>> Wednesday, May 15, 2013


"விண்வெளிப் பாடகர்" பூமி திரும்பினார்

"விண்வெளிப் பாடகர்" பூமி திரும்பினார்
சமீப ஆண்டுகளில் மிகப்பிரபலமான விண்வெளி வீரர் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார்.
கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார்.
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர்.
பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ் ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையில், கிடாரைப் பயன்படுத்திப் பாடிய காட்சியின் வீடியோ பதிவையும், தனது சமூக ஊடக தளத்தில் பிரசுரித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter