>> Thursday, May 13, 2010


பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரன்

புதிய ஆட்சியில் புதிய உறவு



ஐக்கிய ராஜியத்தின் புதிய பிரதமர் டேவிட் கேமரன், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதும் முதலில் பயணம் செய்த நாடு இந்தியா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியா வந்தபோது, அது வெற்றிப் பயணமாக வர்ணிக்கப்பட்டது.
அந்தப் பயணத்தின்போது, டேவின் கேமரன் பேசுகையில், உலகின் புவி ஈர்ப்பு விசை, ஐரோப்பா மற்றும் அட்லான்டிக்கில் இருந்து ஆசியாவை நோக்கிச் செல்லும் நிலையில், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் ஆகிய இரு நாடுகளும் புதிய உறவை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

இப்போது, இரு நாடுகளிலும் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், புதிய பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவுடன் நெருக்கமான உறவை வளர்க்கும் என்றும், குறிப்பாக பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஐக்கிய ராஜ்யமும் ஒன்று. அதேநேரத்தில், ஐக்கிய ராஜ்யத்தில் முதலீடு செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான அரசு, முக்கியப் பிரச்சினைகளில், அதாவது பருவநிலை மாற்றம், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றில் இந்தியாவுக்கு மிகக்குறைவான அழுத்தமே கொடுக்கும் என்று இந்தியாவிலுள்ள நோக்கர்கள் கருதுகிறார்கள்.

உறவில் நெருடல்


மன்கோகன் சிங்
அதே நேரத்தில், அவுட்சோர்ஸிங் என அழைக்கப்படும், பணிகளை வேறு நாடுகளுக்கு மாற்றுதல், குடியேற்றம் ஆகிய அம்சங்களில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக இந்தியாவில் பல கவலைகள் உள்ளன.

கன்சர்வேடிவ் கட்சியின்படி, குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், இந்திய தொழில்முறை நிபுணர்களும், மாணவர்களும் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறபடுகிறது.

மேலும், ஓய்வூதிய நிதியைப் பராமரித்தல் தொடர்பாக ஐக்கிய ராஜியத்தின் ஓய்வூதிய நிதி மேம்பாட்டுத் துறைக்கும் இந்திய தொழில் நிறுவனமான டாடாவுக்கும் ஏற்பட்டுள்ள 9 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப் போவதாகவும் கன்சர்வேடிவ் கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், டேவிட் கேமரனை வாழ்த்தி விரைவில் இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருநாட்டுப் பிரதமர்களும் சுமார் 10 நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, டேவிட் கேமரன் அலுவலகம் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter