>> Friday, May 21, 2010
ஜெனரல் சரத் ஃபொன்சேகா
"போர் குற்றங்கள் இல்லை"- ஃபொன்சேகா
ஜெனரல் சரத் ஃபொன்சேகா
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது அரச தரப்பு போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.
அரச தரப்பில் போர் குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்பதை தான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரை தானே திட்டமிட்டு, நடத்தி, மேற்பார்வை செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
புலிகளுடனான போரை தாங்கள் எப்படி நடத்தினோம் என்பது குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கினார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.
வழக்கமான பாணியில் இல்லாமல், மாறுபட்ட வகையில் இந்தப் போர் நடத்தப்பட்டதாகக் கூறும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா, போரின் முழுக்கட்டுபாடும் தன்னிடம் இருந்ததாகவும், கட்டளைளை நேரடியாக தானே பிறப்பித்ததாகவும் மேலும் தெரிவிக்கிறார்.
அப்படியான சூழலில் போர் குற்றங்கள் ஏதும் இடம் பெற்றதாக தான் அறியவில்லை என்றும் வலியுறுத்துகிறார். எனினும் அப்படியாக ஏதாவது தனது பார்வைக்கு வந்தால் அதன் தான் மறைக்கவோ அல்லது மறுக்கவோ மாட்டேன் என்றும் குறிப்பிடுகிறார்.
பல குற்றசாட்டுகள் "பொத்தாம் பொதுவானவை"
அண்மையில் இண்டனர் நேஷணல் கிரைஸஸ் குரூப், சில குறிப்பிட்ட சம்பவங்களில் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுகே நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று கூறியுள்ளதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
போர் இடம் பெற்ற காலத்திலும் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றும், இது போன்றவை எல்லாம் "வெறும் அறிக்கைகளாகவும், கருத்துக்களாகவுமே இருக்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.
போர் குற்றங்கள் போன்ற ஒரு செயலை சகித்துக் கொள்ளவும் மாட்டேன், ஆதரிக்கவும் மாட்டேன்
அரச படைகள் பொதுமக்களை தாக்கும் நோக்கிலோ, அல்லது கொல்லும் நோக்கிலோ ஷெல் வீச்சுக்கள் எதையும் நடத்தவில்லை என்பதை தன்னால் திட்டவிட்டமாக கூறமுடியும் எனவும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கை இராணுவமே மூன்று லட்சம் பொதுமக்களை காப்பாற்றியது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும் ஏதாவது குறிப்பிட்ட சம்பவம் சுட்டிக்காட்டப்படுமானால் அது குறித்து விசாரிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment