>> Thursday, March 4, 2010

பிரபல சாமியார் பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாகக் கூறும் வீடியோ
தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள அவரது ஆஸ்ரமம் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா அவர்கள், பெங்களூரில் தனது தலைமை ஆஸ்ரமத்தை கொண்டிருக்கிறார். அங்கு மாத்திரமன்றி 33 நாடுகளில் அவரது மன்றங்கள் இருப்பதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று காண்பித்துள்ளது. இதனால் அவரது ஆச்சிரமம் தாக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் ஹரித்துவார் சென்றதாக அவரது ஆஸ்ரம வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த வீடியோ போலியானது என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இவை குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
நேபாள செய்தியாளர்கள் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்களில் ஒரு பகுதியினர்நேபாள செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி அங்குள்ள செய்தியாளர்கள் காத்மாண்டுவில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
நேபாளத்தின் ஒரு பிராந்திய பத்திரிகை மற்றும் வானொலியின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
சிறிய குழுவான அந்த செய்தியாளர்கள், பதாதைகளை தாங்கிய வண்ணம், நாடெங்கும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்தை கோரினார்கள்.இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஆப்கானிய சிறார்களின் நீண்ட ஆபத்தான பயணம்- பெட்டகம்
ஆப்கானிய சிறார்கள்பயங்கரவாதத்தில் இருந்து உயிர் தப்பி பிரிட்டிஷ் வரவிழையும் ஆப்கானிய சிறார்கள், அதற்காக பெரும் ஆபத்து மிகுந்த நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
அந்த பயணத்தின் நடுவில் பல சிறார் குடியேற்றக்காரர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
ஆயினும், பிரிட்டனுக்கு வரும் அவர்களது தஞ்சக் கோரிக்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதால், அவர்களது நிலைமை இங்கு நிச்சயமற்ற ஒன்றாகவே இருக்கிறது.
ஆகவே இப்படியான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை கோருகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter