>> Tuesday, May 11, 2010
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் ராஜிநாமா
"பதவி விலகுவேன்"-பிரவுன்
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இன்னும் சில மாதங்களில் தொழிற்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், தான் ஒரு ஸ்திரமான அரசை அமைக்கத் தேவையான காலத்துக்கு அதிகமாக தனது பதவியில் இருக்க விரும்பவில்லை என்றும் கூறிய பிரவுன், தொழிற்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஒன்றை நடத்தும் வழிமுறையை தொடங்குமாறு தொழிற்கட்சியை கோரப்போவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தனது தொழிற்கட்சி, ஏற்கனவே கன்சர்வேடிவ் கட்சியினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும், லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்போவதாகவும் கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்
0 comments:
Post a Comment