>> Tuesday, May 4, 2010





திசைநாயகத்துக்கு பொதுமன்னிப்பு


திசைநாயகத்துக்கு பொதுமன்னிப்பு
இலங்கையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியாளர் ஜே.எஸ். திசைநாயகத்துக்கு இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இன வெறுப்பை தூண்டியமை மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவ நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திசைநாயகத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

நோர்த் ஈஸ்ரன் மந்த்லி என்னும் ஆங்கில இதழின் ஆசிரியரான திசசைநாயகம், பல தசாப்த காலமாக தொடர்ந்த பிரிவினைவாத போர் சிறுபான்மை தமிழர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து அதில் கட்டுரைகளையும் எழுதினார்.


திசைநாயகமும், அவரோடு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜசிதரனும்
உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் இந்த பொதுமன்னிப்பு அவருக்கு வழங்கப்படுவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

திசைநாயகத்துக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாக கூறி ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஜி எஸ் பி பிளஸ் என்னும் ஏற்றுமதி வரிச்சலுகையை பின்தேதியிட்டு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அந்த தடைகள் மீளப்பெறப்படுவதாயின், இலங்கை அரசு ஊடக சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter