>> Thursday, August 19, 2010
புத்தர் சாவிக்கொத்து-இருவருக்கு சிறை
புத்தர் சிலை
இலங்கையில் புத்தரின் உருவம் பொறித்த சாவிகொத்துகளை விற்றதன் மூலம் புத்த மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக கூறி இரண்டு பேருக்கு நீதிபதி ஒருவர் சிறை தண்டனை விதித்துள்ளார்.
அபுபக்கர் கலாம் மற்றும் துவான் ரஜாப்தீன் என்ற இந்த இருவரும் பொலிஸாரால் நகரத்தின் மையப்பகுதியான பெட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை விசாரித்த கொழும்பு தலைமை நீதிபதி, தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவின் அடிப்படையில் மதத்துக்கு புனிதமான பொருளை இவர்கள் அவமரியாதை செய்து விட்டார்கள் என்று கூறி ஒராண்டுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
இந்த தண்டனை இரண்டு ஆண்டு காலத்திற்கு பின்னர் தான் அமலுக்கு வரும். இவ்வாறான தீர்ப்புகள் இலங்கையில் அபூர்வம் தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புத்த துறவிகளின் அதிகரித்து வரும் அரசியல் சக்தியை தொடர்ந்து, புத்த மதம் தொடர்பான அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பதில் மிகவும் கெடுபிடி காணப்படுவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
இதே போக்கு இலங்கையின் மூன்றாவது பெரிய மதமான இஸ்லாத்திலையும் காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பல ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற போதிலும், நாட்டில் உள்ள நான்கு மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை பாராட்டியே வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment