>> Tuesday, May 14, 2013


'என்கோவ் வைரஸ் மனிதர்களிடையே தொற்றுகிறது'

இதுவரை 33 நோயாளிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது
இதுவரை 33 நோயாளிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது
புதிதாக கண்டறியப்பட்ட நோவல் கொரோனாவைரஸ் (NCoV) என்ற புதிய வகை வைரஸ் நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இன்னொரு நபரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற இந்த வைரஸினால் பீடிக்கப்பட்ட இரண்டாவது நபரை பிரான்ஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

என்கோவ் (NCoV)
 வைரஸ் நிமோனியாவையும் சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது.இந்த வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து, ஐரோப்பாவிலும் மத்தியகிழக்கிலும் 33 பேர் இவ்வாறான வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதும் அவர்களில் 18 பேர் உயிரிழந்துவிட்டதையும் புதிய தகவல்கள் கூறுகின்றன.
சவுதி அரேபியாவிலும் ஜோர்தானிலும் இவ்வாறான நோயாளிகள் கண்டறியப்பட்டிருந்தார்கள். பின்னர் ஜேர்மனியிலும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸிலும்கூட இந்த வைரஸ் பரவியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
2013- மே மாதத்திலிருந்து, சவுதி அரேபியாவில் மட்டும் என்கோவ் வைரஸ் தொற்றினால் 15 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 9 பேருக்கு அண்மையிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜோர்தான், கட்டார், பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் தலா இரண்டு நோயாளிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு நோயாளியும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 24 முதல் 94 வயது வரையான ஆண்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter