>> Tuesday, May 14, 2013


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 மே, 2013 - 08:09 ஜிஎம்டி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஐபிஎல் தொடரிலேயே பல போட்டிகள் நடந்துள்ளன
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஐபிஎல் தொடரிலேயே பல போட்டிகள் நடந்துள்ளன
சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புகழ்பெற்ற சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தில் இன்றிரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 12 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சீல் வைத்தது.ஆனால், அங்கே புதிதாகக் கட்டப்பட்ட மூன்று பார்வையாளர் பகுதிகளை (கேலரிகளை) பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது. இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் விளையாட்டரங்கத்தைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தின் கட்டிட வலிமை குறித்து 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப்பெறப்படுவதாக தமிழக அரசின் பொதுப்பணித் துறை நேற்று அறிவித்தது.
இதனையடுத்து மூன்று கேலரிகளுக்கும் மாநகராட்சி சீல்வைத்தபோது, காவல்துறை அனுமதி மறுக்கக்கூடும் என்ற நிலை உருவானதால் இன்று போட்டி நடக்குமா என்பது கேள்விக்குறியாகியிருந்தது.
சென்னைப் பெருநகரக் குழுமத்தின் அனுமதியின்றியே புதிய கட்டிடப் பணிகளுக்கான நற்சான்றிதழ் முன்னர் வழங்கப்பட்டுவிட்டதாகவும், இனி கிரிக்கெட் சங்கம் புதிதாக விண்ணப்பித்து விளையாட்டரங்கத்தினைப் பயன்படுத்தமுடியும் என்றும் பொதுப்பணித் துறை கூறியது.
பார்வையாளர் வரிசைகளுக்கு இடப்பட்ட பெயர்களிலேயே ஏதோ குழப்பம் இருப்பதாகவும் ஆனால், கட்டிமுடிக்கப்பட்ட காலரிகளின் வலிமை குறித்து அஞ்சும்படியாக ஏதுமில்லை, இதுவரை இந்தப் பருவத்து ஐபிஎல் தொடரிலேயே 7 போட்டிகள் சிக்கல் ஏதுமில்லாமல் நடத்தப்பட்டுவிட்டதாகவும் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter