>> Friday, May 14, 2010

மலேசிய மனித உரிமைகள்


மலேசியாவில் சட்டவிரோத குடிவரவுத் தொழிலாளர்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலுக்கு ஏகமனதாக தெரிவாகும் 4 ஆசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
அவர்கள் இவ்வாறு அந்தக் கவுன்சிலுக்கு இரண்டாவது முறையாக தெரிவாகின்றனர். ஆனால், இவ்வாறு தெரிவாவதற்கு முன்னதாக மலேசியா தனது மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

அங்கிருக்கும் அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவை கூறுகின்றன.

ஆட்கடத்தலுக்கான அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டதை அடுத்து தனது மனித உரிமைகள் குறித்த அந்தஸ்தை மேம்படுத்த மலேசியா மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது.

குடிவரவு தொழிலாளர்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கவும், ஆட்கடத்தலை தடுக்கவுமான தனது திட்டங்களை, வரவுள்ள தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னதாகவே மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், மலேசியா முதல் தடவையாக மனித உரிமைகள் கவுன்சிலில் இடத்தை பிடிப்பதற்கு 2006 இல் முயற்சித்த போது பல முக்கியமான உறுதிமொழிகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றில் எதனையும் அது நிறைவேற்றவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

விசாரணை இன்றி எவரையும் தடுத்து வைக்க வழி செய்யும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை மனித உரிமைக் குழுக்கள் கேட்கின்றன.

மலேசியாவின் தொழிலாளர் சக்தியில் கணிசமான பங்களிப்பைச் செய்யும் சட்டவிரோதமாக குடியேறும் தொழிலாளர்களை மலேசியா நடத்தும் விதம் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு நாட்டில் போதுமான தங்கும் அனுமதி இல்லாத காரணத்தால் அவர்கள் துஸ்பிரயோகத்துக்கும், சுரண்டலுக்கும் இலகுவில் ஆளாகும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

அந்த சட்டவிரோத குடியேறி தொழிலாளர்கள் போதுமான தங்கும் அனுமதியற்று பிடிபட்டால், அபராதம், சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி என்பனபோன்ற குற்றவியல் தண்டனைகளுக்கு அவர்கள் உள்ளாக நேரிடும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter