ஆர்ஜன்டீனாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சிறையில் மரணம்
ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா அவர்கள் தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார்.
இயற்கை மரணம் எய்தியதாகக் கூறப்படுகின்ற ஜெனரல் விடெலா அவர்கள், 1976இல் ஆர்ஜன்டீனாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.
''டேர்ட்டி வோர்'' காலகட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற தனது ஆட்சிக்காலத்தில் செய்த மனித உரிமை மீறல்களுக்காக அவர் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்தார்.
1983 ஆம் ஆண்டுவரை தொடர்ந்த அந்த இராணுவ ஆட்சியில் முப்பதினாயிரம் வரையிலான இடதுசாரி செயற்பாட்டாளர்களும், அரச எதிர்ப்பாளர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.
0 comments:
Post a Comment