>> Tuesday, May 14, 2013

பிரிட்டனில் ஏலத்துக்கு வரும் மகாத்மா காந்தி நினைவுப் பொருட்கள்

மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்திருக்கும் அரிதான பத்திரிகை படம்
மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்திருக்கும் அரிதான பத்திரிகை படம்
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரியபல நினைவுப் பொருட்கள் இம்மாத இறுதியில் பிரிட்டனில் ஏலத்துக்கு வருகின்றன.
காந்தி பயன்படுத்திய பொருட்களுடன் இன்னும் பல முக்கிய வரலாற்று ஆவணங்களும் ஏலத்து விடப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த முல்லொக்ஸ் ஏல விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல், 1932-இல் ' காந்தியை ஒரு பயங்கரவாதி' என்று அறிவிக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆவணமொன்றும் இந்த ஏலத்தில் விற்கப்படவுள்ளது.காந்தி அணிந்த ஒரு சோடி காலணி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ( இந்திய பணத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய்க்கு மேல்) ஏலத்துக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறே காந்தியும் நேருவும் பிரிட்டனால் 1942-இல் கைது செய்யப்பட்டதைக் காட்டும் படமொன்றும் காந்தி கோட் சூட் அணிந்திருப்பதைக் காட்டும் மிக அரிதான பத்திரிகை படம் ஒன்றும் விற்பனைக்கு வந்துள்ளன.
மே 21-ம் திகதி நடக்கவுள்ள இந்த ஏல விற்பனையில் 300க்கும் அதிகமான பொருட்கள் விற்கப்படவுள்ளன.
இதில் 1916-ம் ஆண்டில் ஏற்பட்ட ஈஸ்டர் கிளர்ச்சியின்போது வெளியிடப்பட்ட அயர்லாந்து சுதந்திரப் பிரகடனத்தின் ஒரேயொரு அச்சுப் பிரதியும் ஏலத்துக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter