>> Monday, May 27, 2013

"தமிழ் மண்ணில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி இல்லை"


ஏ.கே. அந்தோணி

இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார்.
ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழகத்தில் அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
ஆயினும் கூட இந்தியாவின் மற்ற பகுதிகளில் இன்னமும் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டே வருகிறது.
தற்போதும்கூட செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி, இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகத்தான் கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter