>> Wednesday, August 11, 2010


பிரகீத் எக்னலிகொட
காணாமல் போய் 200 நாட்கள்

இலங்கை ஊடகவியலாலர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவத்தைக் குறிக்க மௌன ஊர்வல ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்டது.
இவர் காணாமல் போய் 200 நாட்கள் ஆவதைக் குறிக்கும் வண்ணம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த மௌன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மையமாக இருந்தவர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொடா ஆவார். இரண்டு இளம் குழந்தைகளுக்கு தாயான இவர் துயரத்தில் இருக்கிறார்.

இலங்கையின் ஆட்சியாளர்களையும் அதிகாரம் படைத்தவர்களையும் விமர்சித்துவந்த கார்டூனிஸ்ட் மற்றும் செய்தியாளரான பிரகீத் எக்னலிகொட கடந்த ஜனவரி 24ம்தேதி காணாமல் போயிருந்தார்.

எக்னலிகொடா காணாமல் போய் 200 நாட்களும், ஒரு சுயாதீன ஒளிபரப்பு நிலையத்துக்குள் ஆயுதம் தாங்கிய குழு ஒன்று நுழைந்து குண்டுத் தாக்குதல் நடத்தி 11 நாட்களும் ஆன நிலையில், இது போன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை ஆட்சியாளர்கள் கைது செய்யவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது என ஊடக உரிமைக் குழுக்கள் கூறியிருக்கின்றன.


அரசியல் எதிரிகளுக்குத் தொல்லை தருவதில் அரசாங்கத்தினர் மிகத் திறமையானவர்கள். ஆனால் மனித உரிமைகளுக்கு குரல்கொடுப்பவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியவர்களைப் பிடிப்பது என்று வரும்போது, அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. ஏனென்றால் மிக உயர்ந்த மட்டத்திலிருந்தே இவர்களுக்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பளிக்கப்படுகிறது.


மங்கள சமரவீர

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அரசைக் கடுமையாகச் சாடினார்.

ஆனால் செய்தியாளர்களையும், பொது நலன் சார்ந்த செயற்பாட்டளர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் தாங்கள் தங்களால் இயன்றவற்றைச் செய்கிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இருந்தாலும் பிரகீத் எக்னலிகொட விஷயாத்தில் அவர்கள் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter