>> Tuesday, August 17, 2010


"எயிட்ஸை போல புற்றுநோயை அணுகவேண்டும்"


மேற்குலகில் புற்றுநோய் சிகிச்ச்சையில் முன்னேற்றம்

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் மனிதர்கள் உயிரிழப்பதற்கான முக்கிய நோய்களில் ஒன்றாக விளங்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்துவதற் கு தேவையான உலகளாவிய உந்துசக்தி தேவை என்று அமெரிக்காவைச்சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் வேண்டு கோள் விடுத்திருக்கிறார்கள்.

லேன்செட் என்கிற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய் வறிக்கை ஒன்றில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்திரு க்கிறார்கள். அதாவது காப்புரிமை தேவைப்படாத பொது மருந் துகளை பயன்படுத்தினாலே பலவகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என்று இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஏழை நாடுகளில் புற்றுநோய் என்பது குணப்படுத்தமுடியாத நோய்களில் ஒன்றாகவே தொடரும் என்கிற பொதுவானதொரு அபிப்பிராயத்தை கேள்விக்குள்ளாக்கவேண்டிய நேரம் வந்திருப் பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற அடிப் படையற்ற வாதங்கள் கடந்த காலங்களில் எச் ஐ வி மற்றும் எயிட்ஸ் நோய்க்கு எதிராக முன்வைக்கப்பட்டதை சுட்டிக்காட் டும் அவர்கள் இந்த வாதத்தை எதிர்த்து முறியடிக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

உலக அளவில் புற்றுநோயால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். ஆனால் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக உலக அளவில் செலவிடப் படும் தொகையில் வெறும் ஐந்துசதவீதம் தான் வளர்ந்து வரும் நாடுகளால் செலவிடப்படுகிறது என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த அறிக்கையும், கோரிக்கையும் காலத்தின் தேவை கருதி வெளியிடப்பட்டதாக கூறுகிறார் சென்னையிலுள்ள புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையின் இயக்குநரும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் குறித்த ஆய்வு செய்து வருபவருமான சாந்தா அவர்கள்.

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு தேவைப்படும் நவீன தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் புதிய மருந்துகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் கூடுதல் நிதி உதவி பெரிய தடையாக இருப்பதாகவும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் புற்றுநோயை குணப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter