>> Monday, May 27, 2013

ஐ பி எல் போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு


மனைவியுடன் ஆடுகளத்தை வலம் வந்து ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறார் சச்சின்
மனைவியுடன் ஆடுகளத்தை வலம் வந்து ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறார் சச்சின்
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
"எனக்கு நாற்பது வயதாகிவிட்டது. இதுதான் நான் விலகுவதற்கு சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஆட்டத்தில் இருந்து விலகுவதென்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்." என டெண்டுல்கர் கூறினார்.

கொல்கத்தாவில் ஞாயிறு இரவு நடந்த இறுதியாட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.ஆறாம் ஆண்டு ஐ பி எல் போட்டிகளின் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை வீழ்த்தி டெண்டுல்கர் அங்கம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று கொஞ்ச நேரத்தில் டெண்டுல்கர் தனது முடிவை அறிவித்தார்.
அந்த அணியினர் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டம் வெல்வதென்பது இதுவே முதல்முறை.
இந்த ஆண்டோடு ஐ பி எல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என சென்ற ஆண்டே தான் தீர்மானித்திருந்ததாக டெண்டுல்கர் தெரிவித்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து சென்ற ஆண்டின் இறுதியில் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருந்தார்.
உலகிலேயே மிக அதிகமான டெஸ்ட் ரன்கள், ஒருநாள் ஆட்ட ரன்கள், மிக அதிகமான சதங்கள் போன்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் டெண்டுல்கர் ஆவார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter