>> Thursday, September 2, 2010
தன்னை வேலைக்கு அமர்த்திய சவுதி வீட்டார் தனது உடலில் ஆணியை அறைந்து சித்திரவதை செய்ததாக ஆரியவதி என்ற சிங்களப்பெண் கூறும் குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக இல்லை என சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொறுப்பான சவுதி அரச துறையின் தலைவரான, சாட் அல் படா ஆரியவதியின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, மிரட்டும் நோக்கில் கூறப்படுபவை என்று கூறியுள்ளார்.
ஆரியவதி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக சம்மந்தப்பட்ட சவுதி குடும்பத்தினரின் அண்டை வீட்டாரிடமிருந்து தமக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் சவுதியில் இருந்து நாடு திரும்பிய ஆரியவதியில் உடலில் இருந்து 13 ஆணிகளையும் ஊசிகளையும் கடந்த வாரம்தான் மருத்துவர்கள்
எடுத்திருந்தனர்.
தற்போது கம்புருபிட்டிய மருத்துவவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற உடல் நலம் தேரி வரும் எல் ஜி ஆரியவதி தான் முன்பு கூறிய குற்றச்சாட்டுக்களை பிபிசியிடம் மீண்டும் தெரிவித்தார்.
ஆரியவதியின் உடலில் ஆணிகள் இருந்திருந்தால் விமான நிலையத்தில் உள்ள மெடல் டிடக்டர்கள் அதை கண்டுபிடித்திருக்கும் என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆணிகளை காட்டும் எக்ஸ்ரே படம்
ஆணிகளை காட்டும் எக்ஸ்ரே படம்
இது குறித்து பேசிய ஆரியவதி, தன்னை இரவு இரண்டு மணிக்கு விமான நிலையத்துக்கு அழைத்துச் வந்ததாகக் கூறினார். தான் அங்கே பாதுகாப்பு சோதனைகளுக்காக வைக்கப்பட்டிருந்த கருவிகளை கடந்து சென்றபோது எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும் ஆனாலும் யாரும் தன்னை கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.
இது பற்றி சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரை தொடர்பு கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் இது வரை பலனளிக்கவில்லை.
0 comments:
Post a Comment