>> Thursday, May 20, 2010


லண்டனிலுள்ள இலங்கையின் துணைத்தூதர் அம்சா

இலங்கையின் மீது போர் குற்றச்சாட்டு


விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அரச படையினர் போர் குற்றங்களை புரிந்ததாக சானல் 4 தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம்,இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி மாதங்களில், ராணுவத்தினர், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு உத்தரவு வந்தது என்று பெயர் குறிப்பிடப்படாத ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்தியது.

சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த ராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலிபரப்பப்பபடவில்லை, அவரது உருவமும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்கு பதிலாக வேறு ஒரு குரல் ஒலிக்கவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்த ராணுவ அதிகாரி, தங்களுக்கு போரின் இறுதிக்கட்டங்களில், சரணடையும் எந்த ஒரு புலிகள் இயக்க பிரமுகர்கள் அல்லது உறுப்பினர்களை வைத்துக்கொள்வது பிரச்சனையாக இருக்கும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்றுவிடுமாறு கட்டளைகள் இருந்ததாகக் கூறினார்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரனின் இளைய மகன், 13 வயது பாலச்சந்திரன், அவரது மெய்க்காப்பாளர்களுடன் இலங்கை படைகளிடம் சரணடைந்தபோது, அவரது தந்தை எங்கே என்று விசாரிக்கப்பட்ட பின்னர், சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் இந்த ராணுவ அதிகாரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கடந்த ஆண்டு போரின் இறுதிக்கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலவும் ஒளிபரப்பப்பட்டன. இந்த புகைப்படங்களில் பொதுமக்கள் குண்டுத்தாக்குதலில் சிக்கி துன்புறுவது, கொல்லப்படுவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றன.

இந்த சானல் 4 தொலைக்காட்சிதான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில். நிர்வாணப்படுத்தப்பட்ட, நிராயுதபாணியான நபர்கள் சிலர், பின்னால் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தினர் போல் தோன்றும் சீருடை அணிந்த படையினரால் துப்பாக்கியால் நெருக்கமான தூரத்தில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது.

ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் பெற்று வசிக்கும் பத்திரிகையாளர்கள் அமைப்பால் விநியோகிக்கப்பட்ட இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை இலங்கை அரசு போலியான ஒன்று என்று மறுத்தாலும், ஐ.நா மன்ற சிறப்பு தூதர் பிலிப் ஆல்ஸ்டனால் இது உண்மையான வீடியோதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை



சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர்தான, இந்தக் குற்றச்சாட்டு குறித்து லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கருத்து கேட்டது என்று துணைத் தூதர் அம்சா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால், அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து கருத்து கூறியிருக்க முடியும் என்றும், ஆனால் அப்படியான அவகாசம் தங்களுக்கு வழங்கப்ப்பட்வில்லை என்பதை அம்சா சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், போர் காலத்தின் இறுதி நாட்களின் விடுதலைப் புலிகளால் தமிழ் பொது மக்கள் மனிதக் கேடையங்களாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய துணைத்தூதர் அம்சா, அவர்களிடமிருந்து மக்களிடமிருந்து விடுவிக்கவே அரச படைகள் மனித நேயப் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறினார்.

எனினும் இது போன்ற குற்றசசாட்டுக்களையும் விசாரிக்கவே ஜனாதிபதியால் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter