>> Thursday, August 12, 2010


ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு
ஜல்லிக்கட்டுக்கு தடை: ஜெய்ராம் ரமேஷ்
தமிழ்நாட்டில் கலாசார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் நிகழ்வைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மிருக வதைத் தடுப்பு தொடர்பாக நடந்த விவாதம் ஒன்றின்போது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.

பல மாநிலங்களில் காளைகளை அடக்கும் நிழ்வு ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாசாரமாகக் கருதப்படுகிறது எனஅமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு கலாசாரம் உள்ள நிலையில் அதை தடை செய்யக் கோரி தனது அமைச்சகம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதை முறைப்படுத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கூடாது என்று ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர் ஜெயராம் ரமேஷ், நவீன காலத்தில் பாரம்பரிய பழக்கங்கள் எல்லாவற்றையும் தொடர முடியாது என்றும், ஜல்லிக்கட்டும் விலங்குகளை வதை செய்யும் ஒரு நடைமுறைதான் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கு தமிழக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter