>> Monday, August 16, 2010



'பேச்சுவார்த்தை நடத்த தயார்'-மன்மோகன் சிங்


செங்கோட்டை சுதந்திர தின நிகழ்வுகள்
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைகளைக் கைவிட வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான வன்முறைகள் எவருக்கும் ஒருபோதும் நன்மையளிக்காது எனவும் ஒன்றிணைந்த இந்தியக் கட்டமைப்புக்குள்ளான பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா தனது 64 ஆவது சுதந்திரத்தின நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அண்மைய கொந்தளிப்பு நிலையை தனது சுதந்திர தின உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர், எந்தக் குழுவினரது பிரச்சனைகளையும் தீர்க்குமளவிற்கு இந்தியாவின் ஜனநாயகம் 'பெருந்தன்மையும் நெகிழ்வுப் போக்கும்' கொண்டது என கூறியுள்ளார்.

செங்கோட்டை சுதந்திர தின நிகழ்வில் மன்மோகன் சிங் ஆற்றிய 35 நிமிட உரையில், பாகிஸ்தானுடனான கருத்து வேற்றுமைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாகவும் ஆனால் அங்கிருந்து உருவாகும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மாவோயிஸ்டுகளுக்கும் அழைப்பு


இந்தியாவில் நக்சலைட்டுக்கள்
இதனிடையே, நக்சலைட்டுக்களை உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவால் என வர்ணித்த டாக்டர் மன்மோகன் சிங், பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோயிஸ்டுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

நக்சலைட்டுக்கள் வன்முறைகளைக் கைவிடவேண்டும் எனவும், பழங்குடியின பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் பலாபலன்களை அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் பிரதமர் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்டுக்கள் அரசின் சமூக பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter