>> Monday, November 16, 2009

மக்கள் வணக்கம்!
பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!

Monday, November 9, 2009
பத்து நிமிடக்கதைகள் குறும்படப்போட்டி


கதை இருக்கிறது. கரு இருக்கிறது. அதை உருவாக்குவதற்க்கான தொழில் நுட்ப வசதியும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இளம் இயக்குனரா நீங்கள்? இதோ உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திஇருக்கிறது நமது மக்கள் தொலைக்காட்சி. பத்து நிமிடத்திற்குள் ஒரு படத்தை எடுக்க முடியுமா ? முடியும் என்றால் இன்றே சிந்தனைகளை முடுக்கிவிடுங்கள் . கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம் . அது உங்கள் விருப்பம் . நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களை பார்த்து மதிப்பிட பிரபல இயக்குனர்கள் தயாராக இருக்கிறார்கள் . அவர்கள் மட்டுமல்ல ஒளிபரப்பாகும் படங்களைப்பார்த்து அதனை தரப்படுத்த பார்வையாளர்களும் தயாராக இருக்கிறார்கள். பிறது என்ன . சிறந்த குறும்படங்களுக்கான பரிசுபெறும் பட்டியலில் உங்கள் படங்களும் இடம்பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது . சிறந்த படங்களுக்கு நிறைவான பரிசுகள் காத்திருக்கின்றன. எனவே காலத்தை கடத்தாமல் இன்றே களத்தில் இறங்குங்கள். பத்து நிமிடத்திற்குள் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பரிசை தட்டிச்செல்லுங்கள்.

உங்கள் குறும்படம் கீழே தரப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் .

1. கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம்.

2 . குறும்படம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .

3 இறுதி படைப்பு டி வி காம் DVCAMவடிவில் இருத்தல் வேண்டும் .

4.தொலைக்காட்சிக்கு அனுப்பும் படைப்பு திருப்பி அனுப்பப்படமாட்டாது . எனவே தாங்கள் ஒரு படியை வைத்து கொண்டு அனுப்புதல் வேண்டும் .

5.தங்கள் படைப்புகளை தணிக்கை செய்யும் உரிமை தொலைக்காட்சிக்கு உண்டு .

6.உங்கள் படைப்பு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 20-12 2009

தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
பத்து நிமிடக்கதைகள் - குறும்படப்போட்டி ,
மக்கள் தொலைக்காட்சி ,
12-16 சுப்பாராவ் நிழற்சாலை முதல் தெரு ,
கல்லுரிச் சாலை ,
சென்னை -600006 .
தங்கள் முயற்சி வெற்றி பெற மக்கள் தொலைக்காட்சி வாழ்த்துகிறது .












Posted by மக்கள் குழாம் at 10:22 PM 0 comments
Sunday, September 6, 2009
மக்கள் தொலைக்காட்சி நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ....,


Posted by மக்கள் குழாம் at 11:02 PM 2 comments
Thursday, May 14, 2009
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல்
இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை ஒளிபரப்பியதால் மக்கள் தொலைக்காட்சியை தகர்க்கப்போவதாக
மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலையை விளக்கும்
படக்காட்சிகளை உடனே நிறுத்துமாறு நள்ளிரவில் காவல்துறையினர் வற்புறுத்தினர்.

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை குறித்த குறுந்தகடுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இலங்கைத்தமிழர்களின் உண்மை நிலை
குறித்த காட்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சிறிது நேரத்திலேயே தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஜாபர் ஜாலி , திருவல்லிக்கேணி
இணை ஆணையர் கணேச மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் அவலம் குறித்த காட்சிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தினர். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே இலங்கைத்தமிழர் அவலநிலையை ஒளிபரப்பி வருவதாக மக்கள் தொலைக்காட்சி செய்திப்பிரிவினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் இலங்கைத் தமிழர் அவலநிலை குறித்த ஒளிபரப்பை உடனே நிறுத்தாவிட்டால் அலுவலகத்திற்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.
இலங்கைத் தமிழர்களின் அவலக் காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியவுடன் சென்னை நகரிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்தொடர்வண்டி இயக்கம் அரை மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. பலமணி நேரம் சென்னை நகரமே இருளில் மூழ்கியது. பின்னர் மின்சாரம் வந்தபோதும் மக்கள் தொலைக்காட்சி வரவில்லையே என ஏராளமான அழைப்புகள் அலுவலகத்திற்கு வந்தன.
Posted by மக்கள் குழாம் at 4:41 AM 8 comments
Saturday, March 21, 2009
பேலத் ஆப் சொலிசர்


Posted by மக்கள் குழாம் at 4:09 AM 6 comments
Wednesday, March 4, 2009
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்




மார்ச் 8 - மகளிர் நாள் அன்று மக்கள் தொலைக்காட்சி பெண்களை மையமாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்குகிறது.




காலை பெண்கள் நாகசுரம் வாசிக்க இசையோடு தொடங்குகிறது மக்கள் தொலைக்காட்சியின் மகளிர் நாள் நிகழ்ச்சிகள். பெண்களுக்கு தமிழில் வந்து கொண்டிருக்கும் அவள் விகடன், சினேகிதி, பெண்ணே நீ, மங்கையர் மலர் முதலான பெண்கள் பத்திரிக்கைகளை ஆய்வு பார்வையோடு நோக்கும் பெண்கள் இதழ்கள் ஒரு பார்வை, பெண்களின் பெருமைகளை பேசும் பெண்கள் கவியரங்கம் 'பெண்மை போற்றுதும்', மகளிர் நாள் சிறப்பையும் மகளிர் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் நேரலை நிகழ்ச்சி, தங்கள் சொந்த முயர்சியால் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற பெண்களின் வாழ்கையை பதிவு செய்யும் பெண்ணால் முடியும் , குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் என்ன பாடுபடுதுகின்றது என்பதை சித்தரிக்கும் ஈரானிய திரைப்படம் லைலா,


பெண்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்லூரி கொண்டாட்டம்.




துணை நடிகைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்யும் கறுப்பு வெள்ளை என்று பல நிகழ்ச்சிகள் மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகின்றன.




ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் இருக்கலாம் .
Posted by மக்கள் குழாம் at 11:14 PM 3 comments
Friday, February 20, 2009
காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்குரைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தாக்கினர். இந்நிகழ்வை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேதுராமன் , ஜோதிமணி ஆகியோர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் . செய்தியாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த செய்தியாளர்கள் இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .


காவல் துறையினரின் இந்த வெறித்தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன . ஒளிப்பதிவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது . மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்குரைஞர்களும் படுகாயம் அடைந்தனர் .


Posted by மக்கள் குழாம் at 3:02 AM 8 comments
Posted by மக்கள் குழாம் at 1:43 AM 0 comments
Older Posts Subscribe to: Posts (Atom) Makkal TV
http://makkal.tv/
Blog Archive
▼ 2009 (8)
▼ November (1)
பத்து நிமிடக்கதைகள் குறும்படப்போட்டி
► September (1)
மக்கள் தொலைக்காட்சி நான்காம் ஆண்டில் அடி எடுத்து வ...
► May (1)
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல்
► March (2)
பேலத் ஆப் சொலிசர்
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
► February (3)
காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்
மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை
► 2008 (9)
► December (1)
ஈழம் - நேற்றும் இன்றும் .டிசம்பர் 15 ,2008 முதல் ....
► September (6)
மூன்றாம் ஆண்டு சிறப்பு மலர் - 2008
தலைவா - ஆகஸ்ட் 22 முதல் ..,
மணிச்செய்திகள் - ஆகஸ்ட் 22 முதல் ...,
முத்தமிழ் மணத்த மூன்றாம் ஆண்டு விழா.....,
மூன்றாம் ஆண்டு விழா
► August (2)
முத்தமிழே மூச்சாக...தொடங்குகிறது மூன்றாமாண்டு!
முதல் பூ...
About Me

மக்கள் குழாம்
View my complete profile

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter