல்ல பலனைத் தரமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசுத்துறைத் துணைச் செயலர் ரொபேர்ட் பிளேக் அவர்கள் கூறியிருக்கிறார்.
இலங்கையில் அமைதி திரும்ப நல்லிணக்கம் ஏற்படுவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், நல்லிணக்கத்தை எட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக போரினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கியமான விடயமாக கடந்தகால தவறுகளுக்கு பொறுப்பு ஏற்கப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை மனித உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவும் நல்ல பலனைத்தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்குழு ஐ. நா செயலாளரால் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடதத்தக்கதாகும் என்றும் அதுமாத்திரமன்றி, அது ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு மாத்திரந்தான் என்பதுடன் அதற்கு புலன் விசாரணை செய்யும் பங்கோ நீதித்துறைப் பங்கோ கிடையாது என்றும் பிளேக் கூறினார்.

ஐநா இது போன்ற விடயங்களில் உலகின் பல பாகங்களில் நல்ல அனுபவத்தை கொண்டிருக்கிறது. ஆகவே அதன் பலனை இலங்கையும் பெற முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்கத்துக்கான மூன்றாவது விடயமாக ஜனநாயகமும், மனித உரிமைகளும் மேம்படுத்தப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளளேக் அவர்கள், மாகாணங்களுடன் சிறப்பான அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளலும், 17 வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமல் படுத்தலுமே இதற்கான பலனைத்தரும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புசாதன சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

>> Tuesday, July 20, 2010


பிரதம நிதியரசர் அசோக்க டி சில்வா


'சந்தேக நபருக்கு விடுதலை' - உயர் நீதிமன்றம்



இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான முகாமொன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டு, விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண் நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள செல்வன் அன்டன் ஜூட் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்க முடியாவிட்டால் அவரை விடுவிக்குமாறு சட்டமாதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டிருந்த மூன்று வெவ்வேறான வழக்குகளிலிருந்து நீதிமன்றம் 1998ம் ஆண்டிலேயே தன்னை விடுதலை செய்திருந்ததாக மனுதாரர் கூறுகிறார்.


வடக்கில் உள்ள தடுப்பு முகாமொன்று
அதன்பின்னர், வன்னியில் மனைவியுடன் வசித்துவந்த அவர், 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் பின்னர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பட்டார்.

செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, முன்னைய மூன்று வழக்குகளை சுட்டிக்காட்டி பம்பைமடு இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் முன்னைய வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்ததை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி மீள்விசாரணையின் போது அறிவிக்குமாறு உயர்நீதிமன்றம் சட்டமாதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

Read more...



அலன் சாண்ட்றேக்

நூலாசிரியர் சிங்கப்பூரில் கைது




சிங்கப்பூர் அரசாங்கம் மரண தண்டனையை பயன்படுத்தும் விதம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டரை வருடங்கள் வரை சிறைத் தண்டனைக்கு வழி செய்யும் குற்றவியல் அவதூறு குறித்த புலன்விசாரணையின் ஒருபகுதியாக 75 வயதான அலன் சாண்ட்றேக் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனது புத்தகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் சிங்கப்பூர் சென்றால் அங்கு தனக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

தாம் அவரது புத்தகத்தை தடை செய்யவில்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசாங்கம், ஆனால், புலன்விசாரணைகள் நடப்பதாகக் கூறியுள்ளது.

''Once A Jolly Hangman: Singapore Justice in the Dock'' என்பது அலன் சாண்ட்றேக்கின் புத்தகத்தின் பெயராகும்.

பல வருடங்களாக சிங்கப்பூரில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவராக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள தார்சன் சிங் என்பவரது செவ்வியையும் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பேட்டிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், அது சிங்கப்பூரின் நீதித்துறையின் பக்கசார்பின்மை, நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் அலுவலகம் கூறுகிறது.



ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக காவல்துறையினரால் கூறப்படுகின்ற குற்றவியல் அவதூறு புலனாய்வுகளுடன், நீதிமன்ற அவமரியாதை குறித்த குற்றச்சாட்டுக்களையும் இணைக்க சட்டமா அதிபர் அலுவலகம் விரும்புகிறது.

அந்தப் புத்தகம் தடை செய்யப்படவில்லை என்றும், ஆனால், அதனை வைத்திருக்காதீர்கள் என்று கடைக்காரர்களிடம் சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது என்றும் கடந்த வாரம் அரசாங்கம் பிபிசியிடம் கூறியிருந்தது.

கொலை, தேசத்துரோகம், போதை மருந்து கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது சிங்கப்பூரில் கட்டாயமானதாகும்.

குற்றங்களின் வீதத்தை குறைவாகப் பேணுவதற்கு அது மிகவும் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு குற்றவியல் அவதூறு சட்டம் பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இதேவேளை பிறிதொரு நிகழ்வாக சிங்கப்பூர் அரசாங்கம், உள்ளூர் படத்தயாரிப்பாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பற்றிய படத்தை தடை செய்துள்ளது.

அந்தப்படம் பொதுமக்களின் பார்வைக்கு உகந்ததல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது.

சிறிய ஆனால் செல்வந்த நாடான சிங்கப்பூரின் அரசாங்கம் தனது அரசியல் கட்டுப்பாட்டை கடுமைப்படுத்த சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பதற்கு இது தற்போது நிகழ்ந்துள்ள ஒரு புதிய உதாரணம் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

முன்னாள் அரசியல் தடுப்புக் கைதியான Lim Hock Siew அவர்கள் பற்றிய தனது படத்தை மார்ட்டின் சீஸ் அவர்கள் யூ டியூபில் இருந்து அகற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது.

தான் ஏன் நீதியற்ற முறையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டேன் என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் Lim Hock Siew அவர்கள் அந்த வீடியோவில் பகிரங்கமாகப் பேசுகிறார்.

அவரை சிங்கப்பூர் அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 20 வருடங்கள் தடுத்து வைத்திருந்தது.

கம்யூனிஸத்தை நாட்டில் இருந்து வேரறுக்கும் நடவடிக்கையாக அவர் தடுத்து வைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

அத்துடன் இந்தப்படம், அவரது தடுத்து வைப்புக் குறித்து திரித்து, தவறான தோற்றத்தைக் காட்டவிழைகிறது என்றும் அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

மார்ட்டின் சீஸ் அவர்களின் முன்னைய இரு படங்களும் கூட சிங்கப்பூர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தன.

Read more...

>> Monday, July 19, 2010


இராக் தற்கொலைத் தாக்குதல்

இராக் தாக்குதல்களில் பலர் பலி

இராக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவான சுனி ஆயுதக்குழுவான சாஹ்வாவின் உறுப்பினர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரு தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கிட்டதட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



பாக்தாதில் இராணுவ முகாம் ஒன்றில் சம்பளத்தை பெறுவதற்காக குழுமியிருந்தவர்களின் மத்தியில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் குறைந்தப்பட்சம் 43 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது தாக்குதல் இராக் மற்றும் சிரியாவுக்கு இடையேயான எல்லைப்பகுதியோரம் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சாஹ்வா அமைப்பினர் அல்கையிதாவுக்கு எதிராக திரும்பினர். அப்போது முதல் சாஹ்வாவின் தலைவர்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

Read more...


சர்வகட்சி கூட்டம்

'சர்வகட்சி தீர்மானங்களை வெளியிடுவோம்'

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் நடத்தப்பட்டுவந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட உடன்பாடுகளை வெளியிடபோவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாரான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.



சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தவிசாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண இணக்கப்பாடுகள் தொடர்பான தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளித்து நீண்டகாலமாகியும், அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளமையால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிசாம் காரியப்பர் கூறுகிறார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையை தாமும் குழுவின் உறுப்பினராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனும் திங்கட்கிழமை வெளியிடப் போவதாக தமிழோசையிடம் காரியப்பர் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளில் பல முழுமையாக இணங்கப்படாத போதிலும், சுமார் 48 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில், சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றி அனைத்துக்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாளர் பிபிசி தமிழோசைக்கு பிரத்தியேகமாக அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டார்.

Read more...


நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலா பிறந்தநாள்

நெல்சன் மண்டேலா இன்று ஞாயிற்றுகிழமை தனது 92வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த தினத்தை முதன்முறையாக நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்று உலகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர்.


அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு நெல்சன் மண்டேலா செய்த பங்களிப்புக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

இத்தினத்தை முன்னிட்டு மக்கள் சமுதாய பணிகளில் ஈடுபடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்குள் சிறிதளவாவது மண்டேலா இருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் காண்பிக்க முடியும் என மண்டேலாவின் மனைவி கிராக்கா மச்சேல் கூறியுள்ளார்.

Read more...


விபத்துப் பகுதியில் தீவிர மீட்புப்பணி

மேற்கு வங்க ரயில் விபத்தில் 60 பேர் பலி





இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டார்கள். 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
பிர்பும் மாவட்டத்தில் உள்ள செய்ன்தியா ரயில் நிலையத்தில், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அதே பாதையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மிக வேகமாக மோதியது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடம், மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 191 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பகல்பூரில் இருந்து ராஞ்சி சென்றுகொண்டிருந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில், நான்காவது நடைமேடையை ஒட்டிய ரயில் தடத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, சியால்டா செல்லும் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் அதே பாதையில் வந்து, வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் பின்புறம் மோதியது. வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளும் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் மிக மோசமாக சேதமடைந்தது.

உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய வேகத்தில், வனாஞ்சல் எர்ஸ்பிரஸின் ஒரு பெட்டி, ரயில் தடத்துக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இன்னொரு பெட்டியின் ஒரு பகுதி, மேம்பாலத்துக்கு மேல் தூக்கியெறியப்பட்டு, ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையில் விழுந்தது.

இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டதாக கிழக்கத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதில், உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் காப்பாளர் ஆகியோரும் உயிரிழந்தார்கள். 60 சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதிவேலை காரணமா?

அந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என கிழக்கத்திய ரயில்வேயின் பொது மேலாளர் வி.என். திரிபாதி தெரிவித்துள்ளார். `ரயில் மிக வேகமாக வந்திருக்கிறது. ஓட்டுநர் மிகத் திறமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்களுக்கே மிகக் குழப்பமாக இருக்கிறது’ என்றார் அவர்.

விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியும், கடந்த இரண்டு மாதங்களில் மேற்கு வங்கத்தில் இரண்டாவது ரயில் விபத்து நடந்திருக்கிறது. அந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது’’ என்றார் மமதா பானர்ஜி.

ரயில் நிலையத்தில் நிற்க வேண்டியிருந்தாலும், அந்த ரயில் மிகுந்த வேகத்தில் அங்கு வந்தது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில், 148 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு, மாவோயிஸ்டுகளின் சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

Read more...

>> Friday, July 16, 2010



மத மறுப்புக்கு மாலத்தீவில் இடமில்லை



மாலத்தீவில் துன்புறுத்தலால் நாத்திகர் தற்கொலையா?

மாலத்தீவுகளில் ஒருவர் நாத்திகராக இருந்தார் என்பதற்காக பழிவாங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் போலத் தோன்றுகிறது. 25 வயதான இஸ்மாயில் முகமது டிடி இஸ்லாத்தை கடைபிடிக்காத காரணத்தாலேயே இந்த நிலை அவருக்கு நேர்தது என்று கூறப்படுகிறது.
"தான் ஒரு நாத்திகர் என்று கூறி" வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சமும் கோரியிருந்ததை அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.

மாலத்தீவின் பிரஜைகள் அனைவரும் சுனி இன முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பது அந்நாட்டில் கட்டாயமான விதியாகும்.

இஸ்மாயில் முகமது டிடி அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் வேலைபார்த்து வந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை அவர் அங்கு தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.



மாலத்தீவு சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இடமில்லை எனவும் இஸ்மாயில் முகமது டிடி தமக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருந்தாகவும் அங்குள்ள "மினிவன் இணையம்" கூறுகிறது.

மத நம்பிக்கையை துறக்கும் தனது எண்ணத்தை, தனது சக ஊழியர்கள் பிரப்பிவிட்டனர் என்றும், நெருங்கிய நன்பர்கள் கூட தன்னை சந்திக்க விரும்பவில்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் இஸ்மாயில் தனது மின்னஞ்சலில் தெரிவித்திருந்தாக மினிவன் செய்தி இணையம் மேலும் கூறுகிறது.

நாட்டிலுள்ள யாரும் தனக்கு உதவ மாட்டார்கள் எனவும் அந்த மின்னஞ்சலில் அவர் தெரிவித்திருந்தாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு மத நம்பிக்கை இல்லை என்கிற விடயம் தொடர்பில் ஒரு விசாரணையை மேற்கொண்ட விமான நிலைய உயரதிகாரிகள், மேற்கொண்டு நடவடிக்கைக்காக இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

அந்த அறிக்கையில் அவர் வெளிப்படையாக கடவுளை நிந்தித்தார் என அவரது ஒரு சகா குற்றஞ்சாட்டியதாகவும் மேற்கோள்காட்டியுள்ளது.

மாலத்தீவுகளில் கடுமையான மதச்சட்டங்கள் நிலவினாலும், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவுக்கு அந்நாடு தேர்தெடுக்கப்பட்டது.

மாலத்தீவுகளில் சிறிய அளவில் இருந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான சிலர் தங்களது மதநம்பிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினாலும், அது வெளிப்படையான வகையில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...


இந்திய ரூபாயின் புதிய குறியீடு

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு



இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.

புதிய குறியீடு, தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை இன்று எடுத்த முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்தார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.

``இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கும் நிலையில், புதிய குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கும் உதவும்’’ என்றார் அமைச்சர் அம்பிகா சோனி.

புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது நாணயங்களில் அச்சிடப்படும் என்று தெரிவித்த அம்பிகா சோனி, அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்றும் கூறினார்.

புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினிப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், கணினியின் விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

இந்தப் புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. உதயகுமார், பல்வேறு போட்டியாளர்களைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் இறுதியாக உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Read more...

>> Saturday, July 10, 2010


தில்லியில் பெண்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது சகஜம்

பெண்களுக்கு பாலியல் தொல்லை



டில்லியில் வசிக்கும் பெண்களில் மூவரில் இருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் சிலர் பலவிதமான உடல்ரீதியான தொந்தரவுகளுக்கும் - கேலி கிண்டல், ஏச்சு போன்ற பிரச்சனைகளுக்கும் முகம்கொடுத்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்யும் பெண் தொழிலாளர்களும் இதனால் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

சுமார் ஐயாயிரம் பெண்களிடமும் சில ஆண்களிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இந்த கருத்தெடுப்பின்படி பெரும்பாலான பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரியவந்திருக்கிறது.

இதில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கடந்த ஒரு ஆண்டில் தாங்கள் வார்த்தைகளாலோ அல்லது உடல் ரீதியாகவோ பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

அவமான அனுபவம்

கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் வசித்துவரும் அமெரிக்கப் பெண் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றிக் கூறுகையில், "பலதடவை ஆண்கள் என்னுடைய பின்புறத்துலயும், உடலின் மற்ற இடங்களிள்ளயும் கைவெச்சு ஆபாசமான சேட்டைகள் செஞ்சிருக்காங்க" என்றார்.


ஒரு நாள் நான் மெட்ரோரயிலில் ஏறப்போற சமயம், மூணு அல்லது நாலு ஆம்பளைங்க ஒரே சமயத்தில என்னோட உடம்பின் வெவேறு பகுதிகள்ள கண்டபடி கை வெச்சி சேட்டை பண்ணாங்க. அது எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திச்சு.


டில்லியில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி ஒருவர்

மேலும் இவர்களில் ஐந்தில் நான்கு பேர் தாங்கள் ஆபாச வார்த்தைகளால் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

தாங்கள் தெருவில் நடந்து சென்றபோது தங்களை ஆண்கள் பின்தொடர்ந்ததாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இளவயது மற்றும் ஏழைப் பெண்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திப்பதாகவும் இதில் தெரியவந்திருக்கிறது.

சமீபகாலமாக பெண்களில் கணிசமானவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியிருப்பதாக இந்த கருத்தெடுப்பில் தெரியவந்திருந்தாலும், பாலியல் ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படும் விடயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஆர்வலர் கருத்து

பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதா சுந்தரராமன் குற்றம்சாட்டினார்.

ஆண்கள் பெண்களைக் கேலி செய்வதை சகித்துக்கொள்கிற ஒரு சமூக மனப்பான்மை இந்தியாவில் நீடிக்கவே செய்கிறது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

பெண்களை ஆண்களின் ஒரு போகப் பொருளாகக் காண்கிற ஒரு நிலை நீடிப்பதாகவும், சமத்துவமற்ற கண்ணோட்டம் இப்படியான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணம் என்றும் சுதா சுந்தரராமன் குறிப்பிட்டார்.

Read more...


ஆர்ப்பாட்டத்தில் பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது

ஆர்ப்பாட்டங்கள்: மேற்குலகம் கண்டனம்



இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை கெடுக்கும் செயல்" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்துக்கு செல்லும் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதும், ஐ.நா. பணியாளர்களை துன்புறுத்துவதும், மிரட்டுவதும், சர்வதேச நடைமுறைகளை மீறும் செயல்.


மேற்குலக நாடுகள்

ஐ.நா. மன்றத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசை தாங்கள் கோருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலுவலகம் மூடல்

இதனிடையே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் ஒன்றான வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

தவிர இலங்கையிலுள்ள தனது வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே அவர்களையும் ஆலோசனைகளுக்கான ஐ.நா.வின் தலைமைச் செயலர் நியூயார்க் அழைத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் போராட்டத்தை ஒட்டியே ஐக்கிய நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக வெளியான செய்தியை கொழும்பிலுள்ள ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மறுத்துள்ளது.

இலங்கையின் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வரும் அந்நாட்டுக்கான யு.என்.டி.பி அலுவலகம் மூடப்படவில்லை என்றும், ஆசிய பசபிக் பகுதிகளுக்கான பகுதிகளை கவனித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகமே மூடப்படுகிறது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

'ராஜினாமா செய்யத் தயார்'



அமைச்சர் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யவும் அவர் முன்வந்துள்ளார்.

ஆனால் அவரது பதவி விலகலை ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter