>> Friday, May 31, 2013
குரங்குகளுக்கும் விரக்தி உண்டு !
மனித இனத்துக்கு மிகவும் நெருங்கியவையாகக் கருதப்படும் சிம்பான்ஸி மற்றும் போனபோ இனக் குரங்குகள், மனிதர்களைப் போலவே, தங்களது முடிவுகள் பலனளிக்காவிட்டால், உணர்ச்சிவயப்படும் இயல்புள்ளவை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த மனிதக் குரங்குகள், தங்களது யுக்திகள் தோல்வியில் முடிந்தால், தங்களைத் தாங்களே பிறாண்டிக்கொள்வதன் மூலமோ அல்லது உரத்துக் குரலெழுப்புவதன் மூலமோ தங்களது கோபாவேசத்தைக் காட்டுகின்றன என்று ட்யூக் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆப்ரிக்க வன விலங்கு சரணாலயங்களில் இருக்கும் இந்த குரங்குகளுக்காக, முடிவுகள் எடுக்கும் திறன் அடிப்படையில் அமைந்த இரு விளையாட்டுகளை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
இந்த இரு விளையாட்டுகளில் ஒன்று , பொறுமையை சோதிக்கும் அடிப்படையில் அமைந்தது. மற்றொன்று ஆபத்தான முடிவுகளை எடுக்கும் திறனை சோதிக்கும் அடிப்படையிலானது.
இந்த இரு விளையாட்டுகளில் ஒன்று , பொறுமையை சோதிக்கும் அடிப்படையில் அமைந்தது. மற்றொன்று ஆபத்தான முடிவுகளை எடுக்கும் திறனை சோதிக்கும் அடிப்படையிலானது.
இந்த விளையாட்டுகளில் கலந்துகொண்ட குரங்குகளின் உணர்வுகள் , விரக்தி, வருத்தம் போன்ற, மனித உணர்வுகளுக்கு மிகவும் அடிப்படையாக இருக்கும் உணர்வுகளை ஒத்ததாகவே இருந்தன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானவை என்று இனிமேல் கூற முடியாது.
0 comments:
Post a Comment