>> Monday, November 16, 2009

இலங்கை தேர்தல் குறித்து பொருத்த நேரத்தில் அறிவிக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பொருத்தமான தருணத்தில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்த தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத தமது அரசாங்கம் இராணுவத்தையும் நாட்டையும் பிளவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்காது எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்டுள்ள ஆளும் பிரதான கட்சியின் இந்த மாநாட்டில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருடகாலம் இந்த வாரத்துடன் பூர்த்தியடையும் நிலையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வேளையிலும் ஜனாதிபதி தேர்தலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



--------------------------------------------------------------------------------


இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்கள் அபகரிக்கப்படுவதாக புகார்


மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்களை அத்து மீறி அபகரிப்பது தொடர்பாக வக்கியல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிசாரால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்துகின்றார்

இது தொடர்பாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான சிவில் அதிகாரியான பட்டிப்பளை பிரதேச செயலாளர் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் அரச காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தான் ஜனாதிபதியிடம் புகார் செய்ததையடுத்து இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகம் அரசாங்க அதிபர்களிடம் கோரியுள்ளது என்றும், மேற்படி விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச செயலாளர்களிடம் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மீள்குடியேற்றபட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து தரவில்லை - தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தர்


இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே போருக்கு பிறகு மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான இரா சம்பந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

முகாம்களை விட்டு வெளியே வரும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகவும், குறிப்பாக மக்களுக்கு வீடுகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணங்களில் வலுக்கட்டாயமாக வெளி ஆட்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter