>> Monday, May 10, 2010
விமல் வீரவன்ச
விமல் வீரவன்ச மாங்குளம் விஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திற்கு விஜயம் செய்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அலுவலகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த புதிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் கலந்து கொண்ட முதலாவது வைபவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது என்றும், இதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பல்வேறு அமைச்சுக்களின் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment