>> Tuesday, May 4, 2010
மும்பையில் இடம் பெற்ற தாக்குதலில் ஈடுபட்டிருந்த அஜ்மல் கஸாப்
கஸாப் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் இடம் பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தானிய பிரஜையான அஜ்மல் அமிர் கஸாப் குற்றவாளி என்று மும்பையிலுள்ள நீதிமன்றம் ஒன்று இன்று(3.5.10) தீர்ப்பளித்துள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 86 குற்றச்சாட்டுகளில் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது போர் தொடுத்தது உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
மும்பையில் 18 மாதங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியான 160 பேரில் 70 பேர் கொலை செய்யப்பட்டதற்கு கஸாப் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி என்று கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள், பலியானவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்
குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள கசாபுக்கு என்ன தண்டனை என்பது இந்த வாரத்தின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும்.
இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகளில் கஸாப் மட்டுமே உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யக் கூடாது என்கிற செய்தியை இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு வெளிப்படுத்துகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment