>> Tuesday, May 14, 2013


நவாஸ் ஷெரிப் வெற்றியை புகழ்ந்து தள்ளியுள்ள இந்திய நாளிதழ்கள்

நவாஸ் ஷெரிப் இந்தியா வரவேண்டும்: மன்மோகன் சிங்
நவாஸ் ஷெரிப் இந்தியா வரவேண்டும்: மன்மோகன் சிங்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பத்திரிகைகள் புகழ்ந்துதள்ளியுள்ளன.
இந்தியாவுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு நவாஸ் ஷெரிப்பின் வெற்றி நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளிதழ்கள் கூறியுள்ளன.

மன்மோகன் வாழ்த்து
நவாஸ் ஷெரிப் இருநாட்டு உறவுகள் நெருக்கமடைவதற்கு தனது கடுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஷெரிப்புக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமென்றும் மன்மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
'பாகிஸ்தானின் நடந்துமுடிந்த தேர்தல் மாற்றத்துக்கானது. இராணுவ நிறுவனங்களிலிருந்து தேசிய நிகழ்ச்சி நிரலை மீட்டெடுப்பதற்கான தருணம்' என்று ஹிந்து நாளிதழ் கூறியுள்ளது.
அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகளில் ஷெரிப் ஈடுபட்டுவருகிறார்
அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகளில் ஷெரிப் ஈடுபட்டுவருகிறார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 'ஷெரிப் மீண்டும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுக்களை தொடர்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்துள்ளது.
அதேபோல், 'பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளையிட்டு மகிழ்ச்சியடைவதற்கு இந்தியாவுக்கு உண்மையான காரணங்கள் உள்ளன' என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.
'ஷெரிப்பின் ஆட்சி இந்தியாவுக்கு நல்லது' என்று டைம்ஸ் ஆப் இந்தியா கூறியுள்ளது.
2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தாக்குதல்களின் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த பெப்ரவரியிலேயே அமைதிப் பேச்சுக்கள் மீணடும் தொடங்கியிருந்தன.
ஆனால் காஷ்மீரில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகளும் அண்மைக் காலங்களில் கடுமையாக மோசமடைந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவாஸின் கட்சிக்கு ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மைப் பலம் இலகுவாகக் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.
அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது தடவையாகவும் அவர் தனது கட்சிப் பிரமுகர்களுடன் 'மந்திராலோசனை' நடத்திவருகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter