>> Monday, May 10, 2010
2008 ஆம் ஆண்டில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்
''வீதிகளில் நிற்கின்றோம்''
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் பல சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் வசித்து வந்த மக்கள் செல்லும் வழியின்றி வீதிகளில் நின்று கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகள் பல சட்டவிரோத குடியிருப்புகள் என அறிவிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் இடித்து அகற்றப்பட்டுள்ளன.
பல வருடங்களாக தாம் வசித்து வந்த இந்த வீடுகளுக்கு தாங்கள் வரிசெலுத்திவந்துள்ளதாகவும், ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமைப்பத்திரங்கள் தம்மிடம் இருந்த போதிலும் தாம் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போதுமான கால அவகாசம் வழங்கப்படாமல் தாம் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தமக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்கள் வசிப்பதற்கு உகந்தவை அல்லவெனவும் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த மக்களின் பிரச்சனை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கான மாற்றிடங்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக இம்முறை ஆளுங்கட்சி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டவரும் முன்னாள் கொழும்பு மாநாகர பிரதி மேயராக இருந்தவருமான அசாத் சாலி தமிழோசையிடம் கூறினார்.
0 comments:
Post a Comment