மீள்குடியேற்றத்திற்கு மேலதிகமான மக்களை அனுப்ப நடவடிக்கை
>> Monday, October 26, 2009
அரச அதிகாரிகள் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு இரண்டாம் தொகுதியாக ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது
இலங்கை இராணுவம் இராணுவத்தினர் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை அரசு மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்
ஆஸ்திரேலிய பசுமை கட்சி தஞ்சம் கோருவது அதிகரிப்பு இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது. இலங்கையின் கிழக்கே சந்தேக படகில் சோதனை மட்டக்களப்பில் சந்தேக படகு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரம் சட்ட விரோத ஆட் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்று கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சனிக்கிழ மை மாலை மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் அங்கிருந்த படகை சோதனையிட்ட போது ஒரு தொகுதி மருந்துப் பொருட் கள், தண்ணீர் போத்தல்கள், எரிபொருள் நிரப்பப்பட்ட கொள் கலன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் அரிசி, கடலை பிஸ்கட் உட்பட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த படகில் கண்டெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட படகில் வெளிநாட்டு பயணமொன்றின் நிமித் தம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் பயணம் செய்திருக்க லாம் என பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் தமது விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது பற்றிய தகவல் களை தங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட படகில் சுமார் 18 முதல் 20 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என தாம் கருதுவதாகவும் குறித்த படகு தொடர்பாகவும் அதில் பயணித்தவர்கள் தொடர்பாகவும் விசாரனைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
1 comments:
Good.
Post a Comment