>> Monday, July 22, 2013

"கட்டாய தற்காலிக கிராமப் பணி மருத்துவர்களுக்கு எதிரானது"



இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்று முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கிராமப் புறங்களில் ஒரு வருடத்துக்கு தற்காலிக பணிசெய்வதை கட்டாயமாக்குவது என்கிற ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
தற்காலிகமாக மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் செயல் நீடித்தால், மருத்துவர்களுக்கு நிரந்தர அரசு வேலை என்பது இல்லாமல் போய்விடும் என தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் பயின்றவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்வதை தவிர்க்கிறார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று முன்வைக்கப்படும் வாதத்தை அவர் மறுத்தார்.
மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் முதலில் கிராமப் பகுதிகளிலேயே வேலை வழங்கப்படுகிறது என்றும், நிரந்தர வேலைக்காக கிராமப் புறங்களுக்கு செல்வதை மருத்துவம் பயின்றவர்கள் தவிர்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
நிரந்தர வேலைக்கான வாய்ப்பு வரும்போது மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றுவதை விரும்பவே செய்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்

தவிர தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவராக ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்போது, தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று டாக்டர் பிரவீன் குற்றம்சாட்டினார்.
தாதிகள் போன்றோர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் பயிற்சி மருத்துவர் செய்ய வேண்டி வருவதால், ஒரு மருத்துவராக தாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது என்று அவர் தெரிவித்தார்.
அளவுக்கதிமான வேலைப்பளுவால், நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சேவையின் தரம் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் பிரவீன் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter