>> Friday, January 20, 2012

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை நிர்வகிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்த நிலையிலேயே, தாங்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு விடயத்தைக் கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


'வடக்கு கிழக்கு காணி சுற்றறிக்கை வாபஸ்':சுமந்திரன்

வடக்கு கிழக்கு காணி தொடர்பான சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
தொடர்புடைய விடயங்கள்மீள்குடியேற்றம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை மீண்டும் பதிவுசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, காலக்கெடுவும் விதித்திருந்த குறித்த சுற்றறிக்கை சட்ட முரணானது என்பதை சட்டமா அதிபரும் காணி அமைச்சும் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் சுற்றறிக்கையை மீளப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்த சட்டமாஅதிபர், புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட இருப்பதாக கூறியுள்ளார்.

புதிய சுற்றறிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்திவிட்டே அதனை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருப்பதாக சுமந்திரன் கூறினார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தலையீட்டுடன் நடந்துவருகின்ற குடியேற்றங்களுக்கு சட்டவடிவம் கொடுக்கவே அரசாங்கம் இந்த சுற்றறிக்கையை பயன்படுத்த முயற்சித்தது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter