>> Saturday, August 14, 2010
எம்.வீ. சன் சீ கப்பல்
கனடாவை அடைந்தது அகதிகள் கப்பல்
தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழ் அகதிகள் சுமார் ஐநூறு பேரை சுமந்து வருவதாகக் கருதப்படும் கப்பல் கனடிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கனடிய கடற்படைத் தளம் ஒன்றுக்கு பாதுகாப்பு படையினர் சூழ கொண்டுவரப்பட்டுள்ளது.
எம்.வீ. சன் சீ என்ற இந்தக் கப்பல் கனடியக் கரையோரத்தை எட்டுவதற்கு முன்பதாக கடலில் வைத்தே கனடிய கடற்படையைச் சேர்ந்த ஹெச்.எம்.சி.எஸ். வின்னிபெக் என்றக் கப்பல் இதனை இடைமறித்திருந்தது.
அந்தக் கப்பலில் 490 பேர் இருப்பதாக இந்தக் கப்பலுக்குள் நுழைந்து விசாரித்திருந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
கப்பல் தாய்லாந்திலிருந்து பயணித்ததாகவே அறியக்கிடைத்ததாகவும், சுமார் 90 நாட்களுக்கு மேல் கப்பல் பயணித்துள்ளதாகவும் கனடியன் தமிழ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கப்பலை அண்டிய பகுதிக்குச் செல்ல ஊடகங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment