>> Friday, May 14, 2010


ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும் சிறுதாவூர் மாளிகை


சிறுதாவூர் வீடு தலித் நிலத்தில்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள் பங்குதாரர்களாக உள்ள பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் சென்னையை அடுத்த சிறுதாவூரில் தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட அரசு நிலத்தில் பங்களா எழுப்பியிருக்கிறது என நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் கூறியிருக்கிறது.
ஆனால் அது ஆக்கிரமிப்பல்ல, முறைகேடாக வாங்கப்பட்ட நிலம் என்கிறது கமிஷன்.

சிறுதாவூரில் உள்ள பங்களாவில்தான் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுக்கச் செல்வார். அப்பகுதி அரசு நிலங்களையும் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவின் குடும்பத்தினரும் ஆக்கிரமித்திருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி, அந்நிலங்களை மீட்குமாறு வற்புறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

அப்புகார்கள் குறித்து விசாரிக்கவென ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் கமிஷன் ஒன்றை தமிழக அரசு நியமித்தது. மூன்றாண்டு விசாரணைக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது அறிக்கையினை அது சமர்ப்பித்தது.

813 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கை இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சிறுதாவூரில் 1967ம் ஆண்டில் 20 தலித் குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. அக்குடும்பங்கள் அவ்வாறு பெறப்பட்ட நிலங்களை 25 ஆண்டுகளுக்கு எவருக்கும் விற்கக்கூடாது என்பதே விதி. ஆனால் 1983லேயே அந்நிலங்கள் விற்கப்பட்டுவிட்டன.

அத்தலித் மக்களிடமிருந்து வாங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்திலும், மேலும் அரசின் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்தும், சித்ரா என்பவருக்குச் சொந்தமான பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் பங்களா கட்டியுள்ளது.

இந்த பங்களா ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதல்ல. ஆனால் பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த நிலங்களை 2005 ஆம் ஆண்டு வாங்கியதாக அந்த நிறுவனம் கூறுவது பொய், 1994லிருந்தே அந்நிலங்களின் பெரும்பகுதி ரிசார்ட்ஸ் வசமே இருந்திருக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. 2005ல் இறுதியாக வாங்கி முடித்தபோது பல்வேறு விதிகள் மீறப்பட்டிருகின்றன, பத்திரப்பதிவிற்காகவென்றே தூத்துக்குடியிலிருந்து சில நாட்களிலேயே ஓய்வுபெறவிருந்த் ஒரு தாசில்தார் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு அதிவேகமாக பதிவு நடந்தேறியிருக்கிறது என்கிறது கமிஷன்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter