>> Wednesday, May 15, 2013
சச்சின் டெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை இந்திய தங்க ஆபரணக் கம்பனியொன்று வெளியிட்டுள்ளது.
10 கிராம் கொண்ட இந்த 24 காரட் தங்க நாணயத்தை சச்சின் டெண்டுல்கரே மும்பை நகரில் வெளியிட்டு வைத்துள்ளார்.
இந்திய பணத்தில் ஒவ்வொன்றும் 34 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படவுள்ள ஒரு லட்சம் நாணயங்களை இந்தக் கம்பனி விற்கவுள்ளது.
40 வயதான டெண்டுல்கருக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களைக் குவித்துள்ள முதல் வீரரான அவர் தான் டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.
இந்துக்களின் அட்சய திரிதியை நாளை முன்னிட்டே இந்த தங்க நாணயத்தை நகைக்கடை வெளியிட்டுள்ளது.
'எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பொன்னான பல சந்தர்ப்பங்கள் வந்துள்ளன. ஆனால் இது சற்று வித்தியாசமான அனுபவம்' என்று நாணய வெளியீட்டு விழாவில் சச்சின் கூறினார்.
0 comments:
Post a Comment