>> Tuesday, August 17, 2010
கச்சா எண்ணெயை எடுத்து செல்லும் குழாய்கள்
எண்ணெய் வயல்களை வாங்கியது வேதாந்தா
கனிம வளங்கள் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனமான வேதாந்தா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகளை கேன் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 9.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து வங்க முன்வந்துள்ளது.
கேன் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி நிறுவனமாகும்.
ஸ்காட்லாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்தான் ராஜஸ்தானில் பெரும் எண்ணை வளம் இருப்பதை கண்டறிந்தது. தற்போது அந்த எண்ணை வயல்களிலிருந்து நாள்தோரும் ஒரு லட்சம் பீப்பாய்களுக்கும் மேலான எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும் என்று தான் நம்புவதாக வேதாந்தா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 100 பெரும் நிறுவனங்களில் ஒன்றான வேதாந்தாவின் தலைவரான அனில் அகர்வால் இந்தியர்.
இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு பெருமளவில் வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. இந்த தேவை வருமாண்டுகளில் மேலும் பெருகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment